வார ராசிபலன் 20.12.15 முதல் 26.12.15 வரை

download (5)

பொது நலனில் அக்கறையுள்ள, மேஷ ராசி அன்பர்களே!

ராகு, செவ்வாய் ஓரளவு நன்மை தருவர். குறுக்கிடுகிற சிரமங்களை சரி செய்வீர்கள். பணவரவில் தாமதம் இருக்கும். உடன்பிறந்தவர்கள் பாசம் கொள்வர். மனதில் நம்பிக்கை வளரும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர்கள் படிப்பு, செயல்திறனில் மேம்படுவர். இஷ்ட தெய்வ வழிபாட்டால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். பயணங்களால் அதிக பலன் இல்லை. அறிமுகமில்லாத பெண்களிடம் பேச வேண்டாம். வாழ்க்கைத் துணையின் செயல்களில் குளறுபடி ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். பணியாளர்கள் பொறுப்புடன் பணிபுரிவது அவசியம். பெண்கள் அடுத்தவர் விஷயத்தில் கருத்து சொல்ல வேண்டாம். மாணவர்கள் புதிய பயிற்சியால் முன்னேறலாம்.

பரிகாரம்: சிவன் வழிபாடு, சகல நன்மை தரும்.

இனிய வார்த்தை பேசும், ரிஷப ராசி அன்பர்களே!

புதன், கேது, சந்திரனால் நன்மை உண்டாகும். நற்செயலால் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் மதிப்பு பெறுவீர்கள். குடும்ப செலவுக்கான பணவரவு திருப்திகர அளவில் இருக்கும்; ஆனால் செலவுகள், வரவை விட அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வாகனத்தை பராமரிப்பதால் பின்வரும் சிரமங்களில் இருந்து தப்பலாம். புத்திரர்கள், பெற்றோர் சொல்கேட்டு நடந்து படிப்பில் முன்னேற்றம் காண்பர். மனைவி வழி சார்ந்த உறவினர்களை விமர்சிக்க வேண்டாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்க கூடுதல் உழைப்பு உதவும். பணியாளர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை மிக கவனமுடன் பின்பற்றுவர். பெண்கள், பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்க வேண்டாம். மாணவர்கள் படிப்பு தவிர மற்ற விஷயங்களில் ஈடுபாடு தவிர்க்கவும்.

பரிகாரம்:
முருகன் வழிபாடு, நம்பிக்கை வளர்க்கும்.

நல்ல அறிவுரையை ஏற்கும், மிதுன ராசி அன்பர்களே!

சுக்கிரன், சனி வியத்தகு நற்பலன் தருவர். மனதில் புத்துணர்வு ஏற்படும். தாமதமான பணிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். தேவையின்றி புகழ்ந்து பேசுவோரிடம் கவனமாக இருக்கவும். புத்திரர்கள் கேட்ட பரிசுப்பொருள் வாங்கித் தருவீர்கள். பூர்வ புண்ணிய பலன் அதிக நன்மை தரும். மனைவியின் நல்ல செயல்களை மனதார பாராட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வருகிற இடையூறுகளை தாமதமின்றி சரி செய்யவும். பணியாளர்கள் கடன் பெறுவதில் நிதானம் வேண்டும். பெண்கள் குடும்பநலன் சிறக்க தேவையான பணி மேற்கொள்வர். மாணவர்கள் சாகச விளையாட்டுகளில் ஈடுபடக் கூடாது.

பரிகாரம்:
பைரவர் வழிபாடு, சங்கடம் தீர்க்கும்.

எல்லாரையும் மதித்து நடக்கும், கடக ராசி அன்பர்களே!

குரு, சனி, கேது தவிர, மற்ற கிரகங்கள் அளப்பரிய நற்பலன் தருவர். செயல்கள் இனிதாக நிறைவேற, பூர்வபுண்ணிய பலத்துடன் முருகப்பெருமானின் நல்லருள் துணை நிற்கும். துணிச்சல் மிகுந்த பணிகளால் புகழும், நற்பெயரும் கிடைக்கும். புத்திரர்களுக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மனைவி விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து சமூக அந்தஸ்து கூடும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள், கணவருடன் ஒற்றுமையாக இருப்பர். மாணவர்கள் படிப்புடன் கலைத் துறையிலும் ஆர்வம் கொள்வர்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு மங்கள வாழ்வு தரும்.

காலத்தை பொன் போல கருதி செயல்படும் சிம்மராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், சந்திரனால் நன்மை அதிகரிக்கும். எதிர்காலம் குறித்து திட்டம் திட்டுவீர்கள். பேச்சில் நிதானம் வேண்டும். தாமதமான பணிகளை நினைவுபடுத்தி நிறைவேற்றுவீர்கள். புத்திரர்களின் போக்கை இனிய அணுகுமுறையால் சரி செய்யவும். உடல்நலத்திற்காக செலவிட வேண்டி வரும். விஷப்பிராணிகளால் பிரச்னை வரலாம். கவனம். வாழ்க்கைத்துணையின் எண்ணமும், செயலும் குடும்பத்திற்கு பெருமை தேடித்தரும். பயணங்களால் அதிக பலன் இராது. தொழில், வியாபாரம் செழித்து பணவரவு கூடும். பணியாளர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும். பெண்கள் கணவருடன் இணக்கமாக இருந்து பிரச்னைகளை பேசி தீர்வு காண்பர். மாணவர்கள் பாதுகாப்பு குறைந்த இடங்களுக்கு செல்லக்கூடாது.

சந்திராஷ்டமம்: 20.12.15 காலை 6:00 மணிமுதல் மாலை 6:47 மணி வரை.

பரிகாரம் : துர்க்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுள்ள கன்னிராசி அன்பர்களே!

சனி, சுக்கிரன், புதன் நற்பலன் தருவர். உங்களைச் சார்ந்தவர்களின் நலனில் அக்கறை கொள்வீர்கள். புத்திரர்கள் உங்கள் சொல் கேட்டு நடப்பர். குடும்ப செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். மனைவியின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவீர்கள். குடும்ப விவகாரங்களில் சமரச பேச்சு வார்த்தை நல்ல தீர்வு தரும். தொழிலில், உற்பத்தி விற்பனை அதிகரிக்க புதியவர்களின் ஆதரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு வேலைப்பளு குறைவதுடன் சில சலுகைகளும் கிடைக்கும். பெண்களின் நற்செயலுக்கு அங்கீகாரமும் உதவியும் கிடைக்கும். மாணவர்களுக்கு புதியவர்களின் நட்பு நன்மை தரும்.

சந்திராஷ்டமம்: 20.12.15 மாலை 6:48 மணி முதல் 22.12.15 இரவு 9:27 மணிவரை.

பரிகாரம்: பைரவர் வழிபாடு நன்மை தரும்.

இருப்பதை வைத்து சிறப்பாக வாழும் துலாம் ராசி அன்பர்களே!

சுக்கிரன், கேது, சந்திரன் நற்பலன் தருவர். ஆடம்பர செலவைத் தவிர்க்கவும். புத்திரர்களின் செயல் பதட்டம் நிறைந்த வியப்பு தரும். உடல்நலத்தில் அக்கறை வேண்டும். வாழ்க்கைத்துணை கருத்து இணக்கம் கொள்வார். தொழில், வியாபாரம் அதிக உழைப்பால் வளரும். பணியாளர்கள் சுறுசுறுப்பாக பணிபுரிந்து நிர்வாகத்திடம் நற்பெயர் பெறுவர். பெண்களுக்கு வீட்டுச்செலவு அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் கொள்ளவும்.

சந்திராஷ்டமம்: 22.12.15 இரவு 9:28 மணி முதல் 24.12.15 இரவு 1:18 மணி வரை.

பரிகாரம்:
அம்மன் வழிபாடு மங்கள வாழ்வு தரும்.

நேர்மையாக நடக்க விரும்பும் விருச்சிகராசி அன்பர்களே!

குரு, செவ்வாய், ராகு, சுக்கிரனால் நன்மை கிடைக்கும். குரு மங்கள, சுக்கிர மங்கள யோகங்களின் பலத்தால் செல்வவளம் உயரும். பிரியமானவர்களுக்கு உதவுவீர்கள். தாயின் வாழ்த்து கிடைக்கும். புத்திரர்கள் அறிவு, செயல்திறனில் மேம்படுவர். குடும்பத்தில் மங்கள நிகழ்வு ஏற்படும். உடல்நிலை சீரடைந்து பணிபுரிவது எளிதாக இருக்கும். சுபசெய்தி வந்து சேரும். மனைவி விரும்பிக் கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து சேமிப்பு கூடும். பணியாளர்கள் திறமையை வெளிப்படுத்தி அதிக சலுகை பெறுவர். பெண்கள் உறவினர்களுக்கு உதவுவர். மாணவர்கள் நன்றாக படித்து பெற்றோர், ஆசிரியரிடம் பாராட்டு பெறுவர்.

சந்திராஷ்டமம்: 24.12.15 இரவு 1:18 மணி முதல் 26.12.15 இரவு 12:00 மணி வரை.

பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு வெற்றி தரும்.

குடும்ப பெருமையைக் காப்பதில் அக்கறையுள்ள தனுசு ராசி அன்பர்களே!

சந்திரன், சுக்கிரன் ஓரளவு நற்பலன் தருவர். எதிர்பார்ப்பு நிறைவேற தாமதமாகலாம். கடன் பெறுவதில் நிதானம் வேண்டும். வாகனம் இயக்கும் போது மிதவேகமாக செல்லவும். புத்திரர்கள் அதிருப்தியான எண்ணங்களால் செயல்திறனில் பின்தங்குவர். உடல்நிலை சீராக இருக்கும். சொத்து ஆவணங்களை பிறர் பொறுப்பில் தர வேண்டாம். மனைவி நல்ல ஆலோசனை சொல்லி குடும்ப நிலையை உயர்த்த உதவுவார். குடும்பச் செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டியை பொறுமையாக சமாளிப்பீர்கள். பணியாளர்கள் சக பணியாளர்களுடனோ, நிர்வாகத்துடனோ விவாதம் செய்ய வேண்டாம். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் பாதுகாப்பு குறைந்த இடங்களுக்கு செல்லக்கூடாது.

பரிகாரம்:
சாஸ்தா வழிபாடு இடர் நீக்கும்.

ஆன்மிக பணிகளில் ஆர்வம் மிகுந்த மகரராசி அன்பர்களே!

சனி, கேது, குரு சுப பலன்களை தருவர். ஆன்மிக நம்பிக்கை வளரும். உங்கள் செயல் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்களின் வாழ்வு வளம்பெற உதவுவீர்கள். சேமித்து வைத்த பணம் உறவினர் வரவால் செலவாகும். வாகனங்களை பாதுகாப்பதில் அதிக கவனம் வேண்டும். புத்திரர்களின் மனநிலையை புத்திமதி சொல்லி சரி செய்வீர்கள். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். மனைவியின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவதால் குடும்ப ஒற்றுமை சீராகும். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டங்களை தவறாமல் பின்பற்றவும். பெண்கள் பணவரவுக்கேற்ப செலவு செய்வர். மாணவர்கள் கூடுதல் பயிற்சியால் படிப்பில் உரிய தேர்ச்சி பெறுவர்.

பரிகாரம்: நரசிம்மர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

சிறிய நன்மையையும் பெரிதென போற்றும் கும்பராசி அன்பர்களே!

சூரியன், புதன், சுக்கிரன் நன்மை தருவர். புதியவர்களின் உதவி கிடைக்கும். வீட்டில் வரவு செலவை சரி செய்வீர்கள். வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. புத்திரர்கள் நேர்மையாக நடந்து பெற்றோருக்கு பெருமை சேர்ப்பர். பூர்வசொத்தில் பணவரவு அதிகரிக்கும். உடல்நிலையில் கவனம் வேண்டும். வாழ்க்கைத்துணை உங்களின் எண்ணங்களை செயல்படுத்த ஒத்துழைப்பு தருவார்.தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற மாற்றுத்திட்டம் உருவாக்குவீர்கள். பணியாளர்கள் அலுவலகத்தில் கடன் பெறுவதை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு பணவரவு அதிகரிக்கும். மாணவர்கள் ஞாபகத்திறனை வளர்த்து படிப்பில் மேம்படுவர்.

பரிகாரம்: பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.

பிறருடன் பாசத்துடன் பழகும் மீனராசி அன்பர்களே!

சூரியன், புதன், குரு, சுக்கிரன் அளப்பரிய நற்பலன் தருவர். இந்த வார நிகழ்வுகள் இனிதாக அமையும். புதிய திட்டங்களை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து கூடும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி வளரும். பயணங்கள் இனிய அனுபவத்தை தரும். புத்திரர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வர். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். நண்பர்களிடம் கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். மனைவி வழிசார்ந்த உறவினர்களால் உதவி உண்டு. தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரித்து சேமிப்பு கூடும். பணியாளர்கள் சுறுசுறுப்பாக செயல்படுவர் பெண்கள் தாராள பணவசதி கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். மாணவர்கள் சிறப்பாக படித்து அதிக தேர்ச்சி பெறுவர்.

பரிகாரம்:
விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

Leave a Reply