மேஷம்

உத்வேக மனதுடன் செயல்படும், மேஷ ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு மூன்று, ஆறாம் இட அதிபதி புதனுடன், பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியாகிய சூரியன் அனுகூல அமர்வில் உள்ளார். சுக்கிரன், செவ்வாய் கூடுதல் நற்பலன் தருகின்றனர். உங்களின் நல்ல ஆலோசனையை, குடும்ப உறுப்பினர்கள் மதித்து நடந்து கொள்வர். மனதில், பல நாள் இருந்த கவலைகளுக்கு விடிவு கிடைத்திடும். சமூகத்தில் அதிக நன்மதிப்பு பெறுவீர்கள். வாகன பயன்பாட்டு வசதி சீராக இருக்கும். புத்திரர் படிப்பு, வேலை வாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். எதிர்ப்பாளரால் இருந்த தொல்லை விலகும். இல்லறத்துணை ஆதரவாக இருப்பார். தொழில், வியாபாரத்தில் போட்டி குறைந்து உற்பத்தி, விற்பனை செழிக்கும். பணியாளர் கூடுதல் வேலைவாய்ப்பு கிடைத்து, அதிக சம்பளம் பெறுவர். பெண்கள் குடும்ப நலன் சிறக்க, தேவையான பணி மேற்கொள்வர். மாணவர்கள், இலகுவான மனதுடன் படித்து, நல்ல தேர்ச்சி விகிதம் பெறுவர்.

ரிஷபம்

வசீகர செயல்களில் ஆர்வமுள்ள, ரிஷப ராசிக்காரர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன், குரு வீட்டில் அமர்ந்து சனி, ராகு மற்றும் குருவின் அனுகூல பார்வையை பெறுகிறார். இதனால், உங்கள் வாழ்வில், புதிய சாதனை நிகழ்த்துகிற எண்ணம் வளரும். பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். உங்களின் இனிய அணுகுமுறை முக்கியஸ்தர்களின் உதவியை பெற்றுத்தரும். வீடு, வாகனத்தில் கூடுதல் பாதுகாப்பு அவசியம். புத்திரரின் எண்ணங்களை முன்னேற்ற வழியில் கொண்டு வர உதவுவீர்கள். உடல் நல ஆரோக்கியம் பலமுடன் இருக்கும். ல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணிபுரிய, தாராள பணவசதி துணை நிற்கும். பணியாளர் சலுகைப் பயன்பெற அனுகூலம் உண்டு. பெண்கள், கணவருக்கு உறுதுணையாக நடந்து கொள்வர். மாணவர்கள், வெளியிடம் சுற்றுவதை அளவுடன் வைத்துக் கொள்வதால், படிப்பில் நினைவுத்திறன் வளரும்.

மிதுனம்

அடுத்தவர் நலனிலும், அக்கறை கொண்ட, மிதுன ராசிக்காரர்களே!

உங்கள் ராசிநாதனும், சுக ஸ்தான அதிபதியுமாகிய புதன் அஷ்டமஸ்தான அமர்வில் அனுகூலமாக உள்ளார். மற்ற கிரகங்களில் கேது மட்டுமே நற்பலன் தருகிறார். உங்களுக்கு, உரிய மரியாதை தருபவர்களிடம் மட்டும், கருத்துக்களை பேசுவது, சிரமம் தவிர்க்க உதவும். கூடுதலாக உருவாகிற பணியை நிறைவேற்றுவதால், பணவரவு சீராக கிடைத்து, குடும்பத் தேவை தாமதமின்றி பூர்த்தியாகும். புத்திரரின் சேர்க்கை சகவாசம், நல்லவிதமாக அமைய அறிவுரை சொல்வீர்கள். ஒவ்வாத உணவு வகை உண்ண வேண்டாம். இல்லறத் துணை மனதில், உங்கள் மீதான நல்ல எண்ணம் வளரும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை அடைய, லாப விகிதம் குறைத்திடுவீர்கள். பணியாளர், நிர்வாகத்தின் சட்டதிட்டம் கூடுதலாக மதிக்க வேண்டும். பெண்கள் குடும்பத்தின் அத்தயாவசியத் தேவைகளுக்கு மட்டும் முன்னுரிமை தருவது நல்லது. மாணவர்கள், நண்பருடன் வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்

கடகம்

உலக நடப்புகளை அறிவதில் நாட்டமுள்ள, கடக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, பூர்வ புண்ணியம் மற்றும் தொழில் ஸ்தான அதிபதியாகிய செவ்வாய், தினகதி சுழற்சி கிரகம் சந்திரன் மட்டுமே நற்பலன் தருகின்றனர். எவரிடமும் அன்பு, சாந்தம் மிகுந்த குணத்துடன் பழகுவதால் மட்டுமே, அவப்பெயர் வராமல் தவிர்க்கலாம். எதிர்பாராமல் வருகிற சிரமங்களை, இஷ்ட தெய்வ அருள்பலம், கவசம் போல இருந்து விலக வைக்கும். இளைய சகோதரர் அதிக அன்பு பாராட்டுவர். புத்திரரின் நற்செயல் மனதை மகிழ்விக்கும். சத்து நிறைந்த உணவு, உடல் நலம் பலம் பெற உதவும். இல்லறத்துணையின் குறைபாடு உடைய செயல்களை பெரிதுபடுத்தி, கண்டிக்க வேண்டாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை பெருக, புதிய யுக்தி பயன்படுத்துவீர்கள். பணியாளர்கள், சக பணியாளரிடம் சுமுக நட்பு பாராட்டுவது நல்லது. பெண்கள், கணவரின் சம்மதமின்றி நகை இரவல் கொடுக்க, வாங்க கூடாது. மாணவர்கள், அதிக விலை மதிப்புள்ள பொருட்களை கவனமுடன் பயன்படுத்தவும்.

சிம்மம்

லட்சியம் நிறைவேற, தகுந்த பணிபுரியும், சிம்ம ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, நவகிரகங்களில் செவ்வாய், கேது தவிர மற்ற கிரகங்களின் அமர்வு, அளப்பரிய வகையில் நற்பலன் தரும் விதமாக உள்ளது. தொழில் நுட்பம் மற்றும் பொது அறிவு சார்ந்த விஷயங்களை அறிவதில், மிகுந்த ஆர்வம் கொள்வீர்கள். சத்தியம், நேர்மை குணம், மன உறுதியுடன் பின்பற்றுவீர்கள். குடும்பத்தில் திட்டமிட்ட மங்கல நிகழ்ச்சி சிறப்பாக நிறைவேறும். வீடு, வாகனத்தில் பராமரிப்பில் பணச்செலவு அதிகரிக்கும். மகளின் ஜாதக யோக பலம், வாழ்வில் புதிய நன்மைகளை பெற்றுத் தரும். விவகாரங்களில் சமரச தீர்வு கிடைக்கும். இல்லறத்துணை வழி சார்ந்த உறவினர், உங்களின் அருமை, பெருமை உணர்ந்து பெருமிதம் கொள்வர். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழித்து, உபரி பணவரவு கிடைக்கும். அரசியல்வாதிகள் முயற்சித்த பதவி கிடைக்க அனுகூலம் உண்டு. பெண்கள், குடும்பபண வசதிக்கேற்ப ஆடை, அணிகலன் வாங்குவர். மாணவர்கள், கோப குணம் தவிர்ப்பதால், நடப்பவை நல்லவையாக அமையும்.

கன்னி

பிறரின் நல் ஆலோசனையை மதித்து, செயல்படும், கன்னி ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, தன பாக்ய ஸ்தான அதிபதியாகிய சுக்கிரன் மற்றும் தினகதி சுழற்சி கிரகம், சந்திரன் மட்டுமே நற்பலன் தருகின்றனர். நண்பரிடம் பேசும் வார்த்தை, விரக்தி மனதினால் கடினமாக அமைந்து, அவப்பெயரை உருவாக்கலாம், கவனம் தேவை. திட்டமிட்ட செயல் நிறைவேறுவதில், தாமதம் ஏற்படலாம். சொத்து பராமரிப்பில் நம்பகமானவர்களை பணியமர்த்துவது நல்லது. புத்திரரின் எதிர்கால நலன் சிறப்பாக அமைந்திட, சில கட்டுப்பாடுகளை பின்பற்றச் சொல்வீர்கள். உடல்நலத்திற்கு சிறு அளவிலான மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். இல்லறத்துணை உங்களின் கஷ்ட நிலைமை சரி செய்ய, உதவிகரமாக நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம், அதிக உழைப்பு என்கிற நடைமுறையை பின்பற்றுவீர்கள். பணியாளர் உழைப்புக்கு, தகுந்த ஓய்வில் ஆர்வம் கொள்வர். பெண்கள், சேமிப்பு பணத்தை குடும்பத்தின் அத்தியாவசிய செலவுக்கு பயன்படுத்துவர். மாணவர்கள், புதிய முயற்சியால் படிப்பில் தேர்ச்சி விகிதம் பாதுகாத்திடுவர்.

துலாம்

மனதிற்கு சரியெனப்பட்டதை துணிந்து செயல்படுத்தும், துலாம் ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு பாக்யம், சுப விரய ஸ்தான அதிபதியாகிய புதன் நான்காம் இடத்தில் அனுகூலமாக உள்ளார். குரு, சுக்கிரன் கூடுதல் நற்பலன் வழங்குகின்றனர். கருணை மிகுந்த செயலால் உறவினர், நண்பர்களின் பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தின் அத்தியாவசியத் தேவையை, தாராள பணச்செலவில் மேற்கொள்வீர்கள். புதிய வாகனம் வாங்குகிற முயற்சி கை கூடும். புத்திரர், உங்களின் சொல்லுக்கு மரியாதை தருவர். எதிர்மனப்பாங்குடன் உங்களிடம் நடந்தவர், நல்ல அபிப்ராயத்துடன் அணுகிற புதிய சூழ்நிலை உருவாகும். இல்லறத்துணை, குடும்ப நலனில் கூடுதல் அக்கறை கொள்வார். தொழில்,வியாபாரம் செழிக்க சில சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்வீர்கள். பணியாளர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு, திருப்திகர சம்பளம் கிடைக்கும். பெண்கள், குடும்ப உறுப்பினர்களின் அன்பு, பாசத்தினால் மகிழ்வர். மாணவர்கள், படிப்புக்கான பணவசதி கிடைத்து, உற்சாக மனதுடன் படிப்பில் ஈடுபடுவர்.

விருச்சிகம்

நல்லவர்களின் கருத்தை மதித்து நடந்திடும், விருச்சிக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, ஜீவன ஸ்தான அதிபதியாகிய சூரியன் அனுகூல அமர்வில் உள்ளார். சுக்கிரன், கேது, செவ்வாய் அதிக நற்பலன் தருகின்றனர். இடம், சூழ்நிலை உணர்ந்து பேசி, நற்பெயரை பாதுகாத்திடுவீர்கள். இளைய சகோதரரின் பாசமும், உதவியும் மனம் நெகிழ வைக்கும். வீடு, வாகன பாதுகாப்பில் உரிய கவனம் வேண்டும். புத்திரரின் கவனக்குறைவான செயலை சரி செய்வீர்கள். எதிரியால் தொந்தரவு அணுகாத சுமுக வாழ்வு இருக்கும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதியவர்களின் ஆதரவு, உபரி பண வரவு கிடைக்கும். பணியாளர்கள் குறித்த காலத்தில் இலக்கு நிறைவேற்றுவர். பெண்கள், உறவினர் குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி நடத்த, உறுதுணையாக செயல்படுவர். மாணவர்கள், வெளியிடம் சுற்றுவதை குறைப்பதால் படிப்பில் கவனம் வளரும்.

தனுசு

சூழ்நிலைகளுக்கு ஏற்ப திட்டமிட்டு செயல்படும், தனுசு ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு தனம், புகழ் ஸ்தான அதிபதியாகிய, சனி பகவான் நட்பு கிரகம் ராகுவுடன், ஆதாய பலன் தரும் இடத்தில் உள்ளார். குரு, சுக்கிரன் சிறப்புமிகு பலன்களை வழங்குகின்றனர். உங்கள் எண்ணத்தில் புதுமையும், செயல்களில் வசீகரமும் ஏற்படும். குடும்பத் தேவைக்கான பணச்செலவு அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் உதவி உண்டு. வாகன பயணம் இனிதாக அமையும். புத்திரர் ஆன்மிக கருத்து அறிவதில் ஆர்வம் கொள்வர். எதிரியால் வருகிற கெடுசெயல் பலமிழக்கும். இல்லறத்துணை கூடுதல் அன்பு பாராட்டுவார். தொழிலில் சராசரி உற்பத்தி, விற்பனை, பணவரவு இருக்கும். பணியாளர்கள், உபரிபண வரவில் சுயதேவை பூர்த்தி செய்வர். பெண்கள், விதவிதமாக உணவு தயாரித்து, குடும்ப உறுப்பினர்களின் பாராட்டு பெறுவர். மாணவர்கள், பாடங்களை நன்றாக மனதில் பதித்து ஆசிரியரிடம் நற்பெயர் பெறுவர்.

மகரம்

ஆன்மிக நம்பிக்கையுடன் பணி துவங்கும், மகர ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணியம், தொழில் ஸ்தான அதிபதியாகிய சுக்கிரன் மற்றும் தினகதி சுழற்சி கிரகம், சந்திரன் மட்டுமே நற்பலன் வழங்குகின்றனர். மற்ற கிரகங்கள் எதிர்மறையாக செயல்படுகின்றனர். மனதில் சோர்வு, செயல் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படலாம். குடும்ப சூழ்நிலையின் முக்கியத்துவம் உணர்ந்து, பணி மேற்கொள்வது அவசியம். அறிமுகம் இல்லாதவரிடம், பொது விஷயம் பேச வேண்டாம். வாகன பாதுகாப்பில் உரிய கவனம் வேண்டும். புத்திரரின் நற்செயல், மன ஆறுதல் தரும். நிர்பந்த பணக்கடனில், ஒருபகுதி செலுத்துவீர்கள். இல்லறத்துணை, ஆறுதல் மனப்பாங்குடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம், அதிக கவனத்துடன் பாதுகாக்க வேண்டும். பணியாளர் சலுகைப் பயன் பெறுவதில், தாமதம் இருக்கும். குடும்ப பெண்கள், பணச்செலவில் சிக்கனம் மேற்கொள்வர். மாணவர்கள், பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்லக் கூடாது.

கும்பம்

அறப்பணிகளில் இயன்ற அளவில் ஈடுபடும், கும்ப ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு தனம், லாபம் ஸ்தான அதிபதியாகிய குருபகவான் அனுகூல அமர்வில் உள்ளார். சுக்கிரன், கேது கூடுதல் நற்பலன் வழங்குகின்றனர். உங்கள் சொல்லும், செயலும் சிறப்பாக அமைந்து, புகழும், உபரி பணவரவும் பெற்றுத் தரும். இஷ்ட தெய்வ வழிபாடு மற்றும் பிரார்த்தனை நிறைவேற்றுவீர்கள். வெளியூர் பயணம் இனிய அனுபவம் பெற்றுத் தரும். புத்திரர் படிப்பு, வேலை வாய்ப்பில் முன்னேற்றம் காண்பர்.உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை உதவும். இல்லறத்துணை, உங்களின் நல்ல குணங்களை மனப்பூர்வமாக பாராட்டுவார். தொழில், வியாபாரத்தில் புதிய நுட்பங்களை பயன்படுத்தி, வளர்ச்சி இலக்கை அடைவீர்கள். பணியாளர்கள், பாதுகாப்பு நடைமுறையில் உரிய கவனம் கொள்வது அவசியம். பெண்கள், கணவர் வழி சார்ந்த உறவினர்களிடம் நன்மதிப்பு பெறுவர். மாணவர்கள், புதியவரை நண்பராக ஏற்பதில் உரிய கவனம் வேண்டும்.

மீனம்

பழகுபவரிடம் கலகலப்பாக பேசும் குணமுள்ள, மீன ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு சுக சப்தம ஸ்தான அதிபதி புதன், சூரியனுடன் புத ஆதித்ய யோக பலத்துடன், ஆதாய அமர்வில் உள்ளார். மற்ற கிரகங்களில், சந்திரன் மட்டுமே ஓரளவு நற்பலன் தருகிறார். முக்கியமான பணியை தொடர் முயற்சியினால் நிறைவேற்றுவீர்கள். தெய்வ நிந்தனை கருத்துக்களை பேசுபவரிடம் விலகுவதால், மனஅமைதியை பாதுகாக்கலாம். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்வீர்கள்.புத்திரர் தன் எதிர்கால நலன் குறித்து செயல்படுவார். எதிரியினால் உருவாகிற சிரமம், நன்மை தருவதாக மாற்றம் பெறும். இல்லறத்துணையின் செயல்பாடுகளில் குறை கூறவேண்டாம். தொழிலில் அளவான மூலதனம், சராசரி உழைப்பு என்ற நடைமுறை பின்பற்றுவீர்கள். அரசியல்வாதிகள், சமரச பேச்சுக்களில் இருதரப்பு நியாயம் உணர்ந்து பேசுவது நல்லது. பெண்கள், நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். மாணவர்கள், நண்பரின் உதவியால் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

Leave a Reply