shadow

download (2)

நேர்மையாக நடக்கும் மேஷ ராசி அன்பர்களே!

ராகு, செவ்வாய், குரு நற்பலன் தருவர். நடைமுறை வாழ்வில் இருந்த சிரமம் குறையும். உங்களை அவமதித்தவர்கள் தலைகுனியும் சூழல் உருவாகும். புத்திரர்களின் அறிவுப்பூர்வ செயல் கண்டு மகிழ்வீர்கள். குடும்பத்தில் மங்கள நிகழ்வு ஏற்படும். உறவினர்களின் உதவி கிடைக்கும். மனைவியின் செயல்களுக்கு உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சுமாரான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள், நிர்வாகத்தின் சட்டதிட்டத்தை தவறாமல் பின்பற்றவும். பெண்கள் பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்க வேண்டாம். மாணவர்களின் படிப்பில் உள்ள சந்தேகம் தெளிவடையும்.

பரிகாரம்: சாஸ்தா வழிபாடு, இடர் நீக்கும்.

நம்பிக்கையுடன் முன்னேறும் ரிஷப ராசி அன்பர்களே!

புதன், கேது, சந்திரனால் ஓரளவு நன்மை கிடைக்கும். உங்களின் அறிவுரை நண்பரின் மனதில் மாற்றம் தரும். வாகனத்தில் பராமரிப்பு தேவைப்படும். புத்திரர்களின் செயல் குறையை சரிசெய்வீர்கள். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவியுடன் கருத்து பேதம் வரலாம். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை சீராகும். பணியாளர்கள் புதிய தொழில்நுட்பங்களை அறிவதில் ஆர்வம் கொள்வர். பெண்கள் வீட்டுச்செலவுக்கு சிரமப்படலாம். மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களிடம் நன்மதிப்பு பெறுவர்.

பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு, நன்மை தரும்.

நட்புக்கு முக்கியத்துவம் தரும், மிதுன ராசி அன்பர்களே!

சனி, சூரியனின் அனுகூல சேர்க்கை விபரீத ராஜயோகபலன் தரும். அதாவது, எதிர்பாராத நன்மை கிடைக்கும். நல்ல செயல்களால் சமூகத்தில் அந்தஸ்து கூடும். வெகுநாள் எதிர்பார்த்த நன்மை எளிதில் வந்து சேரும். புத்திரர்கள் உங்கள் சொல் கேட்டு நடப்பர். பூர்வ சொத்தில் வளர்ச்சியும், வருமானமும் கூடும். விவகாரம் அணுகாத சுமுக வாழ்வு அமையும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மனைவி கருத்து இணக்கமுடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரம் செழித்து பணம் சேமிப்பாகும். பணியாளர்கள் விரும்பிய சலுகை பெறுவர். பெண்கள் புத்தாடை, நகை வாங்க அனுகூலம் உண்டு. மாணவர்கள் வெளியூர் செல்வதைத் தவிர்க்கவும்.

பரிகாரம்:
சனீஸ்வரர் வழிபாடு வெற்றிக்கு வழி தரும்.

சுற்றுச்சூழல் உணர்ந்து செயல்படும், கடக ராசி அன்பர்களே!

பெரும்பான்மை கிரகங்கள் அனுகூல அமர்வில் உள்ளனர். சாதனை நிழ்த்தும் எண்ணத்துடன் பணிபுரிவீர்கள். தம்பி, தங்கைகள் கேட்ட உதவியை வழங்குவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. புத்திரர்களின் செயல்களில் மாறுபட்ட தன்மை இருக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். நண்பரிடம் கடனாக கொடுத்த பணம் கிடைக்கும். மனைவி வழி உறவினர்கள் பாசம் கொள்வர். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள், பணிகளை வேகமாக முடிப்பர். பெண்களுக்கு தாராள பணவசதி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து பரிசு பெறுவர்.

பரிகாரம்: சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

ஆர்வத்துடன் பணிபுரியும், சிம்ம ராசி அன்பர்களே!

சுக்கிரன், சந்திரனால் ஓரளவு நன்மை ஏற்படும். நண்பர்களிடம் நன்மதிப்பு பெறுவீர்கள். வாழ்வில் வளம் பெற புதிய செயல் திட்டம் உருவாகும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.
புத்திரர்களை வழி நடத்துவதில் இதமான அணுகுமுறை வேண்டும். மனைவியின் பாசம் மனதில் நெகிழ்ச்சி தரும். பயணத்தால் செலவு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் இப்போதைய நிலை தொடரும். பணியாளர்களுக்கு வேலைப்பளு கூடும். பெண்கள், குடும்ப நலன் சிறக்க தேவையான பணி மேற்கொள்வர். மாணவர்கள் பாதுகாப்பற்ற இடங்களுக்கு செல்லக் கூடாது.

பரிகாரம்:
விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

சாந்த குணம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே!

சுக்கிரன், புதனால் நன்மை உண்டு. சனி, சூரியனின் அமர்வு விபரீத ராஜயோக பலன் தரும். அதாவது, எதிர்பாராத நன்மை கிடைக்கும். பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள்.
உறவினர் வருகை மகிழ்ச்சி தரும். நோய் தொந்தரவு குறையும். மனைவியின் சொல்லும், செயலும் குடும்பத்துக்கு நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி சிறப்பாக நிறைவேறும். பணியாளர்கள் நிர்வாகத்திடம் நற்பெயரும், சலுகையும் பெறுவர். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஞாபகத்திறன் மேம்படும்.

பரிகாரம்: பெருமாள் வழிபாடு, செல்வ வளம் தரும்.

தெய்வ நம்பிக்கையுடன் பணிகளில் ஈடுபடும், துலாம் ராசி அன்பர்களே!

கேது, குரு, சுக்கிரன் அளப்பரிய நன்மை தருவர். தாமதமான பணியில் முன்னேற்றம் ஏற்படும். நிதானித்து பேசுவது நல்லது. வாகனத்தில் பராமரிப்பு செய்வதால் பயணங்கள் எளிதாகும்.
புத்திரர்களின் எண்ணத்திற்கு முக்கியத்துவம் தருவீர்கள். மனைவியின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற புதிய வாய்ப்பு வரும். பணியாளர்கள் பணியிடத்தில் சுமுக சூழல் இருக்கும். பெண்கள், உறவினர்களின் குடும்ப நன்மைக்கு உதவுவர். மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவர்.

பரிகாரம்:
சிவன் வழிபாடு சகல நன்மை தரும்.

நற்கருணை மனதுடன் பிறருக்கு உதவும், விருச்சிக ராசி அன்பர்களே!

செவ்வாய், ராகுவின் அனுகூல சேர்க்கை எதிர்ப்புகளை விரட்டும். வாழ்வில் புதிய மாற்றம் உருவாகும். உடன் பிறந்தவர்களின் உதவி உண்டு. பயணத்தால் பெறுகின்ற நன்மை அதிகரிக்கும். புத்திரர்களின் செயல் பெருமை தரும். வழக்கு, விவகாரங்களில் அனுகூலம் ஏற்படும். மனைவி பாசத்துடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற்று பணவரவு கூடும். பணியாளர்கள் கடும் வேலைப்பளுவை சந்திக்க வேண்டியிருக்கும். பெண்கள், கணவரின் நல்ல குணத்தை பாராட்டுவர். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் கொள்வர்.

சந்திராஷ்டமம்: 29.11.15 காலை 6:00 மணி முதல் இரவு 11:28 மணி வரை.

பரிகாரம்:
பெருமாள் வழிபாடு, செல்வ வளம் தரும்.

ஒழுக்கமான வாழ்வை விரும்பும், தனுசு ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், சந்திரன் செல்வ வளம் தருவர். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு வரலாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதால் சிரமம் விலகும். மனைவியின் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். வீட்டில் ஒற்றுமை மகிழ்ச்சி கூடும். தொழில், வியாபாரம் செழிக்க கடுமையாக போராட வேண்டி வரும். பணியாளர்களுக்கு பணியில் குளறுபடி வரலாம். பெண்கள், உறவினர் குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி நடத்த உதவுவர். மாணவர்கள் பாதுகாப்பு குறைந்த இடங்களில் செல்லக்கூடாது.

சந்திராஷ்டமம்: 29.11.15 இரவு 11:29 மணி முதல் 2:12:15 காலை 7:53 மணி வரை

பரிகாரம்: முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.

உறவினர்களிடம் நன்மதிப்பு பெறுகிற, மகர ராசி அன்பர்களே!

ராசிநாதன் சனி, அஷ்டமாதிபதி சூரியனின் சேர்க்கை ஆதாய பலன்களை அள்ளித் தரும். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். புத்திரர்களின் எதிர்கால நலனுக்கு தேவையானதைச் செய்வீர்கள். மனைவி உங்களுக்கு நல்ல ஆலோசனை சொல்வார். தொழில், வியாபாரத்தில் அதிக மூலதனம் செய்வீர்கள். பணியாளர்கள் பணி இலக்கை நிறைவேற்றி சலுகை பெறுவர். பெண்கள், இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம்: 2.12.15 காலை 7:54 மணி முதல் 4:12:15 மாலை 6:34 மணி வரை.

பரிகாரம்:
ஆஞ்சநேயர் வழிபாடு, நன்மை தரும்.

வரவுக்கேற்ப செலவு செய்யும் கும்பராசி அன்பர்களே!

சூரியன், குரு, சுக்கிரன், புதன் அனுகூல அமர்வில் உள்ளனர். பேச்சில் உண்மை நேர்மை நிறைந்திருக்கும். குடும்பத்தில் சிறப்பான மதிப்பு, மரியாதை கிடைக்கும். புத்திரர்கள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பூர்வ புண்ணிய நற்பலன் குடும்பத்தில், பலவித நன்மைகளை உருவாக்கும். மனைவியின் அன்பு, மனதிற்கு நெகிழ்ச்சி தரும். சுற்றுலா பயணத்திட்டம் உருவாகும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி வருமானம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு கடனுதவி கிடைக்கும். பெண்கள் குடும்ப உறுப்பினர்களின் மனம் அறிந்து பணிபுரிவர். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் வேண்டும்.

சந்திராஷ்டமம்:
4.12.15 மாலை 6:35 மணி முதல் 5:12:15 இரவு 11.55 மணி வரை.

பரிகாரம்: துர்க்கை வழிபாடு, தைரியம் வளர்க்கும்.

எந்த விளைவையும் பக்குவமுடன் ஏற்கும், மீன ராசி அன்பர்களே!

சுக்கிரன், சந்திரன், புதனால் நன்மை உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவி செய்வர். வீடு, வாகனத்தில் உரிய பாதுகாப்பு பின்பற்றவும். புத்திரர்களின் தேவையை நிறைவேற்றி அவர்களை மகிழச் செய்வீர்கள். சிறு அளவில் மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். மனைவியின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் இப்போதைய நிலை தொடரும். பணியாளர்களுக்கு வேலைப்பளு கூடினாலும் பணவரவு திருப்திகரமாகும். பெண்கள், பிறர் விஷயத்தில் தலையிட்டால் சிரமம் வரலாம்; கவனம். மாணவர்கள் படிப்பில் முன்னேற லட்சியத்துடன் படிப்பர்.

பரிகாரம்:
தட்சிணாமூர்த்தி வழிபாடு, மங்கள வாழ்வு தரும்.

Leave a Reply