உடல் எடையை குறைக்கும் போட்டியை துபாய் நகர சபை நடத்தியது. அதில் வெற்றி பெறுபவர்களுக்கு தங்கம் பரிசளிக்கப்படும் என அறிவித்து இருந்தது. அதை தொடர்ந்து உடல் எடையை குறைக்கும் போட்டியில் பலர் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் கலந்து கொண்ட 2648 நபர்களுள் 27 வயது அகமது இப்ராகீம் அல் ஷேக் என்பவர் முதல் பரிசு பெற்றார்.

போட்டியின் துவக்கத்தில், 146.7 கிலோ எடை இருந்த அகமது இப்ராகீம் போட்டியின் முடிவில் 26 கிலோ எடை குறைத்திருந்தார். இப்போட்டியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த நபர்கள் முறையே 23 மற்றும் 22 கிலோ எடையை குறைத்திருந்தனர்.

இந்த போட்டியில் அதிக எடை குறைத்து முதல் பரிசை வென்ற அகமது இப்ராகீமிற்கு 63 கிராம் தங்கம் பரிசாக அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply