shadow

இந்த வார ராசிபலன்.

weekly rasipalanமேஷம்
எங்கும் எதிலும் புரட்சியை விரும்புபவர்களே! உங்கள் பாக்யாதிபதி குருபகவான் 5-ம் வீட்டில் நீடிப்பதால் நினைத்த காரியம் முடியும். பணவரவு அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பெரியோர் ஆதரவு, சித்தர் ஆசீர்வாதம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். பூர்வீக சொத்து கைக்கு வரும். ராகுவும் 5-ல் நிற்பதால் அவ்வப்போது பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் பொறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இருந்தால் நன்றாக இருக்குமே என நினைப்பீர்கள். அங்கு, இங்கு புரட்டி ஏதாவது ஒரு வீடோ, மனையோ வாங்கி விட வேண்டுமென முயற்சிப்பீர்கள். சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. சொந்த-பந்தங்கள் தேடி வந்துப் பேசுவார்கள். சூரியன் 2-ல் நிற்பதால் பேச்சில் தடுமாற்றம், கண், காது வலி வந்துப் போகும். கேது லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் வெளிநாட்டிலிருப்பவர், வேற்றுமதத்வர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். கன்னிப் பெண்களே! காதல் கைக்கூடும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் உங்கள் மனம் எதையே தேடிக் கொண்டிருக்கும். பழைய கசப்புகளை இப்போது நினைத்து டென்ஷனாகாதீர்கள். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். வேலையாட்கள் உங்களிடமிருந்து தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். சக ஊழியர்களின் கடின உழைப்பால் நிர்வாகத்தின் லாபம் உயரும். கலைத்துறையினரே! வசதி, வாய்ப்புகள் பெருகும். எதிர்பார்ப்புகளில் சில நிறைவேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 1, 4, 5 அதிஷ்ட எண்கள்: 4, 6 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் அதிஷ்ட திசை: வடக்கு

ரிஷபம்
சோர்ந்திடாமல், சுமைகளை சுமப்பவர்களே! ராசிநாதன் சுக்ரன் ராசியிலேயே ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். அழகு, இளமைக் கூடும். எதிர்பார்த்த தொகை வராவிட்டாலும் எதிர்பாராத வகையில் பணம் வரும். மனோ பலம் அதிகரிக்கும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். கண்டகச் சனி தொடர்வதால் முன்கோபம் வரும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகத்தை தவிர்க்கப்பாருங்கள். இனந்தெரியாத கவலைகள் புரட்டும். 4-ல் குருவும், ராகுவும் தொடர்வதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். யூரினரி இன்பெக்ஷன், தூக்கமின்மை வந்துப் போகும். வெளிக் காற்று வாங்குவது நல்லது. தாயாரின் ஆரோக்யம் பாதிக்கும். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். பாகப்பிரிவினை விஷயத்தில் கவனமாக இருங்கள். அடுத்தடுத்த வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். க ன்னிப் பெண்களே! நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த தோழியை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் வரும். வேலையாட்கள், வாடிக்கையாளர்களுடன் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். கலைத்துறையினரே! யதார்த்தமான உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். சமயோஜித புத்தியுடன் நடந்துக் கொள்ள வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 30, 3, 5 அதிஷ்ட எண்கள்: 3, 9 அதிஷ்ட நிறங்கள்: இளம்சிவப்பு, ப்ரவுன் அதிஷ்ட திசை: கிழக்கு

மிதுனம்
சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து அதற்கேற்ப பேசுபவர்களே! செவ்வாய் 6-ல் நிற்பதால் உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். முன்பணம் தந்து முடிக்காமல் இருந்த வீடு, மனையை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். புது வேலை அமையும். உங்கள் ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். புதியவரின் நட்பால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். சுக்ரன் 12-ல் மறைந்திருப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். வாகனம் வாங்குவீர்கள். நீண்ட காலமாக செல்ல நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சூரியன் 12-ல் மறைந்திருப்பதால் மனஇறுக்கம், வீண் டென்ஷன் வந்துப் போகும். அரசாங்க அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். ராகு வலுவாக இருப்பதால் வேற்றுமொழி, இனத்தவர்களால் உதவிகள் கிடைக்கும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். கன்னிப் பெண்களே! தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். வாடிக்கையாளர்களிடம் நற்பெயரை சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். சக ஊழியர்கள் உதவுவார்கள். கலைத்துறையினரே! அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்திலிருந்து புது வாய்ப்புகள் வரும். எதிர்ப்புகளை கடக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 2, 4, 5 அதிஷ்ட எண்கள்: 5, 8 அதிஷ்ட நிறங்கள்: நீலம், ஆரஞ்சு அதிஷ்ட திசை: தென்மேற்கு

கடகம்
ஆளுமைத் திறன் அதிகம் கொண்ட நீங்கள், அரவணைத்துப் போவதிலும் வல்லவர்கள். சூரியனும், சுக்ரனும் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். அரசாங்க அதிகாரிகளின் தொடர்பு கிடைக்கும். வழக்கில் திருப்பம் ஏற்படும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். பதவி, பொறுப்புகள் தேடி வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். வங்கி லோன் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். புது வண்டி வாங்குவீர்கள். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். புது வேலை அமையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். மனைவிவழியில் நல்ல செய்தி வரும். உங்களை கிள்ளுக் கீரையாக நினைத்தவர்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுப்பீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் யதார்த்தமாகப் பேசிக் கவருவீர்கள். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளாலும், நண்பர்கள், உறவினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். சனி 5-ல் நீடிப்பதால் பிள்ளைகளை எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர்க்க சிலரின் சிபாரிசை நாடுவீர்கள். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் அவ்வப்போது உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். இனந்தெரியாத பயம் வந்துப் போகும். கன்னிப் பெண்களே! தள்ளிப் போன திருமணம் கூடி வரும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவன புகழ் கூடும். வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். கலைத்துறையினரே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அனைவராலும் மதிக்கப்படும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 1, 2, 5 அதிஷ்ட எண்கள்: 1, 4 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, சில்வர்கிரே அதிஷ்ட திசை: வடகிழக்கு

சிம்மம்
எதிர்ப்புகள், ஏமாற்றங்களுக்கு அஞ்சாதவர்களே! ராசிநாதன் சூரியன் 10-ல் கேந்திரபலம் பெற்று நிற்பதுடன், சுக்ரனும் 10-ம் இடத்தில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் உங்கள் செயலில் வேகம் கூடும். பரபரப்பான முடிவுகள் எடுப்பீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். புதிய டிசைனில் நகை வாங்குவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். பழைய உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். புது நட்பு மலரும். ராசிக்குள் குருவும், ராகுவும் தொடர்ந்துக் கொண்டிருப்பதால் சில நேரங்களில் ஏமாற்றங்களை உணருவீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு காசோலை தருவது நல்லது. வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். அர்த்தாஷ்டமச்சனி தொடர்வதால் அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். கை, கால், மூட்டு, முதுகு வலி வந்துப் போகும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள். கன்னிப் பெண்களே! பெற்றோர் பாசமழைப் பொழிவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். தொல்லை தந்த வேலையாட்களை மாற்றுவீர்கள். பங்குதாரர்களிடம் கவனமாகப் பழகுங்கள். உத்யோகத்தில் காலம் நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். கலைத்துறையினரே! பெரிய நிறுவனங்களின் அழைப்பு உங்களை தேடி வரும். இங்கிமதமான பேச்சால் சாதிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 30, 4, 6 அதிஷ்ட எண்கள்: 5, 8 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ் அதிஷ்ட திசை: மேற்கு

கன்னி
எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் நீங்கள், மறப்போம், மன்னிப்போம் என இருப்பவர்கள். புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உறவினர் வீட்டு கல்யாணத்தை திறம்பட எடுத்து நடத்துவீர்கள். நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். கேது 6-ல் நிற்பதால் கல்யாணம், கிரகப் பிரவேசம் என வீடு களைக்கட்டும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். கோவில் கும்பாபிஷேகத்திற்கு உதவுவீர்கள். அயல்நாட்டிலிருப்பவர்களால் நன்மை உண்டு. என்றாலும் சூரியன் 9-ம் வீட்டில் நிற்பதால் தந்தைக்கு வீண் டென்ஷன், மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். 12-ல் ராகுவும், குருவும் மறைந்திருப்பதால் அடி வயிற்றில் வலி, கனவுத் தொல்லை வந்துப் போகும். வருங்காலம் குறித்த கவலைகள் வரக்கூடும். 3-ல் சனியும், செவ்வாயும் நிற்பதால் திடீர் யோகம் உண்டாகும். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். புது சொத்து வாங்குவீர்கள். கன்னிப் பெண்களே! காதலும் இனிக்கும், கல்வியும் இனிக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்கள் திறமையை மூத்த அதிகாரி பரிசோதிப்பார். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் ஆதாயமடைவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 30, 1, 3 அதிஷ்ட எண்கள்: 2, 7 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளம்சிவப்பு அதிஷ்ட திசை: வடமேற்கு

துலாம்
தொலைதூரச் சிந்தனை உடைய நீங்கள், இங்கிதமாகப் பேசுபவர்கள். பாக்யாதிபதி புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் அனுபவ அறிவால் முன்னேறுவீர்கள். வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். புது வேலைக் கிடைக்கும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துக் கொள்வார்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தந்தைவழியில் இருந்த மோதல்கள் விலகும். குருவும், ராகுவும் லாப வீட்டில் வலுவாக நீடிப்பதால் பழைய மனையை விற்று உங்கள் ரசனைக் கேற்ப வீடு வாங்குவீர்கள். உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். வேற்றுமதத்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். மனைவிவழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புது பதவி, பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சுக்ரனும், சூரியனும் 8-ல் நிற்பதால் திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். பணம் வாங்கித் தரும் விஷயத்தில் குறுக்கே நிற்க வேண்டாம். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். பாதச் சனி தொடர்வதால் பேச்சில் கவனம் தேவை. சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். கன்னிப் பெண்களே! தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். வியாபாரம் தழைக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பை பெறுவீர்கள். உழைப்பால் உயரும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 2, 4, 5 அதிஷ்ட எண்கள்: 1, 7 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், மெரூண் அதிஷ்ட திசை: தென்கிழக்கு

விருச்சிகம்
மனதில் பட்டதை பளிச்சென்று பேசும் நீங்கள், பழைய சம்பவங்களை மறக்க மாட்டீர்கள். 7-ல் சுக்ரன் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் உங்களின் நிர்வாகத் திறமைக் கூடும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். திடீர் பணவரவு உண்டு. வழக்கு சாதகமாகும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளை அவர்கள் விரும்பிய கல்வி ஆடை, ஆபரணம் சேரும். சிறுக சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியிலாவது ஒரு கால் கிரவுண்டு வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள். 7-ல் சூரியனும் இருப்பதால் மனைவிக்கு மாதவிடாய் கோளாறு, வேலைச்சுமை வந்துச் செல்லும். 2-ந் தேதி வரை புதன் 6-ல் மறைந்திருப்பதால் செலவுகள் துரத்தும். சொந்த-பந்தங்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். ராசிக்குள் சனியும், செவ்வாயும் நிற்பதால் தயக்கம், தடுமாற்றம், நிம்மதியின்மை, முன்கோபம், வயிற்றுப் புண், யூரினரி இன்பெக்ஷன் வந்துச் செல்லும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லி ஆறுதல் தேடாமல் தெரிந்த வகையில் தியானம் செய்வது நல்லது. கன்னிப் பெண்களே! புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்களுடன் மோதல்கள் வெடிக்கும். உத்யோகத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சக ஊழியர்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம். கலைத்துறையினரே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். இழுபறி நிலைமாறி ஏற்றம் பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 2, 4, 5 அதிஷ்ட எண்கள்: 3, 5 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், வெள்ளை அதிஷ்ட திசை: தெற்கு

தனுசு
கொள்கை கோட்பாடுகளை விட்டுக் கொடுக்காதவர்களே! கேது 3-ம் இடத்திலும், சூரியன் 6-ம் வீட்டிலும் நிற்பதால் பெரிய திட்டங்கள் நிறைவேறும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம் பலவீனத்தை அறிவீர்கள். வெளிநாட்டிலிருப்பவர்களால் திடீர் திருப்பம் ஏற்படும். வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். புதன் 2-ந் தேதி வரை 5-ல் அமர்ந்திருப்பதால் பிள்ளைகளால் மதிப்புக் கூடும். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். உறவினர், நண்பர்கள் ஆதரவாக செயல்படத் தொடங்குவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். சுக்ரன் 6-ல் மறைந்திருப்பதால் சளித் தொந்தரவு, காய்ச்சல், தொண்டை வலி வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள் சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். குடி நீர் குழாய் பழுது வந்துப் போகும். குரு 9-ம் வீட்டிலேயே தொடர்வதால் சொத்து வாங்குவது, விற்பது சாதகமாக அமையும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். 12-ல் சனியும், செவ்வாயும் மறைந்திருப்பதால் மறைமுக எதிர்ப்புகள், எதையோ இழந்ததைப் போல் ஒரு வித கவலைகள், வீண் சந்தேகம் வந்துச் செல்லும். கன்னிப் பெண்களே! பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பாரட்டும்படி நடந்து கொள்வீர்கள். சம்பளப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளுக்கு வேறொருவர் உரிமை கொண்டாடுவார். துணிவே துணை என்று நினைக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 1, 3, 5 அதிஷ்ட எண்கள்: 6, 9 அதிஷ்ட நிறங்கள்: பழுப்பு, க்ரீம் வெள்ளை அதிஷ்ட திசை: வடமேற்கு

மகரம்
மனசாட்சிக்கு மாறாக எதையும் செய்யாதவர்களே! சனியும், செவ்வாயும் லாப வீட்டிலேயே வலுவாக தொடர்வதால் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களின் நட்பு கிடைக்கும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள். சகோதரிக்கு திருமணம் முடியும். எங்குச் சென்றாலும் முதல் மரியாதைக் கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சுக்ரன் 5-ம் இடத்திலேயே ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு வெளிநாட்டில் வேலைக் கிடைக்கும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். ஆனால் 5-ல் சூரியனும் நிற்பதால் பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் கடினமாக உழைத்தால் நல்லது என நினைப்பீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மாத்திரையும் உட்கொள்ள வேண்டாம். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் உறவினர், நண்பர்கள் உங்களுடைய புது முயற்சிகளை ஆதரிப்பார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் வீண் விரையம், ஏமாற்றம், அலைச்சல், அடுக்கடுக்காக செலவுகள் இருந்துக் கொண்டிருக்கும். எதிலும் அவசரப்பட வேண்டாம். இடம், பொருள், ஏவலறிந்துப் பேசுவது நல்லது. கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்களை அனுபவ அறிவால் சரி செய்வீர்கள். எதிர்பார்த்த லாபம் வரும். வேலையாட்களிடம் கண்டிப்பாக இருங்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். கலைத்துறையினரே! விமர்சனங்களை தாண்டி முன்னேறுவீர்கள். சவால்களில் வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 4, 5, 3 அதிஷ்ட எண்கள்: 3, 9 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், ஆலிவ்பச்சை அதிஷ்ட திசை: கிழக்கு

கும்பம்
எங்கும், எதிலும் ஒற்றுமையை விரும்புபவர்களே! புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய எண்ணங்கள் தோன்றும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். பிரபலங்களின் உதவியுடன் சில விஷயங்களை சாதித்துக் காட்டுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். எதிர்பார்த்த பட்ஜெட்டில் வீடு, மனை அமையும். ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் மாற்றுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். செவ்வாய் 10-ல் நிற்பதால் வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்பொழுது நிறைவேறும். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சூரியன் 4-ல் நிற்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டே இருக்கும். மனைவிக்கு மாதவிடாய் கோளாறு வந்தச் செல்லும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். ராசிக்குள் கேதுவும், 7-ல் ராகுவும் தொடர்வதால் உடல் நலத்தில் கவனம் தேவை. சின்ன சின்ன உடற்பயிற்சி, நடைப்பயிற்சி தினசரி மேற்கொள்வது நல்லது. மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் புதுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். கடையை விரிவுபடுத்துவது சம்பந்தமாக நெருக்கமானவர்களிடம் ஆலோசனை செய்வீர்கள். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். கலைத்துறையினரே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். தொடர் முயற்சியால் சாதிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 30, 2, 3 அதிஷ்ட எண்கள்: 4, 7 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள் அதிஷ்ட திசை: தென்மேற்கு

மீனம்
விவாதம் என வந்து விட்டால் வெளுத்து வாங்குபவர்களே! 3-ல் சூரியன் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு வேலை அமையும். கௌரவப் பதவிகள் தேடி வரும். வழக்கில் திருப்பம் ஏற்படும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். சுக்ரனும் 3-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் எதிலும் ஈடுபாடு வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். சிலர் வீடு மாறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். செவ்வாய் 9-ம் வீட்டிலேயே தொடர்வதால் எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பழைய இடத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். குரு 6-ம் வீட்டில் நிற்பதால் அவ்வப்போது அலைச்சலும், டென்ஷனும் இருக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். வேலையாட்கள் மதிப்பார்கள். புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியிடம் நற்பெயர் எடுக்க கொஞ்சம் போராட வேண்டி வரும். உங்களை எப்பொழுதும் எதிரியாக நினைத்த சக ஊழியர்கள் இனி வலிய வந்து நட்புறவாடுவார்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள். சாதிப்பவர்களின் பட்டியலில் இடம் பிடிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 2, 4, 5 அதிஷ்ட எண்கள்: 1, 6 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், ஊதா அதிஷ்ட திசை: கிழக்கு

Leave a Reply