shadow

download (6)

வாக்குறுதி தருவதில் நிதானம் பின்பற்றும், மேஷ ராசி அன்பர்களே!

கேது, சூரியன், சுக்கிரனால் நன்மை ஏற்படும். உற்சாக மனதுடன் பணிகளை துவங்குவீர்கள். சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்று, இனிய அனுபவம் காண்பீர்கள். வாகனப் பயணம் அதிகரிக்கும். புத்திரர் உங்கள் சொல் கேட்டு நடப்பர். உறவினர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனைவியின் செயல்கள் சிறப்பாக அமையும். தொழில், வியாபார வளர்ச்சியால் வருமானம் கூடும். அரசு வகையில் உதவி கிடைக்கும். பணியாளர்களின் செயலுக்கு பாராட்டு, வெகுமதி கிடைக்கும். பெண்கள், உறவினர் மத்தியில் நற்பெயர் காண்பர். மாணவர்கள் நன்றாக படிப்பர்.

சந்திராஷ்டமம்: 2.2.16 காலை 8:11 மணி முதல் 4.2.16 மாலை 5:46 மணி வரை.

பரிகாரம்:
பைரவர் வழிபாட்டால், இன்பம் பெருகும்.

புதிய கருத்துக்களை மனதார வரவேற்கும், ரிஷப ராசி அனபர்களே!

செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் நற்பலன் தருவர். எதிர்பார்த்த நன்மை முழு அளவில் கிடைக்கும். உடன்பிறந்தவரின் செயலை குறை சொல்ல வேண்டாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரரின் செயல்பாடு பெருமை தேடித்தரும். நிலுவைப் பணம் வசூலாகும். மனைவி பெருந்தன்மை குணத்துடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணி இலக்கை விரைந்து நிறைவேற்றுவர். வெளியூர் பயணத்தால், இனிய அனுபவம் உண்டாகும். பெண்கள் தாராள பணச் செலவில் குடும்பத்தேவையை நிறைவேற்றுவர். மாணவர்கள் படிப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவர்.

சந்திராஷ்டமம்: 4.2.16 மாலை 5:47 மணி முதல் 6.2.16 அன்று நாள் முழுவதும்.

பரிகாரம்: செவ்வாயன்று, முருகனை வழிபடுங்கள்.

துன்பம் அடைந்தவருக்கு ஆறுதலாக உதவும், மிதுன ராசி அன்பர்களே!

ராகு, சந்திரன், சனீஸ்வரர் நன்மை தருவர். உறவினர்களின் உதவி கிடைக்கும். திட்டமிட்ட பணிகள் சிறப்பாக நிறைவேறும். வாகனத்தின் பயன்பாடு சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் செயல்பாட்டில், தாமதம் உருவாகும். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வீர்கள். வழக்கு விவகாரத்தில் அனுகூலம் கிடைக்கும். மனைவியின் சொல்லும், செயலும் குளறுபடியை ஏற்படுத்தலாம். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் பெற, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவர். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் வீட்டுச் செலவில் சிக்கனம் பின்பற்றுவர். மாணவர்கள் பெற்றோரின் அன்பை பெறுவர்.

பரிகாரம்:
திங்கட்கிழமைகளில், சிவனை வழிபட்டால் கஷ்டம் குறையும்.

தான் செய்த உதவியை பெரிதுபடுத்தாத, கடக ராசி அன்பர்களே!

புதன், சந்திரன் அனுகூல அமர்வில் உள்ளனர். உங்கள் செயல்களில் மனிதாபிமானம் நிறைந்திருக்கும். விலகிச் சென்ற நண்பரும், அன்பு பாராட்டுவர். தாயின் அன்பு, ஆசி ஊக்கம் தரும். பூர்வ சொத்தில் ஓரளவு வருமானம் கிடைக்கும். பிள்ளைகளின் மனதில் தெளிவு ஏற்பட ஆலோசனை வழங்குவீர்கள். கடனில் பெரும்பகுதியைச் செலுத்துவீர்கள். மனைவியின் கருத்துக்கு மதிப்பளிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்வதால், வளர்ச்சி சீராகும். பணியாளர்களுக்கு, அதிர்ஷ்டவசமாக சலுகை கிடைக்கும். பெண்கள் மற்றவர் விஷயத்தில் கருத்து சொல்ல வேண்டாம். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பதால் தேர்ச்சி கூடும்.

பரிகாரம்:
ராகு காலத்தில் துர்க்கையை வணங்கி, நன்மை பெறுங்கள்.

லட்சியத்தில் உறுதி மிக்க, சிம்ம ராசி அன்பர்களே!

சூரியன், செவ்வாய், குரு, சுக்கிரன் நன்மை தருவர். மனதில் ஆன்மிக சிந்தனை மேலோங்கும். அன்றாடப் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாகனப் பயன்பாடு சிறப்பாக அமையும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். ஆரோக்கியம் பலம் பெறும். அன்றாட வாழ்வியல் நடைமுறை சுமுகமாக அமையும். குடும்ப நலன் கருதி மனைவிக்கு உதவுவீர்கள். புதியவர்களின் ஆதரவால், தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி கூடும். வருமானம் அதிகரிக்கும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து சலுகை பெறுவர். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர். மாணவர்கள் பாதுகாப்பற்ற இடங்களில் செல்வது கூடாது.

பரிகாரம்:
சனிக்கிழமைகளில், சாஸ்தாவை வழிபட நன்மை பெருகும்.

 

சுறுசுறுப்புடன் செயல்படும் கன்னி ராசி அன்பர்களே!

சுக்கிரன், சனீஸ்வரர், புதன், கேது நன்மை தருவர். பிறர் உங்களின் நல்ல குணத்தை பாராட்டுவர். பேச்சு செயலில் நிதானம் நிறைந்திருக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக செயல்படுவர். குடும்பத் தேவையை தாராள பணச் செலவில் நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் படிப்பு, வேலைவாய்ப்பில் மேம்படுவர். ஆரோக்கியம் பலம் பெறும். உழைப்பில் ஆர்வம் அதிகரிக்கும். மனைவி குடும்பத்திற்கு பெருமை சேர்ப்பார். தொழிலில் அபரிமிதமான வளர்ச்சியும், பணவரவும் உண்டாகும். பணியாளர்கள், நிர்வாகத்தின் நன்மதிப்பை பெறுவர். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் தேர்ச்சி பெறுவர்.

பரிகாரம்:
கணபதியை வழிபட கவலை குறையும்.

பொறுப்புணர்வு மிக்க, துலாம் ராசி அன்பர்களே!

ராகு, சுக்கிரன், சந்திரனால் நன்மை உண்டாகும். செயல்களில் உற்சாகம் பிறக்கும். அன்புக்குரியவர்களின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். பொது விஷயத்தில் கருத்து சொல்ல வேண்டாம். பிள்ளைகள் அதிருப்தி எண்ணத்துடன் செயல்படுவர். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் ஏற்படலாம். எதிரியிடம் விலகி இருப்பது நல்லது. சீரான ஓய்வு உடல்நலம் பாதுகாக்கும். மனைவி வழி உறவினர்களின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி படிப்படியாக உயரும். பணியாளர் கூடுதல் வேலை வாய்ப்பை ஏற்றுக்கொள்வர். பெண்கள் விரும்பிய பொருள் வாங்குவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை நரசிம்மரை வழிபடுங்கள்.

சமயோசிதமாக செயலாற்றும், விருச்சிக ராசி அன்பர்களே!

சூரியன் குரு சுக்கிரன் அனுகூலமாக உள்ளனர். முக்கியமான பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். அக்கம் பக்கத்தினர் அன்பு பாராட்டுவர். அறிமுகம் இல்லாதவருக்கு வீடு, வாகனத்தில் இடம் தர வேண்டாம். பிள்ளைகளின் எதிர்கால வாழ்வுக்கு, தேவையான பணிபுரிவீர்கள். பூர்வ சொத்தில் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வர திட்டமிடுவீர்கள். பகைவர் வியக்கும் அளவில் வாழ்க்கைத்தரம் உயரும். மனைவி உறுதுணையாக இருப்பார். தொழில், வியாபாரத்தில் வருமானம் உயரும். பணியாளர்கள் நிர்வாகத்தின் நன்மதிப்பை பெறுவர். பெண்கள் மகிழ்ச்சிகரமாக வாழ்வு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் முன்னிலை பெறுவர்.

பரிகாரம்:
வெள்ளிக்கிழமை, அம்பாளை வழிபட்டு நன்மை பெறலாம்.

அமைதியான மனம் படைத்த, தனுசு ராசி அன்பர்களே!

சுக்கிரன், செவ்வாய், கேது, சந்திரனால் நன்மை கிடைக்கும். இடம் சூழல் உணர்ந்து பேசுவீர்கள். செயல்கள் வெற்றி இலக்கை அடையும். வீட்டுச் செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பிள்ளைகளின் செயல்பாடு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். மனைவியின் அன்பைக் கண்டு நெகிழ்ச்சி அடைவீர்கள். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்வது நல்லது. அரசாங்க வகையில் எதிர்பார்த்த உதவி தாமதமாகும். தொழில், வியாபாரத்தில் விடாமுயற்சியும், கடின உழைப்பும் தேவைப்படும். லாபம் சுமார். பணியாளர்கள், நிர்வாகத்தின் வழிகாட்டுதல் தவறாமல் பின்பற்றவும். பெண்கள் சிக்கனத்தைக் கடைபிடிப்பர். மாணவர்கள் படிப்பு தவிர, பிற விஷயங்களில் ஈடுபட வேண்டாம்.

பரிகாரம்:
வியாழனன்று, தட்சிணாமூர்த்தியை வணங்கி சிறப்பு பெறலாம்.

நல்வழியில் ஈடுபாடு கொண்ட, மகர ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், சனீஸ்வரர் நன்மை அளிப்பர். மனதில் தைரியம் அதிகரிக்கும். திட்டமிட்ட பணி நிறைவேறும். இஷ்ட தெய்வ அருள் துணை நிற்கும். நண்பர், உறவினர்களுக்கு உதவுவீர்கள். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். வாகனப் பயணத்தில் நிதானமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் பெருமை உண்டு. அவர்களால் மருத்துவச் செலவு ஏற்படலாம். குடும்பத்துடன் விருந்து, விழாவில் பங்கேற்பீர்கள். மனைவி உங்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தருவார். தொழில், வியாபார வளர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள், பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் வெளியிடம் சுற்றுவதை குறைக்கவும்.

பரிகாரம்:
புதன் கிழமை, குலதெய்வத்தை வழிபட்டு, நன்மை பெறுங்கள்.

பணியை நேர்த்தியுடன் செய்யும், கும்ப ராசி அன்பர்களே!

சுக்கிரன், புதன், சந்திரனால் நன்மை உண்டாகும். நிதானமுடன் செயல்படுவீர்கள். பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு மறையும். வாகனத்தின் பயன்பாடு அதிகரிக்கும். பிள்ளைகளின் அறிவார்ந்த செயலால், பெற்றோருக்கு பெருமை தேடித் தருவர். நண்பருக்கு கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். நிர்வாகச் செலவு அதிகரிக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்தித்தாலும் வருமானம் கிடைக்கப் பெறுவர். பெண்கள் குடும்பநலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறுவர்.

பரிகாரம்:
சனிக்கிழமை, சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றவும்.

திட்டமிட்டுப் பணியாற்றும், மீன ராசி அன்பர்களே!

சூரியன், புதன், குரு, ராகு நன்மை வாரி வழங்குவர். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அன்புக்கு உரியவரின் ஆலோசனை கிடைக்கப் பெறுவீர்கள். வாகனப் பயன்பாடு சிறப்பாக அமையும். பிள்ளைகளின் எண்ணங்களை உணர்ந்து இதமாக வழிநடத்தவும். பூர்வீகச் சொத்து மூலம் வருமானம் கிடைக்கும். சீரான ஓய்வு ஆரோக்கியத்தை பாதுகாக்கும். பிறருக்காக பொறுப்பு ஏற்க வேண்டாம். மனைவியின் குறையை பொறுத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் கடின உழைப்பால் வளர்ச்சி காண்பர். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள், உறவினர் பிரச்னையில் கருத்து சொல்ல வேண்டாம். மாணவர்கள் நன்றாக படிப்பர்.

சந்திராஷ்டமம்: 31.1.16 காலை 6:00 மணி முதல் 2.2.16 காலை 8:10 மணி வரை.

பரிகாரம்:
பெருமாளை வழிபட்டு. பெருமை பெறலாம்.

Leave a Reply