shadow

download (2)

நினைத்ததை நிறைவேற்ற புதுமையைப் பின்பற்றும், மேஷ ராசி அன்பர்களே!

உங்களுக்கு செவ்வாய், குரு, சுக்கிரன், ராகு அளப்பரிய பலன் தருவர். முருகப்பெருமானின் நல்லருள் துணை நிற்கும். எதிரிகளால் இருந்த தொல்லை விலகும். வாகனத்தில் பராமரிப்பு தேவைப்படும். புத்திரர்கள் அறிவு, செயல்திறனில் மேம்படுவர். குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சி நடந்தேறும். உறவினர் சொந்தங்களை அறிமுகம் செய்வர். இல்லறத்துணை அதிக அன்பு, பாசம் கொள்வார். தொழில், வியாபாரம் செழித்து வளரும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள், தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் அடைவர்.

பரிகாரம்:
சிவன் வழிபாடு, தொழிலில் வளர்ச்சி தரும்.

நேர்த்தியுடன் பணி செய்யும், ரிஷப ராசி அன்பர்களே!

உங்களுக்கு சூரியன், சுக்கிரன், சனி, கேது நற்பலன் தருவர். சுய கவுரவத்தைக் காப்பாற்றும் வகையில் செயல்படுவீர்கள். உறவினர்களின் உதவி கிடைக்கும். நிகழ்வுகள் இனிதாக அமையும். தாயின் அன்பு, ஆசி ஊக்கம் தரும். புத்திரர்களின் குறைகளைக் கண்டிப்பதில் நிதானம் வேண்டும். வாழ்க்கைத் துணை உங்களின் நல்ல செயல்களை ஊக்கப்படுத்துவார். தொழில், வியாபாரத்தில் போட்டி குறைந்து வளர்ச்சி அதிகரிக்கும். பணியாளர்கள் அக்கறையுடன் பணி புரிந்து நற்பெயர் பெறுவர். பெண்கள், புத்தாடை, அணிகலன் வாங்குவர். மாணவர்கள் படிப்பு, ஆன்மிக அறிவில் தெளிவு பெறுவர்.

பரிகாரம்: குபேரலட்சுமியை வழிபடுவதால் பணவரவு கூடும்.

துன்பப்படுவோருக்கு ஆறுதலாக இருந்து உதவும், மிதுன ராசி அன்பர்களே!

உங்களுக்கு நவக்கிரகங்களில் சுக்கிரன், சந்திரன் ஓரளவு நற்பலன் தருவர். தகுதிக்கு மீறிய திட்டங்களில் கால் வைக்க வேண்டாம். புதியவர்களின் அன்பு, ஆதரவு கிடைக்கும். வீடு, வாகனத்தில் கூடுதல் பாதுகாப்பு வேண்டும். புத்திரர்கள் உங்கள் சொல் கேட்டு நடப்பர். சத்தான உணவு உண்பதால் ஆரோக்கியம் பலம் பெறும். மனைவி உறுதுணையாக நடந்து கொள்வார். கடின உழைப்பால் தொழில், வியாபாரத்தில் பணவரவு சீராகும். பணியாளர்கள் வேலையில் குளறுபடி வராமல் கவனம் கொள்ளவும். பெண்கள் பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்லி திருத்துவர். மாணவர்கள் படிப்பு தவிர பிற விஷயங்களை விட்டு விலகுவது பிரச்னையைத் தவிர்க்கும்.

பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு, மனதில் நம்பிக்கையை வளர்க்கும்.

உண்மையான செல்வம் மன அமைதியே என வாழும், கடக ராசி அன்பர்களே!

உங்களுக்கு குரு, சுக்கிரன், ராகு அனுகூல அமர்வில் உள்ளனர். வார்த்தையின் வசீகரம் புதியவர்களின் அன்பை பெற்றுத் தரும். செயல்கள் நல்லவிதமாக அமைந்து புகழ் பெறுவீர்கள். வாகன பராமரிப்பு செலவு, பயணக் கட்டணம் அதிகரிக்கும். புத்திரர்களின் செயலை ஒழுங்குபடுத்துவீர்கள். எதிர்பார்த்த சுபசெய்தி கிடைக்கும். மனைவி வழி உறவினர்கள், உங்கள் நல்ல குணத்தை பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற கிடைக்கிற வாய்ப்பை தவறாமல் பயன்படுத்துவீர்கள். பணியாளர்கள் நேரம் தவறாமையை பின்பற்றினால் சம்பள வெட்டைத் தடுக்கலாம். பெண்கள் குடும்பநலன் சிறக்க பணி மேற்கொள்வர். மாணவர்கள் விரும்பிய பொருள் வாங்குவர்.

பரிகாரம்:
தட்சிணாமூர்த்தி வழிபாடு, மனதில் தெளிவு தரும்.

சமயோசிதமாக செயல்பட்டு சாதனை புரியும், சிம்ம ராசி அன்பர்களே!

உங்களுக்கு சுக்கிரன், சனி, செவ்வாய், புதன் அனுகூல பலன் தருவர். பாக்கிப் பணம் வசூலாகும். உடல்நலம் ஆரோக்கியம் பெறும். நடை, உடை, செயலில் வசீகரம் ஏற்படும். பேசும் வார்த்தையில் நிதானம் இருக்கும். பணிகள் சுறுசுறுப்பாக நிறைவேறும் உடன் பிறந்தவர்கள் அன்புடன் நடந்து கொள்வர். புதிய வீடு, வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. புத்திரர், உங்கள் சொல் கேட்டு நடப்பர். இல்லறத்துணை, உங்களின் நல்ல திட்டங்களுக்கு உறுதுணையாக இருப்பார். விருந்து, விழாவில் பங்கேற்பீர்கள். தொழில், வியாபாரம் செழிக்கும். பணியாளர்கள் அக்கறையுடன் பணிபுரிந்து நற்பெயர் பெறுவர். பெண்கள் அலங்காரப் பொருள் வாங்குவர். மாணவர்களுக்கு மதிப்பெண்கள் உயரும்.

பரிகாரம்:
சனிபகவான் வழிபாடு நன்மை தரும்.

சிறு செயலையும், பொறுப்புடன் நிறைவேற்றும், கன்னி ராசி அன்பர்களே!

உங்களுக்கு புதன், சூரியன், சுக்கிரன் தீபஸ்தம்ப யோக அமைப்பில் அதிர்ஷ்டகர பலன் வழங்குவர். நற்பெயரும், புகழும் தேடி வரும். பணவரவை விடசெலவு கூடும். உறவினர் வருகை மகிழ்ச்சி தரும். ஆன்மிக வழிபாடு நடத்துவீர்கள். புத்திரர்களின் எதிர்கால நலனில் கவனம் கொள்வீர்கள். சரியான நேரத்தில் சாப்பிடுவதால், ஆரோக்கியம் சீராகும். இல்லறத் துணையின் நல்ல கருத்தை ஏற்பீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்களுக்கு மதிப்பு, மரியாதை கூடும். மாணவர்கள் புதிய முயற்சி முறைகளைப் பின்பற்றி படிப்பில் முன்னேறுவர்.

பரிகாரம்:
நரசிம்மர் வழிபாடு அதிர்ஷ்டகர பலன் தரும்.

பாராட்டை தேடாமல் தானாக வருமென காத்திருக்கும், துலாம் ராசி அன்பர்களே!

உங்களுக்கு கேது, சூரியன் குரு, சுக்கிரன் அனுகூலமாக உள்ளனர். இஷ்டதெய்வ அருள் துணை நின்று உதவும். நல்ல முயற்சி முழுஅளவில் நன்மை தரும். மனதில் நிம்மதி நிலைத்திருக்கும். புத்திரர்கள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். ஓய்வு எடுப்பதற்கு நேரம் கிடைக்கும்.
இல்லறத்துணை வழி சார்ந்த உறவினர்கள் அதிக அன்புடன் நடந்து கொள்வர். தொழில், வியாபாரத்தில் அரசு உதவி பெற அனுகூலம் உண்டு. பணியாளர்கள் அதிக வேலைவாய்ப்பு, சன்மானம் பெறுவர். பெண்கள், மகிழ்ச்சிகரமான மனதுடன் செயல்படுவர். மாணவர்கள் படிப்பில் புதிய சரித்திரம் படைப்பர்.

பரிகாரம்:
பெருமாள் வழிபாடு குடும்பத்தில் மகிழ்ச்சியை தரும்.

லட்சியம் நிறைவேற மனஉறுதியுடன் செயல்படும், விருச்சிக ராசி அன்பர்களே!

உங்களுக்கு புதன், ராகுவின் நல்லருள் பலமாக உள்ளது. எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். தாமதமான பணி முன்னேற்ற பாதையில் நடைபோடும். உடன் பிறந்தவர்களின் கருத்தை உதாசீனம் செய்ய வேண்டாம். புத்திரர்களின் மனதில் விரக்தி உருவாகலாம். பொறுமையாக அதை சரி செய்யவும். பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்லக் கூடாது. இல்லறத்துணை வகையில் மருத்துவச் செலவு வரலாம். தொழில், வியாபாரத்திற்காக கடன் பெறுவதில் நிதானம் வேண்டும். பணியாளர்களுக்கு சலுகைகள் சற்று குறையலாம் என்பதால், செலவில் சிக்கனம் வேண்டும். பெண்கள், அடுத்தவர் விஷயத்தில் தலையிட்டால் பிரச்னை வரும். கவனம். மாணவர்கள் ஓரளவு படிப்பர்.

பரிகாரம்:
தன்வந்திரியை வழிபடுவதால், உடல் நலம் சீராகும்.

பிறருக்கு தெரியாமல் தாராள உதவி செய்யும், தனுசு ராசி அன்பர்களே!

உங்களுக்கு குரு, சுக்கிரன் சனி நற்பலன் தருவர். எண்ணமும், செயலும் ஒருமுகத்தன்மையுடன் இருக்கும். முக்கியஸ்தரின் உதவி கிடைக்கும். பொது இடங்களில் நடக்கும் வாக்குவாதங்களைக் கண்டால் ஒதுங்கிப் போகவும். வாகன பராமரிப்பு, பயணச் செலவு குறையும். புத்திரர்கள் செய்யும் சேஷ்டைகளை இதமாக சரி செய்யவும். உடல் நலம் ஆரோக்கியம் பெறும். இல்லறத்துணை கருத்து ஒற்றுமை கொள்வார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும் நிறைந்த லாபமும் கிடைக்கும். பணியாளர்கள் பணியிட சூழல் உணர்ந்து செயல்பட்டு நற்பெயர் பெறுவர். பெண்கள், பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் பரிசு, பாராட்டு பெறுவர்.

பரிகாரம்:
பைரவரை வழிபடுவதால் சிரமம் விலகும்.

தெய்வ அருளை நாடி நல்வழியில் நடைபோடும் மகர ராசி அன்பர்களே!

உங்களுக்கு கேது, புதன், செவ்வாய், சுக்கிரன் நற்பலன் தருவர். செல்வவளம் அதிகரிக்கும். உறவினர்கள் பாசத்துடன் நடந்து கொள்வர். பொதுப்பணியில் ஈடுபாடு வளரும். பயணங்கள் இனிதாக அமையும். புத்திரர்களின் சொல்லும், செயலும் பெருமை தேடி தரும். வழக்கு, விவகாரம் அணுகாத சுமுக வாழ்வு உருவாகும். இல்லறத்துணை உங்கள் திட்டங்கள் நிறைவேற உதவுவார். தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடு செய்வீர்கள். பணியாளர்கள் குறித்த நேரத்தில் பணி இலக்கை நிறைவேற்றி நற்பெயர் பெறுவர். பெண்கள் தங்களுக்கு கிடைக்கும் சிறு நன்மையையும் பெரிதெனப் போற்றுவர். மாணவர்கள் படிப்புடன் விளையாட்டிலும் ஆர்வம் கொள்வர்.

சந்திராஷ்டமம்:
19.7.15 காலை 6:00 முதல் 21.7.15 காலை 6:37 மணி.

பரிகாரம்: மாரியம்மன் வழிபாடு தொழிலில் வளர்ச்சி தரும்.

புதிய கருத்துகளை துணிந்து வரவேற்கும் கும்ப ராசி அன்பர்களே!

உங்களுக்கு சூரியன், குரு அனுகூலமாக உள்ளனர். சுய திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். பணவரவைப் பெருக்க பல வழிகள் உருவாகும். தவறாமல் பயன்படுத்துங்கள். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு வரலாம். அறிமுகம் இல்லாதவர்களுக்கு வீடு, வாகனத்தில் இடம் தர வேண்டாம். புத்திரர்களின் எண்ணங்களை புறக்கணிக்க வேண்டாம். நீண்ட தூர பயணத்தை பயன் அறிந்து மேற்கொள்ளவும். இல்லறத் துணையின் மனதில் உங்கள் மீதான நம்பிக்கையை வளருங்கள். தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை உண்டு. பெண்களுக்கு வீட்டுச்செலவுக்கு தட்டுப்பாடு வரலாம். சிக்கனம் தேவை. மாணவர்கள் நண்பர்களிடம் நிதானித்து பழகவும்.

சந்திராஷ்டமம்: 21.7.15 காலை 6:38 முதல் 23.7.15 மாலை 6:36 மணி.

பரிகாரம்: சிவனை வழிபடுவதால் குடும்பத்தில் ஒற்றுமை கூடும்.

யோசித்து வாக்குறுதி தரும், மீன ராசி அன்பர்களே!

உங்களுக்கு அஷ்டமச்சனியின் பிடி இருந்தாலும், புதன், சந்திரனின் நல்லருளால் சில நன்மைகள் ஏற்படும். ஆன்மிக நம்பிக்கையை மனஉறுதியுடன் பின்பற்றுவீர்கள். அதிர்ஷ்டகரமான வாய்ப்பு வர அனுகூலம் உண்டு. குடும்பத்தில் மங்கள நிகழ்வு ஏற்படும். பகைவர்களை விட்டு விலகுவது நல்லது. புத்திரர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்வீர்கள். சீரான ஓய்வு உடல்நலத்தைப் பாதுகாக்கும். இல்லறத்துணையுடன் கருத்து வேறுபாடு வரலாம். அவர்களைக் குறை சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் வருகிற இடையூறைச் சரி செய்து விடுவீர்கள். பணியாளர்கள் பணிகளை முடிக்க தாமதம் ஆகலாம். பெண்கள் ஆன்மிக சுற்றுலா செல்வர். மாணவர்கள் தன்னம்பிக்கை பெறுவர்.

சந்திராஷ்டமம்: 23.7.15 மாலை 6:37 முதல் 25.7.15 இரவு 11.55 மணி.

பரிகாரம்:
விநாயகர் வழிபாடு தடைகள் நீங்க உதவும்.

Leave a Reply