shadow

download

அதிக உழைப்பால் அதிர்ஷ்டகர வாழ்வு பெறும், மேஷ ராசி அன்பர்களே!

குரு, செவ்வாய், ராகு, புதன் அதிக நன்மை தருவர். வளர்ச்சிப் பாதைக்கான வழி திறக்கும். புதிய பணிகளை செயல்படுத்துவீர்கள். திட்டமிட்டதை விட குடும்பச் செலவு அதிகரிக்கும். வாகனப் பயணம் இனிய அனுபவம் தரும். புத்திரர்கள் படிப்பு வேலை வாய்ப்பில் மேம்படுவர். குடும்பத்தில் மங்கள நிகழ்வு உருவாகும். பணக்கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். மனைவியின் மனதில் நம்பிக்கை வளர உதவுங்கள். தொழில், வியாபாரம் அதிக உழைப்பால் சராசரி இலக்கை அடையும். பணியாளர்கள், பணியிடத்தில் வேண்டாததைப் பேச வேண்டாம். பெண்கள் நகை பாதுகாப்பில் கவனம். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் கொள்வர்.

பரிகாரம்:
முருகன் வழிபாடு, நம்பிக்கை வளர்க்கும்.

இனிய வார்த்தை பேசி, பிறர் மனம் கவரும், ரிஷப ராசி அன்பர்களே!

சந்திரன், சுக்கிரன், கேது ஓரளவு நற்பலன் தருவர். நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவதால், உரிய நன்மை கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உதவி கேட்பர். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். மனைவி, உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்வார். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும்.
பணியாளர்கள் பொறுப்புடன் பணிபுரிந்து நற்பெயர் பெறுவர். பெண்கள் சிக்கனமாக செலவழித்து பணம் சேமிப்பர். மாணவர்கள் வெளியிடம் சுற்றுவதை குறைப்பது நல்லது.

பரிகாரம்: அம்பிகை வழிபாடு, மகிழ்ச்சி தரும்.

சமூக நிகழ்வுகளை அனுபவமாக ஏற்று செயல்படும், மிதுன ராசி அன்பர்களே!

சனீஸ்வரர், சூரியன், புதன், சுக்கிரனால் அதிக நற்பலன் ஏற்படும். கடந்த கால உழைப்பிற்கான பலன் முழு அளவில் வந்து சேரும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. சமூகப் பணியிலும் ஈடுபாடு வளரும். புத்திரர்கள் விரும்பிக் கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள். உடல்நலம் ஆரோக்கியம் பெறும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவியின் பாசம் நெகிழ்ச்சி தரும். புதியவர்களின் ஆதரவினால் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும்,
பணவரவும் அதிகரிக்கும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு, வெகுமதி பெறுவர்.பெண்கள் குடும்பத்தேவையை நிறைவேற்றி நற்பெயர் பெறுவர். மாணவர்கள் நண்பர்களால் நன்மை பெறுவர்.

பரிகாரம்:
தட்சிணாமூர்த்தி வழிபாடு, மங்கள வாழ்வு தரும்.

தன்னைச் சார்ந்தவர்களுக்கும், நல்ல ஆலோசனை வழங்கும், கடக ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், ராகு செவ்வாய் அனுகூல பலன் தருவர். மதிநுட்பம் நிறைந்தவர்களின் அறிமுகம் உதவி கிடைக்கும். வளர்ச்சிப் பாதையில் நடை போடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் அன்பு கொள்வர். வாகன பயன்பாடு அதிகரிக்கும். புத்திரர்கள், உங்கள் சொல்படி நடந்து, நற்பெயர் பெற்றுத் தருவர். கடனில் ஒருபகுதியை செலுத்துவீர்கள். மனைவி, உங்களின் நல்ல குணங்களை பாராட்டுவார். தொழில், வியாபாரம் செழித்து, ஆதாய பணவரவு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடுவீர்கள். பணியாளர்கள், சிறப்பாக பணிபுரிந்து சலுகை பெறுவர். பெண்கள் ஆன்மிக சுற்றுலா செல்வர். மாணவர்கள் நன்றாகப் படித்து ஆசிரியரின் பாராட்டு பெறுவர்.

பரிகாரம்: துர்க்கை வழிபாடு, தைரியம் வளர்க்கும்.

மனசாட்சியை மதிக்கும், சிம்ம ராசி அன்பர்களே!

சுக்கிரன், புதன், சந்திரனால் ஓரளவு நன்மை உண்டு. தன்னால் இயலாது என ஒதுக்கி வைத்த பணியை, சிலரது வற்புறுத்தலினால் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டாம். வாகனத்தில் பராமரிப்பு செலவு கூடும். புத்திரர்களின் எண்ணங்களை அறிந்து வழிநடத்துவது குடும்பத்தில் நன்மையை உருவாக்கும். உடல்நிலை சுமாராக இருக்கும். மனைவி வழி உறவினர்கள் உதவிகரமாக நடந்து கொள்வர். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளவும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். பணியாளர்கள் அலுவலகத்தில் கடன் பெறுவதை தள்ளிப்போடவும். பெண்களுக்கு வீட்டுச் செலவுக்கு சற்று சிரமம் இருக்கும். மாணவர்கள் பெற்றோரின் கருத்துக்களை ஏற்பதால் நன்மை உண்டாகும்.

சந்திராஷ்டமம்: 22.11.15 காலை 6:00 மணி முதல் 23:11:15 காலை 10:39 மணி வரை.

பரிகாரம்: சிவன் வழிபாடு சகல நன்மை தரும்.

இருப்பது போதும் என மகிழ்வுடன் வாழும், கன்னி ராசி அன்பர்களே!

சுக்கிரன், சூரியன், சனீஸ்வரரால் நன்மை ஏற்படும். பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். விலகிய உறவினர்கள், சொந்தம் கொள்ள வருவர். புத்திரர்கள் சாந்தமாக செயல்பட்டு நற்பெயர் பெறுவர். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி கூடும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற தேவையான பண உதவி எளிய முயற்சியால் கிடைக்கும். பணியாளர்கள் குறித்த காலத்தில், பணிகளை முடித்து நற்பெயர் பெறுவர். பெண்கள் கணவரின் அன்பு, பணவசதி கிடைக்கும். மாணவர்கள் நண்பரின் உதவியால் படிப்பில் மேம்படுவர்.

சந்திராஷ்டமம்: 23.11.15 காலை 10:40 மணி முதல் 25:11:15 மதியம் 1:07 மணி வரை.

பரிகாரம்: மகாலட்சுமி வழிபாடு, வெற்றிக்கு வழி தரும்.

மன உறுதியுடன் செயல்படும் துலாம் ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், கேது நற்பலன் தருவர். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பர். வீடு, வாகனத்தில் அறிமுகம் இல்லாதவர்க்கு இடம் தர வேண்டாம். புத்திரர்களின் வெகுநாள் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உடல்நிலை ஆரோக்கியம் பெறும். மனைவியின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க மாற்றுத்திட்டம் உருவாகும்.
பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் தாய் வீட்டு உதவியைப் பெறுவர். மாணவர்களுக்கு புதியவர்களின் நட்பு கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: 25.11.15 மதியம் 1:08 மணி முதல் 27:11:15 மாலை 5:09 மணி வரை.

பரிகாரம்: விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

சமயோசிதமாக நடந்து வெற்றி பெறும், விருச்சிக ராசி அன்பர்களே!

செவ்வாய், சுக்கிரன், ராகு ஆதாய ஸ்தானத்தில் உள்ளனர். சுக்கிர மங்கள யோகத்தின் சுப பலன் கிடைக்கும். சமூக அந்தஸ்து கூடும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். புத்திரர்களின் அறிவுத்திறன் மேம்படும். பூர்வ சொத்தில் ஓரளவு பணம் வரும். பகைவர்கள் விலகிப் போவார்கள். மனைவி உங்கள் எண்ணப்படி நடந்து கொள்வார். வெளியூர் பயணம் இனிய அனுபவம் தரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கவனம் கொள்வீர்கள். பணியாளர்கள் பணவரவுக்கேற்ப செலவுகளை ஏற்பது சிரமம் தவிர்க்கும். பெண்கள் குடும்ப நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் நண்பரின் உதவியால் படிப்பில் முன்னேறுவர்.

சந்திராஷ்டமம்: 27.11.15 மாலை 5:10 மணி முதல் 28:11:15 இரவு 11.55 மணி வரை.

பரிகாரம்: பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.

பிறர் கருத்தை மதித்து நட்பைப் பேணும், தனுசு ராசி அன்பர்களே!

குரு மற்றும் சந்திரன் நன்மை தருவர். செயல்களில் முன்யோசனை வேண்டும். உடன்பிறந்தவர்களின் கருத்தை விமர்சிக்க வேண்டாம். வாகன பயன்பாடு அதிகரிக்கும்.
புத்திரர்களின் பிடிவாத குணத்தை சரிசெய்ய இதமான அணுகுமுறை நல்லது. கடன் வாங்குவதை தவிர்த்து சிக்கனமாக இருப்பது நல்லது. மனைவியின் மனதில் நம்பிக்கை வளர உதவுவீர்கள். பொது இடங்களில் எவரிடமும் அதிகம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் அதிக மூலதனம் தேவைப்படும். பணியாளர்கள் நிர்வாகத்தை அனுசரித்து செல்வது நல்லது. பெண்களின் நீண்டநாள் பிரார்த்தனை நிறைவேறும். மாணவர்கள் படிப்பு, பொது அறிவில் மேம்படுவர்.

பரிகாரம்: சாஸ்தா வழிபாடு இடர் நீக்கும்.

சத்தியத்தை மன உறுதியுடன் பின்பற்றும், மகர ராசி அன்பர்களே!

பெரும்பான்மை கிரகங்கள் ஆதாய பலன் தருவர். உங்களின் பொறுப்பான செயல் உறவினர்களிடம் பாராட்டு பெறும். தம்பி, தங்கை கேட்ட உதவியைச் செய்வீர்கள்.
புத்திர்களின் அறிவுத்திறன் வளர உங்களின் அனுபவங்களை சொல்வீர்கள். எதிரிகள் உங்களை விட்டு விலகுவர். உடல்நிலை பலம் பெறும். மனைவி ஒற்றுமையுடன் நடந்து குடும்பத்திற்கு பெருமை சேர்ப்பார். தொழில், வியாபாரம் செழித்து லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் பொறுப்புணர்வுடன் பணி செய்து சலுகை பெறுவர். பெண்களுக்கு பணவசதி தாராள அளவில் இருக்கும். மாணவர்கள் நன்றாக படிப்பர்.

பரிகாரம்:
ஆஞ்சநேயர் வழிபாடு, நன்மை தரும்

அடுத்தவர்களின் நலனையும் பாதுகாக்க உதவும், கும்ப ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், சூரியன் புதனால் அதிக நன்மை உண்டாகும். ஆர்வமுடன் செயல்படுத்துகிற பணிகள் அத்தனையும் சிறப்பாக நிறைவேறும். வாழ்வில் முன்னேற உதவியவர்களுக்கு நன்றி சொல்வீர்கள். புதிய வாகனம் வாங்க யோகம் உண்டு. புத்திரர்கள் படிப்பு, வேலையில் சிறப்பான இடம் பெறுவர். பூர்வ சொத்தில் வளர்ச்சியும், பணவரவும் கூடும். மனைவி உங்களின் நல்ல குணத்தை பாராட்டுவார். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபசெய்தி வரும். தொழில், வியாபாரத்தில் வருகிற இடையூறை தாமதமின்றி சரி செய்வதால், பணவரவு சீராகும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும். பெண்கள் குடும்பத்தின் எதிர்கால நலன் சிறக்க பணிபுரிவர். மாணவர்கள் படிப்பிலும், விளையாட்டிலும் ஆர்வம் கொள்வர்.

பரிகாரம் :
சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

மன்னிக்கும் மனப்பாங்கை பின்பற்றும், மீன ராசி அன்பர்களே!

சந்திரன் மட்டுமே நன்மை தருவார். மற்றவர்கள் புகழ்வதைக் கேட்டு ஏமாந்து போக வேண்டாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர்களுக்கு சிகிச்சை தேவைப்படலாம். யாரிடமும் தேவையற்றதை பேசி வம்பில் சிக்க வேண்டாம். மனைவியின் நம்பிக்கையை பெறும் வகையில் பாசம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிப்பதால், ஓரளவே லாபம் கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படி செயல்பட்டு பணித்திறனில் மேம்படுவர். பெண்கள் பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்க கூடாது. மாணவர்கள் படிப்பில் முன்னேற கடுமையாக பாடுபட வேண்டும்.

பரிகாரம்:
பைரவர் வழிபாடு வெற்றிக்குவழி தரும்.

Leave a Reply