shadow

download (2)

பக்குவ மனதுடன் செயலாற்றும் மேஷ ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், ராகு நற்பலன் தர காத்திருக்கின்றனர். நீண்ட நாள் முயற்சி வெற்றி பெறும். மனதில் உற்சாகம் உண்டாகும். தாய்வழி உறவினர்களின் உதவி கிடைக்கும். புத்திரர் நண்பருக்கு இணையாகப் பழகுவர். ஆரோக்கியம் பலம் பெறும். பணக்கடனில் பெரும்பகுதியை அடைப்பீர்கள். மனைவியின் செயல்பாடு கண்டு மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கேற்ப லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர். பெண்கள் சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்று மகிழ்வர். மாணவர்கள் ஆர்வமாகப் படிப்பர்.

பரிகாரம்: சனீஸ்வரர் வழிபாடு, சங்கடம் போக்கும்.

எதிரியையும் பண்புடன் நடத்தும் ரிஷப ராசி அன்பர்களே!

சுக்கிரன், சூரியன், புதன், கேதுவினால் நன்மை பெருகும். சாதுர்யமாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். எதிரியும் பாராட்டும் சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் ஒற்றுமை பலம் பெறும். வாகன பராமரிப்புச் செலவு ஏற்படும். புத்திரர் படிப்பு, வேலையில் முன்னேற்றம் காண்பர். விவகாரம் அணுகாத சுமுக வாழ்வு உருவாகும். மனைவியால் குடும்பத்தில் ஒற்றுமை சிறக்கும். தொழில், வியாபார வளர்ச்சியால் ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணியிலக்கை விரைந்து முடிப்பர். பெண்கள் மனம் போல புத்தாடை அணிகலன் வாங்குவர். மாணவர்களுக்கு நண்பரின் உதவி கிடைக்கும்.

பரிகாரம்: விஷ்ணு வழிபாடு, தொழிலில் வளர்ச்சி தரும்.

நட்புணர்வுடன் பழகி மகிழும் மிதுன ராசி அன்பர்களே!

செவ்வாய், சுக்கிரன், சனீஸ்வரர் நன்மை தருவர். மங்கல நிகழ்ச்சி நடத்த உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும். வாகன வகையில் பராமரிப்பு செலவு உண்டாகும். புத்திரரின் குறையை இதமான அறிவுரையால் சரிசெய்வது நல்லது. எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பகைமை குணம் உள்ளவரும் அன்பு பாராட்டுவர். மனைவியின் பாசம் கண்டு மனம் நெகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சியால் ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள் திட்டமிட்டு செயல்பட்டு பணியை விரைந்து முடிப்பர். பெண்கள் கணவர் வழி உறவினர்களால் பாராட்டப்படுவர். மாணவர்கள் கண்ணும் கருத்துமாகப் படிப்பர்.

பரிகாரம்: பைரவர் வழிபாடு, நன்மை அளிக்கும்.

சான்றோரின் வழிகாட்டுதல் ஏற்கும் கடக ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், ராகு, புதன் அதிக நன்மை தருவர். பேச்சு, செயலில் புத்துணர்வு வெளிப்படும். சமூகத்தில் நற்பெயருடன் திகழ்வீர்கள். குடும்பத் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். வாகன பயணத்தால் இனிமை காண்பீர்கள். புத்திரரின் உடல்நலத்தில் உரிய கவனம் வேண்டும். எதிரியும் விலகிச் செல்லும் சூழல் உருவாகும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். வெளியூரிலிருந்து எதிர்பர்த்த சுபசெய்தி வரும். தொழில், வியாபாரத்தில் புதிய சீர்த்திருத்தங்களைச் செய்வீர்கள். பணியாளர்கள் புதிய தொழில் நுட்பங்களை அறிய முற்படுவர். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர். மாணவர்கள் ஆசிரியர்களின் மத்தியில் பாராட்டு பெறுவர்.

பரிகாரம்:
மகாலட்சுமி வழிபாடு, வளம் தரும்.

ஆராய்ச்சி மனப்பான்மை கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!

சுக்கிரன், சூரியன், சந்திரனால் நன்மை அதிகரிக்கும். பொது இடங்களில் எவருடனும் அதிகம் பேச வேண்டாம். ஆடம்பரச் செலவு தவிர்க்க முடியாததாக இருக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. புத்திரரின் செயல்களை கண்டிக்கும் சூழ்நிலை உருவாகும். கடன், நோய் தொந்தரவு குறையும். மனைவி இன்ப, துன்பங்களில் சமபங்கு கொள்வார். தொழில், வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவால் வளர்ச்சி உண்டாகும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கப் பெறுவர். பெண்கள் வீட்டுச் செலவில் சிக்கனத்தைப் பின்பற்றுவர். மாணவர்கள் பாதுகாப்பு குறைந்த இடங்களில் செல்வது கூடாது.

சந்திராஷ்டமம்: 25.10.15 காலை, 6:00 மணியிலிருந்து 26.10.15 இரவு 2:24 மணி வரை.

பரிகாரம்: ராமர் வழிபாடு, மனதில் உறுதி வளர்க்கும்.

உழைப்பால் உயர விரும்பும் கன்னி ராசி அன்பர்களே!

சுக்கிரன், சந்திரன், சனீஸ்வரர் நன்மை வாரி வழங்குவர். பணிகளில் ஒருமுகத்தன்மையுடன் ஈடுபடுவது அவசியம். குடும்பத் தேவைக்கான செலவு அதிகரிக்கும். கடந்த கால நற்செயலுக்கான பலன் வந்து சேரும். வாகனத்தில் அறிமுகம் இல்லாதவருக்கு இடம் தர வேண்டாம். புத்திரர் படிப்பு, வேலையில் முன்னணி வகிப்பர். விலகிய உறவினரும் விரும்பி வந்து சொந்தம் பாராட்டுவர். மனைவியின் ஆலோசனையைக் கேட்டு பாராட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் குறுக்கிடும் தடைகளை சாதுர்யமாக சரிசெய்வீர்கள். பணியாளர்கள் சக ஊழியர்களின் ஆதரவைப் பெற்று மகிழ்வர். பெண்கள் செலவில் சிக்கனத்தை கடைபிடிப்பர். மாணவர்கள் படிக்கும் நேரத்தை அதிகப்படுத்துவர்.

சந்திராஷ்டமம்: 26.10.15 இரவு 2:25 மணியிலிருந்து 29.10.15 அதிகாலை 5:15 மணி வரை.

பரிகாரம்:
விநாயகர் வழிபாடு, வெற்றி தரும்.

நண்பர்களிடம் அன்பாக பேசும் துலாம் ராசி அன்பர்களே!

குரு, செவ்வாய், சுக்கிரன், கேதுவினால் நன்மை உண்டாகும். கருத்து பேதம் கொண்டவர்களிடமிருந்து சமயோசிதமாக விலகுவீர்கள். உடன் பிறந்தவர்கள் அன்பு பாராட்டுவர். பூர்வீக சொத்து மூலம் வளர்ச்சி உண்டாகும். சொத்தில் வருமானம் அதிகரிக்கும். புத்திரர் உங்களின் வழிகாட்டுதலைக் கேட்டு வளர்ச்சிப்பாதையில் முன்னேறுவர். இஷ்ட தெய்வ வழிபாடு சிறக்கும். மனைவி விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் அதிக பணவரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் ஆடை, அணிகலன் வாங்குவர். மாணவர்கள் படிப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவர்.

சந்திராஷ்டமம்:
29.10.15 அதிகாலை 5:16 மணியிலிருந்து 31.10.15 காலை 9:26 மணி வரை.


பரிகாரம்:
தட்சிணாமூர்த்தி வழிபாடு, நல்வாழ்வு தரும்.

நல்ல கருத்தை மனதார ஏற்கும் விருச்சிக ராசி அன்பர்களே!

ராகு, சந்திரனால் நற்பலன் உண்டாகும். பணவரவுக்கான புதிய வழி உருவாகும். அனுபவம் கற்றுத் தந்த பாடம் வளர்ச்சிக்கு துணை நிற்கும். புத்திரரின் அதிரடியான செயல்பாடு திகைப்பை ஏற்படுத்தும். உடல் நலனில் கவனம் தேவை. மனைவியின் கவனக்குறைவை கண்டிப்பதில் மென்மையான அணுகுமுறை தேவை. தொழில், வியாபாரத்தில் மந்தநிலை மாறி லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணியிடத்தில் விவாதத்தில் ஈடுபடுவது கூடாது. பெண்கள் பிறருக்காக எவ்வித பொறுப்பும் ஏற்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும்.

சந்திராஷ்டமம்: 31.10.15 காலை, 9:27 மணி அன்று நாள் முழுதும்

பரிகாரம்: முருகன் வழிபாடு, சகல நன்மை தரும்.

உயர்வு தாழ்வு கருதாமல் பழகும் தனுசு ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், சூரியன், புதனால் நன்மை உண்டாகும். மனதில் அமைதி நிறைந்திருக்கும். புதிய முயற்சி மூலம் வளர்ச்சிக்கு வழிவகுப்பீர்கள். நண்பரால் தக்க சமயத்தில் உதவி உண்டாகும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி நடத்தும் சூழல் உருவாகும். புத்திரர்களின் செயல்பாடு கண்டு மகிழ்வீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். மனைவியின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பெண்கள் சந்தோஷ வாழ்வு காண்பர். மாணவர்கள் படிப்பில் அக்கறை கொள்வர்.

பரிகாரம்:
ஆஞ்சநேயர் வழிபாடு, வெற்றி தரும்.

தன் தகுதி உணர்ந்து பணிபுரியும் மகர ராசி அன்பர்களே!

பெரும்பான்மையான கிரகங்கள் அனுகூல அமர்வில் உள்ளனர். தடைப்பட்ட பணி விரைவாக நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். முக்கிய தேவை தாராள பணச் செலவில் பூர்த்தியாகும். புத்திரர், உங்கள் சொல் கேட்டு நடப்பர். எதிரிக்கும் உங்கள் மீது நல்ல எண்ணம் ஏற்படும். மனைவி செயல்பாடு குடும்ப ஒற்றுமையைப் பாதுகாக்கும். தொழில், வியாபாரத்தில் வருமானம் பன்மடங்கு உயரும். பணியாளர்கள் பணியிலக்கை விரைந்து முடிப்பர். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர். மாணவர்களின் விருப்பத்தை பெற்றோர் நிறைவேற்றி வைப்பர்.

பரிகாரம்: அம்பிகை வழிபாடு, ஆனந்தம் அளிக்கும்.

சிறு நன்மையையும் பெரிதாக கருதும் கும்ப ராசி அன்பர்களே!

குரு, சந்திரனால் நன்மை உண்டாகும். புதியவர்களின் நட்பும், உதவியும் கிடைக்கும். வீடு, வாகனத்தில் உரிய பாதுகாப்பு நடைமுறையைப் பின்பற்றவும். புத்திரரின் செயல்பாட்டை கண்டிப்பதில் மென்மை தேவை. ஆரோக்கியம் சீராக இருக்கும். மனைவி வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் உழைப்பால் முன்னேற்றம் காண்பீர்கள். லாபம் பெருகும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்தித்தாலும் அதற்குரிய பலன் கிடைக்கும். பெண்கள் பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்க வேண்டாம். மாணவர்கள் படிப்பு தவிர பிற விஷயத்தில் ஈடுபட வேண்டாம்.

பரிகாரம்: நந்தீஸ்வரர் வழிபாடு, மேன்மை தரும்.

லட்சிய உறுதியுடன் பணிபுரியும் மீன ராசி அன்பர்களே!

செவ்வாய், புதன், சந்திரனால் நன்மை ஏற்படும். எதிரி தொல்லை விலகும். பணி நிறைவேற புதிய உத்தியைக் கையாள்வீர்கள். வாகன பயணம் இனிமை சேர்க்கும். புத்திரர் அறிவுத்திறனில் மேம்படுவர். ஆரோக்கியம் பலம் பெறும். மனைவியின் ஆலோசனையை ஏற்று நடைமுறைப்படுத்துவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான காலகட்டம், ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களின் ஆதரவைக் கண்டு மகிழ்வர். பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் திட்டமிட்டுப் படித்து முன்னேறுவர்.

பரிகாரம்: நாகர் வழிபாடு, வாழ்வில் நலம் சேர்க்கும்.

Leave a Reply