shadow

download (3)

தன்னம்பிக்கையுடன் செயல்படும், மேஷ ராசி அன்பர்களே!

சுக்கிரன், குரு, சூரியன், ராகு அதிக நன்மை அளிப்பர். உறவினர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும். வருமானம் புதிய வழியில் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும். பிள்ளைகளின் செயல்பாடு பெருமை அளிக்கும். வம்பு, வழக்கில் வெற்றி உண்டாகும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சியும், லாபமும் கூடும். பணியாளர்கள் பணிகளை விரைந்து முடிப்பர். பெண்கள் மனம் போல ஆடை, ஆபரணம் வாங்குவர். மாணவர்களுக்கு ஆசிரியர் நல்ல வழிகாட்டுவர்.

சந்திராஷ்டமம்: 20.9.15 காலை 6:00 மணி முதல் 21.9.15 அதிகாலை 3:48 மணி வரை.

பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதால், பொன், பொருள் சேரும்.

கருணை மனதுடன் பிறருக்கு உதவும், ரிஷப ராசி அன்பர்களே!

சுக்கிரன், புதன், கேதுவினால் நன்மை உண்டாகும். நண்பரால் உதவி கிடைக்கும். சமூகத்தில் உயர் அந்தஸ்து பெறுவீர்கள். பணிகள் அனைத்தும் குறித்த காலத்தில் நிறைவேறும். வீடு, வாகனத்தில் உரிய பாதுகாப்பு நடைமுறையைப் பின்பற்றவும். பிள்ளைகள், உங்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பர். ஆடம்பர விஷயத்தில் ஆர்வம் உண்டாகும். மனைவியின் அன்பைக் கண்டு மனம் நெகிழ்வீர்கள். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் குடும்ப வளர்ச்சிக்காகப் பாடுபடுவர். மாணவர்கள் படிப்பில் உற்சாகமுடன் ஈடுபடுவர்.

சந்திராஷ்டமம்: 21.9.15 அதிகாலை 3:49 முதல் 23.9.15 காலை 9:36 மணி வரை.

பரிகாரம்: பைரவரை வழிபட்டால் துன்பம் விலகும்.

ஆர்வமுடன் பணியில் ஈடுபடும், மிதுன ராசி அன்பர்களே!

சனி, சுக்கிரனால் நன்மை கிடைக்கும். சூழ்நிலை அறிந்து நிதானமாகச் செயல்படுவது நல்லது. வீடு, வாகனத்தில் பராமரிப்புச் செலவு உண்டாகும். பிள்ளைகள் ஆடம்பர விஷயத்தில் நாட்டம் கொள்வர். எதிரியின் கெடுசெயல் கூட நன்மை தருவதாக மாறும். மனைவியின் ஆலோசனையை ஏற்பது நன்மை தரும். தொழில், வியாபாரத்தில், புதிய உத்தி மூலம் லாபம் உண்டாகும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டத்தை தவறாமல் பின்பற்றவும், பெண்கள், வீட்டுச் செலவில் சிக்கனத்தைப் பின்பற்றுவர். மாணவர்கள் படிப்பு தவிர, பிற விஷயங்களில் ஈடுபட வேண்டாம்.

சந்திராஷ்டமம்: 23.9.15 காலை 9:37 மணி முதல் 25.9.15 மதியம் 1:24 மணி வரை.

பரிகாரம்:
காமதேனு வழிபாடு, செல்வ வளம் தரும்.

பிறர் கருத்துக்கு மதிப்பளிக்கும், கடக ராசி அன்பர்களே!

சுக்கிரன், குரு, சூரியன், ராகுவால் நன்மை உண்டாகும். பேச்சு, செயலில் புத்துணர்வு வெளிப்படும். சமூகத்தில், பெரிய மனிதரின் உதவி கிடைக்கும். சகோதரர்களின் வளர்ச்சிக்குத் தேவையான பணிபுரிவீர்கள். வாகன பயணம் எளிதாக அமையும். புத்திரரின் தவறுகளை இதமான அணுகுமுறையால் சரிசெய்வீர்கள். கடனில் பெரும்பகுதி அடைபடும். மனைவியின் அன்பை பெற்று மகிழ்வீர்கள். தொழில், வியாபார வளர்ச்சிக்கான புதிய மாற்றத்தில் ஈடுபடுவீர்கள்; லாபம் கூடும். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பெண்கள், உறவினர் மத்தியில் செல்வாக்கு காண்பர். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம்: 25.9.15 மதியம் 1:25 மணி முதல் 26.9.15 நள்ளிரவு 12:00 மணி வரை.

பரிகாரம்:
துர்க்கை வழிபாட்டால், தொழில் வளர்ச்சி உண்டாகும்.

நற்செயலால் சமூக அந்தஸ்து பெறும், சிம்ம ராசி அன்பர்களே!

சுக்கிரன், சந்திரன் நற்பலன் அளிப்பர். பணிகளை நிறைவேற்ற கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். வீண் விவாதங்களில் ஈடுபடுவது கூடாது. கண்களின் பாதுகாப்பில் கவனம் தேவை. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. புத்திரர்கள் பிடிவாத குணத்துடன் நடந்து கொள்வர். சீரான ஓய்வு உடல்நலனைப் பாதுகாக்கும். மனைவி, உங்களின் செயல்பாடுகளில் சமபங்கு ஏற்றுக் கொள்வார். தொழில், வியாபாரத்தில் இடையூறு ஏற்பட்டாலும், லாபம் குறையாது. பணியாளர்களுக்கு பணிச்சுமை உண்டாகலாம். பெண்கள் பணப்பொறுப்பு ஏற்பது கூடாது. மாணவர்கள் வெளியிடம் சுற்றுவதை தவிர்க்கவும்.

பரிகாரம்:
விநாயகர் வழிபாடு, நன்மை அளிக்கும்.

குடும்ப நலனில் அக்கறை கொண்ட, கன்னி ராசி அன்பர்களே!

சுக்கிரன், செவ்வாய், சனியால் நன்மை உண்டாகும். தாமதமான பணிகளை விடாமுயற்சியால் நிறைவேற்றுவீர்கள். உறவினரின் செயல்களைக் குறை சொல்ல வேண்டாம். சகோதரர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். புத்திரர் படிப்பு, வேலையில் முன்னேற்றம் காண்பர். மனைவியின் நற்செயல் குடும்பத்திற்கு பெருமை அளிக்கும். தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கேற்ப வளர்ச்சி உண்டாகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர். மாணவர்கள் பாதுகாப்பற்ற இடத்திற்குச் செல்ல வேண்டாம்.

பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு வெற்றியளிக்கும்.

இனிமையுடன் பேசுவதில் வல்ல, துலாம் ராசி அன்பர்களே!

கேது, குரு, புதன் நற்பலன் வழங்குவர். மனதில் தைரியம் மேலோங்கும். இடம், சூழ்நிலை உணர்ந்து பேசுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவு ஏற்படும். வெளியூர் பயணம் இனிதாக அமையும். புத்திரர் படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். ஆரோக்கிய விஷயத்தில் அக்கறை கொள்வீர்கள். மனைவியின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணை நிற்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும், ஆதாயமும் கிடைக்கப் பெறுவீர்கள். பணியாளர்களுக்கு சலுகைப் பயன் கிடைக்கும். பெண்கள் மற்றவர் விஷயத்தில் தலையிட வேண்டாம். மாணவர்கள், ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்பது நல்லது.

பரிகாரம்:
அம்மன் வழிபாடு, சகல நன்மையும் தரும்.

இயன்ற அளவில் பிறருக்கு உதவும், விருச்சிக ராசி அன்பர்களே!

சுக்கிரன், புதன் சூரியன், ராகு அனுகூல அமர்வில் உள்ளனர். நற்செயல்களில் ஈடுபட்டு பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில், ஒற்றுமை சிறக்கும். புத்திரரின் செயல்பாடு பெருமையளிக்கும். பகைவரால் இருந்த தொல்லை மறையும். மனைவியின் அன்பைக் கண்டு மகிழ்வீர்கள். விருந்து விழாவில் அடிக்கடி பங்கேற்பீர்கள். தொழில், வியாபாரத்தில், விற்பனை சிறந்து லாபம் அதிகரிக்கும். பணியாளர், குறித்த காலத்தில் பணிகளை விரைந்து நிறைவேற்றுவர். பெண்கள், உறவினர் இல்ல சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பர். மாணவர்கள் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறுவர்.

பரிகாரம்: லட்சுமி வழிபாட்டால், செல்வ வளம் சேரும்.

திறமையுடன் பணியாற்றும் தனுசு ராசி அன்பர்களே!

சுக்கிரன், புதன் சூரியனால் நன்மை கிடைக்கும். தாமதமான பணிகளும் புதிய முயற்சியால் நிறைவேறும். நண்பரால் உதவி உண்டு. வீடு, வாகனத்தில் பராமரிப்பு செலவு உண்டாகும். புத்திரர்கள் வளர்ச்சி பெற, தேவையான ஆலோசனை வழங்குவீர்கள். எதிரியால் ஏற்படும் மறைமுக இடையூறு விலகும். இல்லறத்துணை இணக்கமாக நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் அறிவுத்திறனில் மேம்படுவர்.

பரிகாரம்: சிவனை வழிபடுவதால், வாழ்வு சிறக்கும்.

நிதானமுடன் செயல்பட்டு வெற்றி பெறும், மகர ராசி அன்பர்களே!

கேது, புதன், சனீஸ்வரர் நற்பலன் தருவர். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். மனதில் ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினர் அன்பு பாராட்டுவர். வீடு, வாகன பாதுகாப்பில் கவனம் தேவை. புத்திரர்களின் செயல்பாடு அதிருப்திக்கு ஆளாவீர்கள். கடனில் பெரும்பகுதியைச் செலுத்துவீர்கள். மனைவியின் உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். தொழில், வியாபாரத்தில் மூலதனத்தை அதிகப்படுத்தி லாபம் காண்பீர்கள். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்கள் அறிமுக இல்லாதவரிடம் பழக வேண்டாம். மாணவர்கள் சாகச விளையாட்டில் ஈடுபடக் கூடாது.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு, நன்மை தரும்.

உதவும் மனப்பான்மை கொண்ட, கும்ப ராசி அன்பர்களே!

செவ்வாய், குரு நன்மை தருவர். மனதில் தெளிவு ஏற்படும். பணி நிறைவேற்ற புதிய உத்திகளில் ஈடுபடுவீர்கள். அறிமுகம் இல்லாதவருக்கு வீடு, வாகனத்தில் இடம் தர வேண்டாம். புத்திரர் பிடிவாத குணத்துடன் நடந்துகொள்வர். உடல் நலனில் அக்கறை தேவை. மனைவியின் செயல் குறையை விமர்ச்சிக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் புதிய உத்தி மூலம் வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். பணியாளர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு, சம்பள உயர்வு கிடைக்கும். பெண்கள் உறவினர்களுடன் சுற்றுலா செல்வர். மாணவர்கள் நண்பர்களுடன் நிதானமாகப் பழகுவது நல்லது.

பரிகாரம்:
சனீஸ்வரர் வழிபாடு, செய்வது நல்லது.

அனுபவத்தை படிப்பினையாக ஏற்கும், மீன ராசி அன்பர்களே!

சுக்கிரன், புதனால் நன்மை உண்டாகும். இடம், சூழல் அறிந்து பேசுவது நல்லது. மகளின் ஜாதக யோக பலத்தால் நன்மை காண்பீர்கள். வாகன பயணத்தால் இனிமை உண்டாகும். புத்திரர் மதிநுட்பத்துடன் செயல்படுவர். வழக்கு விவகாரத்தில் சுமுகத் தீர்வு உண்டாகும். மனைவியின் செயல்பாடு வளர்ச்சிக்கு துணைநிற்கும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி சிறந்து ஆதாயம் காண்பீர்கள். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்கள், தாய்வீட்டு உதவி கேட்டுப் பெறுவர். மாணவர்கள் திட்டமிட்டுப் படித்து கல்வி வளர்ச்சி காண்பர்.

பரிகாரம்:
சூரிய வழிபாடு, தொழில் வளர்ச்சி தரும்.

 

Leave a Reply