shadow

images (8)

சவால் நிறைந்த பணியை எளிதாக நிறைவேற்றும், மேஷ ராசி அன்பர்களே!

சூரியன், சனி, கேது தவிர மற்ற கிரகங்கள் நற்பலன் தருவர். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். அக்கம் பக்கத்தினரின் பாராட்டு கிடைக்கும். வாகன பயணம் இனிதாக அமையும். புத்திரரின் நற்செயல், புகழ் தேடித் தரும். உடல்நிலை சீராகும். மனைவி விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சிப் பாதையில் செல்லும். பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பெண்கள், பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள், அக்கறையுடன் படிப்பர்.

சந்திராஷ்டமம்: 26.7.2015 காலை 6:00 முதல் 28.7.2015 மதியம் 12:22 மணி

பரிகாரம்:
அம்பிகை வழிபாடு, வாழ்வில் நன்மை சேர்க்கும்.

தன்னம்பிக்கையுடன் உழைத்து வாழும், ரிஷப ராசி அன்பர்களே!

சூரியன், சுக்கிரன், சனி, கேது நற்பலன் தருவர். எண்ணிய திட்டம், செயல் வடிவமாகும். பணவரவில் முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் சுபம் குறித்த பேச்சு நிகழும். தாய் வழி உறவினர்கள், பாசமுடன் பழகுவர். புத்திரரின் போக்கை மென்மையாக சீர்படுத்துவீர்கள். பணக் கடனில் ஒருபகுதி செலுத்துவீர்கள். மனைவியின் செயல்பாடு பெருமையளிக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற, புதியவர்களின் உதவி கிடைக்கும். பணியாளர்கள், சுறுசுறுப்பாக செயல்படுவர். பெண்கள், ஆன்மிக விஷயத்தில் ஈடுபடுவர். மாணவர்கள் படிப்புக்கான சூழ்நிலை அமையப் பெறுவர்.

சந்திராஷ்டமம்: 28.7.2015 மதியம் 12:23 முதல் 30.7.2015 மாலை 5:44 மணி

பரிகாரம்:
தன்வந்திரி வழிபாடு, ஆரோக்கியம் அளிக்கும்.

உறவினர்களிடம் பாசமுடன் பழகும், மிதுன ராசி அன்பர்களே!

சுக்கிரன், சந்திரனால் ஓரளவு நற்பலன் உண்டாகும். குடும்பத் தேவைக்கான செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர்கள், கல்வியில் சிறந்து விளங்குவர். உடல்நலனில் அக்கறை கொள்வது நல்லது. மனைவியின் செயல்பாடு, மன நிம்மதிக்கு வழிவகுக்கும். தொழில், வியாபாரத்தில் மிதமான ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளானாலும், வருமானம் குறையாது. பெண்கள், வீட்டு பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள், படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது அவசியம்.

சந்திராஷ்டமம்: 30.7.2015 மாலை 5:45 முதல் 1.8.2015 இரவு 9:19 மணி

பரிகாரம்:
மகாலட்சுமி வழிபாட்டால், தொழிலில் வளர்ச்சி ஏற்படும்.

சிறிய விஷயத்திலும் கவனம் செலுத்தும், கடக ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், ராகுவால் நன்மை உண்டாகும். உறவினர்களிடம் அளவாக பேசுவது நல்லது. உழைப்பினால் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். வாகனத்தில் பராமரிப்பு செலவு செய்ய நேரிடும். பிள்ளைகளின் பிடிவாத குணத்தால், பணம் செலவாகும். விருந்து, விழா என சென்று மகிழ்வீர்கள். மனைவியின் செயல்பாடு, உங்களின் கவுரவத்தை மேம்படுத்தும். தொழில், வியாபாரத்தில் மிதமான ஆதாயம் கிடைக்கும். பணியாளர் எதிர்பார்த்த கடனுதவி வந்து சேரும். பெண்கள், குடும்ப பெருமையை நிலைநாட்டுவர். மாணவர்கள், பொது விஷயங்களில் ஆர்வம் கொள்வர்.

பரிகாரம்:
பைரவர் வழிபாடு, துன்பத்தை போக்கும்.

இயன்ற அளவில் பிறருக்கு உதவும், சிம்ம ராசி அன்பர்களே!

சுக்கிரன், சனி, செவ்வாய் நற்பலன் தருவர். இனிய பேச்சால், பிறரை கவர்வீர்கள். உடன்பிறந்தவரால் உதவி கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்பாடு, பெருமிதம் அளிக்கும். வழக்கு விவகாரத்தில், சாதகமான தீர்வு கிடைக்கும். மனைவி, குடும்ப நலனில் அக்கறை கொள்வார். விருந்து, விழாவில் பங்கேற்று மகிழ்வீர்கள். இனிய அணுகுமுறையால், தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள், அழகு சாதனப் பொருள் வாங்குவர். மாணவர்கள், படிப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவர்.

பரிகாரம்:
ஆஞ்சநேயர் வழிபாடு, செயலில் வெற்றியை அளிக்கும்.

உற்சாக மனநிலையுடன் பணிபுரியும், கன்னி ராசி அன்பர்களே!

சூரியன், சுக்கிரன், புதனின் நல்லருள் பலமாக உள்ளது. பேச்சு, செயலில் புத்துணர்ச்சி வெளிப்படும். விலகிய சொந்தம் நெருங்கி வந்து பாராட்டும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். வாகனப் பயணம் இனிதாக அமையும். புத்திரர்களின் செயல்பாடு கண்டு மகிழ்வீர்கள். எதிரியால் ஏற்பட்ட தொல்லை மறையும். இல்லறத் துணை, கருத்து ஒற்றுமையுடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள், பொறுப்புணர்வுடன் பணிபுரிவர். பெண்களுக்கு, தாய்வீட்டு சீதனம் கிடைக்கும். மாணவர்கள், படிப்பில் கவனம் செலுத்துவர்.

பரிகாரம்:
தட்சிணாமூர்த்தி வழிபாடு, குடும்ப அமைதிக்கு வழிவகுக்கும்.

பணி இலக்கை நிறைவேற்ற உழைக்கும், துலாம் ராசி அன்பர்களே!

சனி, செவ்வாய், ராகு தவிர மற்ற கிரகங்கள் வியத்தகு அளவில் நற்பலன் தருவர். புதிய பணிகளை நிறைவேற்றுவீர்கள். சமூகத்தில் உயரிய அந்தஸ்து கிடைக்கும். வீடு, வாகனத்தில் பராமரிப்பு செலவு உண்டாகும். பிள்ளைகள் உங்களிடம் எதிர்காலம் குறித்து ஆலோசிப்பர். எதிரியாக செயல்பட்டவரும் மறைமுகமாக உதவுவார். இல்லறத் துணை விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். தொழில் வளர்ச்சிக்கான அரசின் உதவி கிடைக்கப் பெறலாம். பணியாளர்கள், புதிய தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்வர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி குவிப்பர். மாணவர்கள், நண்பர்களுடன் சேர்ந்து படிப்பர்.

பரிகாரம்:
சூரியன் வழிபாட்டால், ஆரோக்கியம் மேம்படும்.

பிறர் கருத்துக்கு உரிய மரியாதை அளிக்கும், விருச்சிக ராசி அன்பர்களே!

ராகு, சந்திரனால் நற்பலன் உண்டாகும். பணிகள் தங்கு தடையின்றி நிறைவேறும். வீண் பேச்சு பேசுபவரிடம் விலகுங்கள். உடன் பிறந்தவர்களின் உதவி, ஓரளவே கிடைக்கும். வீடு, வாகன பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்துவது நல்லது. புத்திரர்கள், தன்னம்பிக்கையுடன் செயல்படுவர். உடல்நலனில் அக்கறை செலுத்துவீர்கள். இல்லறத் துணையின் செயல்பாடு, மன ஆறுதலுக்கு வழிவகுக்கும். தொழில், வியாபாரத்தில் மிதமான ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள், பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. பெண்கள், பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்க வேண்டாம். மாணவர்கள், படிப்புடன் விளையாட்டிலும் ஈடுபடுவர்.

பரிகாரம்: விஷ்ணு வழிபாட்டால், தொழில் வளர்ச்சி பெருகும்.

வெற்றி மனப்பான்மை கொண்ட, தனுசு ராசி அன்பர்களே!

புதன், குரு, சுக்கிரன், சனி ஆகியோரால் நற்பலன் உண்டாகும். சிறிய முயற்சிக்குக் கூட பெரிய நன்மை காண்பீர்கள். நண்பர்களின் உதவி, தக்க சமயத்தில் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பூர்வ சொத்தில் அதிர்ஷ்டவசமாக வருமானம் கிடைக்கும். பிள்ளைகளை கண்டிப்பதில் நிதானத்தை கடைபிடிக்கவும். பணக்கடனில் ஒரு பகுதியை செலுத்த வாய்ப்புண்டு. மனைவி வழி உறவினர்களுடன் இணக்கம் ஏற்படும். தொழில், வியாபார வளர்ச்சி லாபம் உயரும். பணியாளர்கள், சுதந்திர மனப்பான்மையுடன் செயல்படுவர். பெண்கள், சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவர். மாணவர்கள், ஆர்வமுடன் படித்து முன்னேறுவர்.

பரிகாரம்: காமதேனு வழிபாடு, தொழில் வளர்ச்சி அளிக்கும்.

தர்ம சிந்தனையுடன் செயலாற்றும், மகர ராசி அன்பர்களே!

கேது, செவ்வாய், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் நன்மை வழங்கும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். சகோதரர்களின் ஆலோசனை, வளர்ச்சிக்கு துணை நிற்கும். வாகன பயணம் இனிதாக அமையும். புத்திரரின் செயல்பாடு பெருமை சேர்க்கும். ஆரோக்கியம் பலம் பெறும். மனைவியின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய நடைமுறையை பின்பற்றி, லாபத்திற்கு வழிவகுப்பீர்கள். பணியாளர்கள், பணிச்சுமையில் இருந்து விடுபட்டு மகிழ்வர். பெண்கள், குடும்ப வளர்ச்சிக்காக பாடுபடுவர். மாணவர்கள், கல்வியோடு விளையாட்டிலும் ஈடுபடுவர்.

பரிகாரம்:
மாரியம்மன் வழிபாடு, மனதில் நம்பிக்கையை வளர்க்கும்.

நட்பை பெரிதென மதித்து நடக்கும், கும்ப ராசி அன்பர்களே!

சூரியன், புதன் இருவரும் புதஆதித்ய யோகத்தின் நற்பலனை வாரி வழங்குவர். குருவால் நன்மை ஏற்படும். சிறு முயற்சியிலும் பெரிய நன்மை உண்டாகும். எதிரிகள், இருந்த இடம் தெரியாமல் பறந்தோடுவர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர் படிப்பு, வேலையில் முன்னேற்றம் காண்பர். ஆன்மிக விஷயத்தில் ஆர்வம் கூடும். இல்லறத் துணையின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். பணியாளர்கள், அதிகாரிகளின் கருத்துக்கு மதிப்பளிப்பது நல்லது. பெண்கள், உறவினர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். மாணவர்கள், கண்ணும் கருத்துமாக படிப்பர்.

பரிகாரம்: சிவனை வழிபடுவதால், பிரச்னை யாவும் மறையும்.

லட்சியத்தை நோக்கி விரைந்தோடும், மீன ராசி அன்பர்களே!

சந்திரன் சாதகமான இடத்தில் இருக்கிறார். மற்ற விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும். குடும்பத் தேவைக்கான பண செலவு அதிகரிக்கும். நீண்ட துாரப் பயணங்களில் விழிப்புடன் இருப்பது நல்லது. புத்திரர், பிடிவாத குணத்துடன் செயல்பட வாய்ப்புண்டு. உடல் நலத்திற்கு ஒவ்வாதவற்றை தவிர்ப்பது நல்லது. இல்லறத் துணையின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் தடை நீங்கி, ஆதாயம் படிப்படியாக உயரும். பணியாளர்கள், பணி இலக்கை எளிதில் நிறைவேற்றுவர். பெண்கள், மின் உபகரணங்களை கவனமுடன் கையாளவும். மாணவர்கள், பாதுகாப்பு குறைந்த இடத்திற்குச் செல்ல வேண்டாம்.

பரிகாரம்:
நவக்கிரக வழிபாடு, நன்மை பெற வழிவகுக்கும்.

Leave a Reply