shadow

weekly rasipalanமேஷம் 

எதிர்நீச்சல் போடுபவர்களே! சூரியன் 3-ம் வீட்டில் அமர்வதால் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். மேல்மட்ட அதிகாரிகள் உதவுவார்கள். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். திடீர் பணவரவு உண்டு. வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். லோன் கிடைக்கும். புது வேலைக் கிடைக்கும். குரு 5-ம் வீட்டில் நீடிப்பதால் பிள்ளைகளின் பிடிவாத குணம் மாறும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பூர்வீக சொத்தை புதுப்பிப்பீர்கள். மாமியார், நாத்தனார் புகழ்வார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். நவீன ரக சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். வேற்றுமதத்தை சேர்ந்தவர்களால் ஆதாயமடைவீர்கள். தோல் நோய் விலகும். ஆனால் 7-ல் செவ்வாய் வக்ரமாகி அமர்வதால் உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். மனைவிக்கு வேலைச்சுமை, முதுகு மற்றும் மூட்டு வலி வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடத்தில் ஏற்பர். கன்னிப்பெண்களே! கசந்த காதல் இனிக்கும். பெற்றோர் உங்களின் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். நினைத்ததை முடித்துக் காட்டும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 22, 24, 26 அதிஷ்ட எண்கள்: 4, 9 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை அதிஷ்ட திசை: வடமேற்கு

ரிஷபம்
முன் வைத்த காலை பின் வைக்காதவர்களே! புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் எதிர்பார்ப்புகள் எளிதாக முடியும். வேலைகளை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புது வேலை அமையும். வாகனத்தை சரி செய்வீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். உறவினர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பூர்வீக சொத்து பங்கை கேட்டு வாங்குவீர்கள். ராகு, கேது மற்றும் சனியின் போக்கு உங்களுக்கு சாதகமாக இல்லாததால் இனந்தெரியாத கவலைகள், ஏமாற்றம், பழைய கடனை நினைத்த அச்சம், வீண் பழி, தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். கன்னிப் பெண்களே! முடிவெடுப்பதில் அவசரம் வேண்டாம். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகள் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 24, 25, 26 அதிஷ்ட எண்கள்: 3, 8 அதிஷ்ட நிறங்கள்: சில்வர்கிரே, ரோஸ் அதிஷ்ட திசை: கிழக்கு

மிதுனம்
முற்போக்குவாதிகளே! 20-ந் தேதி முதல் ராசிநாதன் புதன் ராசியிலேயே ஆட்சிப் பெற்று அமர்வதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அழகு, ஆரோக்யம் கூடும். வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உங்கள் ரசனைக் கேற்ற வீடு, வாகனம் அமையும். ஃப்ரிட்ஜ், மைக்ரோ ஓவன் வாங்குவீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. நட்பு வட்டம் விரிவடையும். மச்சினருக்கு நல்ல வரன் அமையும். சனி 6-ல் வலுவாக அமர்ந்திருப்பதால் சிலர் அயல்நாடு செல்வீர்கள். வழக்கில் வெற்றி உண்டு. புது பதவி தேடி வரும். ஆனால் ராசியிலேயே சூரியன் அமர்வதால் உடல் உஷ்ணம் அதிகரித்தல், வேனல் கட்டி, மாதவிடாய்க் கோளாறு வந்துச் செல்லும். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். செவ்வாய் 5-ல் வக்ரமாகி அமர்ந்திருப்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் வந்து செல்லும். கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்தப் பொருட்களை சுமக்க வேண்டாம். அரசியல்வாதிகளே! கட்சி மேலிடத்தில் இருந்து வந்த பூசல்கள் மறையும். கன்னிப் பெண்களே! வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை தாண்டி முன்னேறுவீர்கள். திட்டமிட்டு செயல்படுவதால் சாதிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 21, 22, 25 அதிஷ்ட எண்கள்: 1, 5 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மெரூண் அதிஷ்ட திசை: தெற்கு

கடகம்
மனசாட்சி உள்ளவர்களே! குருபகவான் 2-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்களின் போக்கில் சில மாற்றங்கள் செய்வீர்கள். அறிவுப்பூர்வமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். திடீர் பணவரவு உண்டு. கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். வழக்கு சாதகமாகும். முன்பணம் தந்து முடிக்காமல் இருந்த வீடு, மனையை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். வெள்ளிச் சாமான்கள் வாங்குவீர்கள். வாகன வசதிப் பெருகும். அயல்நாட்டிலிருப்பவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். 5-ம் வீட்டில் சனி நிற்பதால் பிள்ளைகளை கண்டிக்கிறேன் என்ற பேரில் கஷ்டப்படுத்தாதீர்கள். அன்பாகச் சொல்லி புரிய வையுங்கள். ராசிக்கு 12-ல் சூரியன் மறைவதால் வேலைச்சுமை, தூக்கமின்மை, அலைச்சல் வந்துப் போகும். அரசு காரியங்கள் இழுபறியாகும். செவ்வாய் வக்ரமாகி 4-ல் அமர்ந்திருப்பதால் அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். அரசியல்வாதிகளே! தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் வேண்டாம். கன்னிப்பெண்களே! சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி காதல் வயப்படாதீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். தடைகளை தாண்டி தன்னம்பிக்கையுடன் செயல்படும் வாரமிது.

சிம்மம்
துணிச்சல் மிக்கவர்களே! ராசிநாதன் சூரியன் லாப வீட்டில் நுழைவதால் திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். ஆட்சியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். புது வேலைக் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். நாத்தனார் ஒத்துமையாக இருப்பர். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். மாமனார் உங்களுக்காக பரிந்து பேசுவர். ராசிக்குள் குருவும், ராகுவும் நிற்பதால் கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழும். மற்றவர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். நியாயத்தை பேசப் போய் பெயர் கெடும். செவ்வாய் வக்ரமானாலும் 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சொத்துப் பிரச்னை தீரும். சகோதர பகை நீங்கும். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அர்த்தாஷ்டமச் சனி தொடர்ந்துக் கொண்டிருப்பதால் எதிலும் ஒருவித தயக்கம், தடுமாற்றம், வீண் பழி வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே! தகுந்த ஆதாரமின்றி எதிர்கட்சிக்காரர்களை விமர்சிக்க வேண்டாம். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். மலையாய் இருந்த தடைகள் பனியாய் உருகும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 21, 25, 26 அதிஷ்ட எண்கள்: 7, 9 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், க்ரீம்வெள்ளை அதிஷ்ட திசை: வடகிழக்கு

கன்னி
வாரி வழங்கும் வள்ளல்களே! ராசிநாதன் புதன் 10-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் எதையும் சாதிப்பீர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். பூர்வீக சொத்து கைக்கு வரும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். பிள்ளைகளின் இசை, ஒவிய விளையாட்டுத் திறனை வளர்க்க பயிற்சி வகுப்பில் சேர்பீர்கள். டி.வி., வாஷிங் மெஷின் வாங்குவீர்கள். உறவினர், தோழிகள் வீட்டு திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசத்தை முன்னின்று நடத்துவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. சனியும், கேதுவும் வலுவாக இருப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள். வேற்றுமதம், மாற்று மொழியினரால் உதவிகள் உண்டு. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். செவ்வாய் வக்ரமாகி ராசிக்கு 2-ல் அமர்ந்திருப்பதால் பேச்சால் பிரச்னைகள், சகோதர வகையில் செலவுகள், சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே! பொது விழாக்களுக்கு தலைமைத் தாங்குவீர்கள்-. கன்னிப் பெண்களே! தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். வியாபாரத்தில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். கல்வித் தகுதியில் சிறந்த, அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமைக் கூடும். வசதி, வாய்ப்புகள் பெருகும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 22, 24, 26 அதிஷ்ட எண்கள்: 4, 5 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, வெளிர்நீலம் அதிஷ்ட திசை: தென்மேற்கு

துலாம்
களங்கமில்லாத பேச்சிற்கு சொந்தக்காரர்களே! குருவும், ராகுவும் லாப வீட்டில் தொடர்வதால் தொட்டது துலங்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்ப்புகள் அடங்கும். சிலர் சொந்தமாக வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளிநாட்டிலிருக்கும் தோழிகள் மூலமாக நல்லது நடக்கும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். செவ்வாய் ராசிக்குள் வக்ரமாகி நுழைந்திருப்பதால் வீண் டென்ஷன், தூக்கமின்மை, இரத்த அழுத்தம், முன்கோபம், சிறுசிறு நெருப்புக் காயங்கள் வந்துச் செல்லும். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கள் வந்து விலகும். ஏழரைச் சனி தொடர்வதால் வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். அரசியல்வாதிகளே! கட்சியில் மேல்மட்டத்தில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களின் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள். வியாபாரம் தழைக்கும். வேலையாட்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் அதிகாரிகள் நினைத்ததை முடித்துக் காட்டுவீர்கள். விடாமுயற்சியால் இலக்கை எட்டும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 20, 22, 24 அதிஷ்ட எண்கள்: 2, 6 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், வெள்ளை அதிஷ்ட திசை: கிழக்கு

விருச்சிகம்
சொன்ன சொல் தவறாதவர்களே! சுக்ரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தோழிகள், உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். 10-ல் குருவும், ராகுவும் தொடர்வதால் வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்க வேண்டாம். தங்க நகைகளை யாருக்கும் இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். 8-ல் சூரியன் அமர்வதால் அரசு காரியங்கள் தள்ளிப் போய் முடியும். ராசிநாதன் செவ்வாய் வக்ரமாகி 12-ல் மறைந்திருப்பதால் திட்டமிடாத பயணங்களால் அலைச்சல், செலவுகள், சகோதர வகையில் சங்கடங்கள் வந்துச் செல்லும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களின் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள். பிரபலங்களின் உதவியால் வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். வேலையாட்களால் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் சில நேரங்களில் உயரதிகாரி வெறுப்பாக பேசினாலும் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். போராட்டங்களை சமாளிக்க வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 21, 22, 26 அதிஷ்ட எண்கள்: 5, 8 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், சில்வர்கிரே அதிஷ்ட திசை: மேற்கு

தனுசு
மனவலிமை மிக்கவர்களே! செவ்வாய் வக்ரமாகி லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். புது வாய்ப்புகளும், பொறுப்புகளும் தேடி வரும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். கணவர் உங்களை நம்பி பெரிய பொறுப்பை ஒப்படைப்பார். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். கேது 3-ல் நிற்பதால் அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்குக் கூடி வரும். புதன் 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக்கொண்டிருப்பதால் சுறுசுறுப்பாவீர்கள். சூரியன் 7-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். அரசு காரியங்கள் தள்ளிப் போய் முடியும். அரசியல்வாதிகளே! பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! திருமணத் தடை நீங்கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்களர் தேடி வருவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நிதானித்து செயல்படுவதால் நினைத்ததை சாதிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 20, 23, 25 அதிஷ்ட எண்கள்: 1, 3 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள் அதிஷ்ட திசை: கிழக்கு

மகரம்
தயாள குணம் கொண்டவர்களே! சூரியன் 6-ம் வீட்டில் வலுவாக அமர்வதால் எதிர்ப்புகள் அடங்கும். அரசியலில் செல்வாக்குக் கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பிள்ளைகள் நல்ல வழிக்கு திரும்புவார்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்துக் கொள்வீர்கள். 6-ம் வீட்டில் சுக்ரன் தொடர்வதுடன், 20-ந் தேதி முதல் புதனும் 6-ல் மறைவதால் தொண்டைப் புகைச்சல், சளித் தொந்தரவு, காய்ச்சல், வாகன விபத்து, மின்னணு, மின்சார சாதனப் பழுது வந்துச் செல்லும். அவரின் உடல் நலம் பாதிக்கும். உறவினர், தோழிகளுடன் விரிசல்கள் வரக்கூடும். செவ்வாய் வக்ரமானாலும் சாதகமான வீடுகளில் செல்வதால் சகோதரங்கள் உங்களை சரியாகப் புரிந்தக் கொள்வர். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் வாழ்க்கையே ஒரு பெரிய போராட்டமாக இருப்பதாக அவ்வப்போது நினைத்துக் கொள்வீர்கள். கவலைப்படாதீர்கள். அரசியல்வாதிகளே! வீண் பேச்சை தவிர்த்து தொகுதி நலனில் அக்கறை காட்டுங்கள். கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஆலோசனைக்கு செவி சாயுங்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகளிடம் உஷாசாராக இருங்கள். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 22, 24, 26 அதிஷ்ட எண்கள்: 2, 9 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, நீலம் அதிஷ்ட திசை: தென்கிழக்கு

கும்பம்
ஆணவத்திற்கு அடிபணியாதவர்களே! சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்க வங்கிக் கடன் உதவிக் கிடைக்கும். வாகனம் பழுதாகி சரியாகும். வர வேண்டி பணம் கைக்கு வரும். புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். நீண்ட காலமாக பார்க்க நினைத்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உறவினர், தோழிகள் பக்கபலமாக இருப்பார்கள். மச்சினர் உதவிகரமாக இருப்பார். சூரியன் 5-ல் நீடிப்பதால் அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். பிள்ளைகள் பிடிவாதகமாக இருப்பார்கள். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. குரு 7-ல் தொடர்வதால் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். சர்ப்ப கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இல்லாததால் வீண் விரையம், மனஇறுக்கம், தோலில் நமைச்சல், யூரினரி இன்பெக்ஷன் வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே! கட்சியின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கன்னிப் பெண்களே! பரபரப்புடன் காணப்படுவீர்கள். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது. என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். உத்யோகத்தில் உங்களுடைய தொலை நோக்குச் சிந்தனைக்கு பாராட்டுகள் கிடைக்கும். மன இறுக்கம் நீங்கி உற்சாகம் பொங்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 22, 24, 26 அதிஷ்ட எண்கள்: 3, 7 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், ஆலிவ்பச்சை அதிஷ்ட திசை: வடமேற்கு

மீனம்
மூட நம்பிக்கை இல்லாதவர்களே! புதனும், சுக்ரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். வங்கிக் கடன் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். புது வேலை கிடைக்கும். அரசு சம்பந்தப் பட்ட விஷயங்கள் சாதகமாக முடியும். மகளுக்கு தீவிரமாக வரன் தேடுவீர்கள். மகனை விரும்பிய பாடப்பிரிவில் சேர்ப்பீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். செவ்வாய் வக்ரமாகி 8-ல் மறைந்திருப்பதால் முன்கோபம், சிறுசிறு நெருப்பு காயங்கள் வரக்கூடும். பிள்ளைகளின் போக்கை கண்காணிப்பது நல்லது. எவ்வளவு பணம் வந்தாலும் கரையும். சொத்தை சரியாக பராமரிக்க முடியவில்லையே என வருத்தப்படுவீர்கள். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. மின் சாதனங்களை கவனமாக கையாளுங்கள். சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய கடனை தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். அரசியல்வாதிகளே! வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். கன்னிப் பெண்களே! புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். கவிதை, கட்டுரைகளில் ஆர்வம் பிறக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் சில நேரங்களில் அதிகாரிகள் கூடுதலாக உங்களுக்கு வேலைகளை தருவார்கள். சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 20, 25, 26 அதிஷ்ட எண்கள்: 4, 6 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், பழுப்பு அதிஷ்ட திசை: வடக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *