shadow

download (2)

பொறுப்புணர்வுடன் பணிபுரியும், மேஷ ராசி அன்பர்களே!

பெரும்பான்மை கிரகங்கள், அதிக நன்மை தரும் வகையில் உள்ளனர். மனதில் தெளிவு பிறக்கும். பணிகள் சிறப்பாக அமையும். கூடுதல் பணவரவால் குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உடன் பிறந்தவர்கள் ஓரளவு உதவுவர். வாகன பராமரிப்பு செலவு குறையும். பயணங்கள் இனிதாகும். புத்திரர்களின் செயல் பெருமை அளிக்கும். ஆரோக்கியம் பலம் பெறும். மனைவி கருத்து இணக்கம் கொள்வார். தொழில், வியாபாரம் செழித்து வளரும். பணியாளர்களுக்கு பணவரவு கூடும். பெண்கள், மகிழ்ச்சிகர வாழ்வு பெறுவர். மாணவர்கள் கருத்துடன் படிப்பர்.

சந்திராஷ்டமம்:
18.10.2015 காலை 6:00 மணி முதல் காலை 11:10 மணி வரை.

பரிகாரம்: விஷ்ணு வழிபாடு, செல்வ வளம் தரும்.

அன்புடன் நடந்து நற்பெயர் பெறுகிற, ரிஷப ராசி அன்பர்களே!

சூரியன், சுக்கிரன், கேது நற்பலன் தருவர், செயல்களில் நிதானம் வேண்டும். உறவினரால் உதவி கிடைக்கும். போக்குவரத்தில் கவனம் நல்லது. புத்திரர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற தாமதம் ஆகும் என்பதால், வருத்தம் கொள்வர். எதிர் மனப்பாங்கு உள்ளவர்களிடம் விலகி இருக்கவும்.
மனைவி குடும்ப நலனில் அக்கறை கொள்வார். அதிக உழைப்பால் தொழில், வியாபாரம் சீரான அளவில் வளர்ச்சி பெறும். பணியாளர்கள் குளறுபடி வராமல் செயல்படுவது நல்லது. பெண்கள், பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்க வேண்டாம். மாணவர்கள், படிப்பு, பொது அறிவில் மேம்படுவர்.

சந்திராஷ்டமம்: 18.10.15 காலை 11:11 மணி முதல் 20.10.15 மாலை 5:13 மணி வரை.

பரிகாரம்:
துர்க்கை வழிபாடு, சங்கடம் போக்கும்.

சமயோசித செயலால் சாதனை நிகழ்த்தும், மிதுன ராசி அன்பர்களே!

செவ்வாய், சுக்கிரன், புதன், சனீஸ்வரர் நன்மை தருவர். பசு, பால், பாக்ய யோகம் அமைந்து செல்வ வளம் பெருகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். வீடு, வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. புத்திரர்களின் எதிர்கால வாழ்வு சிறக்க சில பணிகளை மேற்கொள்வீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். மனைவி வழி உறவினர் மதிப்பு, மரியாதை தருவர். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி விலகும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் ஆன்மிக சுற்றுலா செல்வர். மாணவர்கள் கடும் பயிற்சியால் படிப்பில் முன்னேறுவர்.

சந்திராஷ்டமம்: 20.10.15 மாலை 5:14 மணி முதல் 22.10.15 இரவு 9:15 மணி வரை.

பரிகாரம்: விநாயகர் வழிபாடு, செயலில் வெற்றி தரும்.

தான் செய்த உதவி குறித்து பெருமை பேசாத, கடக ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், ராகுவினால் நன்மை உண்டு. நற்செயலால் பெருமை கிடைக்கும். பணவரவு திருப்திகரமாகும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். புத்திரர்களின் கேள்விகளுக்கு, உங்கள் அனுபவங்களை பதிலாகச் சொல்வீர்கள். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். மனைவியின் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்க, சில மாற்றங்களைச் செய்வீர்கள். பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறை பின்பற்ற வேண்டும். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் சிறந்த தேர்ச்சி விகிதம் பெறுவர்.

சந்திராஷ்டமம்: 22.10.15 இரவு 9:16 மணி முதல் 24.10.15 இரவு 11:32 மணி வரை.

பரிகாரம்: சனீஸ்வரர் வழிபாடு, தொழிலில் வளர்ச்சி தரும்.

புதுமைக் கருத்துகளை துணிச்சலாக வரவேற்கும், சிம்ம ராசி அன்பர்களே!

சுக்கிரன், சந்திரன், சூரியன் நன்மை தருவர். ஆடம்பரச் செலவைத் தவிர்க்கவும். பொது விவகாரங்களில் தலையிட வேண்டாம். வீடு, வாகனத்தில் பராமரிப்பு பணி செய்வீர்கள்.
புத்திரர்கள் உங்கள் சொல் கேட்டு நடப்பர். உடல்நிலையில் கவனம் தேவை. மனைவியின் அன்பு மனதிற்கு நம்பிக்கை தரும். தொழில், வியாபாரத்தில் சுமாரான பணவரவு இருக்கும். பணியாளர்கள் பணி இலக்கை நிறைவேற்ற கால தாமதமாகும். மாணவர்கள் சாகச விளையாட்டில் ஈடுபடக் கூடாது.

பரிகாரம்:
ஆஞ்சநேயர் வழிபாடு, நம்பிக்கை தரும்.

தன்னைச் சார்ந்தவர் வாழ்வு வளம்பெற உதவும், கன்னி ராசி அன்பர்களே!

சுக்கிரன், சனீஸ்வரர் நற்பலன் தருவர். மனதில் தைரியம் கூடும். வாழ்வில் முன்னேற வழி பிறக்கும். புத்திரர்கள், படிப்பு, அறிவுத்திறனில் மேம்படுவர். உடல்நலனில் பாதிப்பு வரலாம் என்பதால், அதிக கவனம் தேவை. மனைவியின் ஆலோசனை, குடும்ப எதிர்கால நலனுக்கு உதவும். தொழில், வியாபாரத்தில் வருகிற இடையூறை தாமதமின்றி சரி செய்ய வேண்டும்.
பணியாளர்கள் பணியிடத்தின் சூழ்நிலை உணர்ந்து செயல்பட வேண்டும். பெண்கள், பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் படிப்பில் முன்னேறுவர்.

பரிகாரம்: நாகர் வழிபாடு, நன்மை தரும்.

உண்மையான செல்வம் அமைதியே என வாழும், துலாம் ராசி அன்பர்களே!

குரு, செவ்வாய், சுக்கிரன் ஆதாய ஸ்தானத்தில் அனுகூலமாக உள்ளனர். இதனால் குரு மங்கள யோகம், சுக்கிர மங்கள யோகத்தின் சுப பலன் அதிகம் கிடைக்கும். வீட்டில் ஒற்றுமை மகிழ்ச்சி கூடும். முன்பு செய்த நற்செயலுக்குரிய பெருமை கிடைக்கும். பூர்வ சொத்தில் வளர்ச்சியும், பண வரவும் அதிகரிக்கும். கேதுவின் அமர்வு எதிரியின் மனதிலும் நல்ல மாற்றம் தரும். மனைவி விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள், புத்தாடை, அணிகலன் வாங்குவர். மாணவர்கள், படிப்பில் ஆர்வம் கொள்வர்.

பரிகாரம்:
அம்பிகை வழிபாடு, மங்கள வாழ்வு தரும்.

சொந்தப் பணியில் அதிக கவனம் கொள்கிற, விருச்சிக ராசி அன்பர்களே!

ராகு, புதன், லாப ஸ்தானத்தில் அனுகூலமாக உள்ளனர். மனதில் மகிழ்ச்சிகர எண்ணம் வளரும். தாமதமான பணிகளை, புதிய உத்தியால் நிறைவேற்றுவீர்கள். உடன் பிறந்தவர்களின் கருத்தை விமர்ச்சிக்க வேண்டாம். வாகன பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும். புத்திரர்களின் சிந்தனையில் நல்ல மாற்றம் ஏற்படும். எதிர்ப்பாளர்கள் பலமிழந்து போவர். மனைவியின் மனதில் நம்பிக்கை வளர உதவுங்கள். தொழில், வியாபாரத்திற்காக கூடுதல் மூலதனம் தேவைப்படும். பணியாளர்கள் பணி இலக்கை நிறைவேற்ற தாமதமாகும். பெண்கள், நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். மாணவர்கள், புதியவர்களிடம் நிதானித்து பேசவும்.

பரிகாரம்: தன்வந்திரி வழிபாடு, ஆரோக்கியம் தரும்.

அன்பின் மகத்துவம் உணர்ந்து பின்பற்றும், தனுசு ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், சூரியன், புதனால் அதிக நன்மை கிடைக்கும். சொல்லும், செயலும் நேர் வழியில் இருக்கும். அக்கம் பக்கத்தவர் அதிக அன்பு பாராட்டுவர். புதிய வாகனம், வீடு வாங்க நல்யோகம் உண்டு. அரசாங்க நன்மை கிடைக்கும். புத்திரர்கள் கருத்து பேதம் கொள்வர். வெகுநாள் பிரச்னை தீரும். மனைவியின் அன்பு, பாசம் நெகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும். பணியாளர்கள் அக்கறையுடன் பணிபுரிந்து சலுகை பெறுவர். பெண்கள் விருந்து, விழாவில் பங்கேற்பர். மாணவர்கள் பெற்றோரிடம் நன்மதிப்பு பெறுவர்.

பரிகாரம்: முருகன் வழிபாட்டால், நன்மை கூடும்.

பணிகளில் லட்சிய உறுதியுடன் ஈடுபடும், மகர ராசி அன்பர்களே!

கேது, சுக்கிரன், சூரியன், சனீஸ்வரர் யோக பலன் தருவர். இஷ்ட தெய்வ அருள் பலம் துணை நிற்கும். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி கூடும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
புத்திரர்கள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். உடல்நிலையைக் காக்க ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். மனைவி வழி உறவினர்கள் உதவிகரமாக செயல்படுவர். தொழில், வியாபாரம் செழித்து சேமிப்பு அதிகரிக்கும். பணியாளர்கள், லட்சிய மனதுடன் பணிபுரிவர். பெண்கள், வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். மாணவர்கள், வெளியிடங்களில் சுற்றுவதை குறைக்கவும்.

பரிகாரம்: லட்சுமி வழிபாடு, கூடுதல் பணவரவு தரும்.

குடும்பத் தேவையை நிறைவேற்ற அதிகம் உழைக்கும், கும்ப ராசி அன்பர்களே!

குரு, புதன், ஓரளவு நன்மை தருவர். குடும்பத்திற்கான பணத்தேவை அதிகரிக்கும். இளைய சகோதரர்களின் செயலை குறை சொல்ல வேண்டாம். அறிமுகம் இல்லாதவர்க்கு வாகனத்தில் இடம் தர வேண்டாம். புத்திரர்கள் உங்கள் சொல்கேட்டு நடப்பர். குடும்பத்தில் சமரச பேச்சு நன்மையை தரும். மனைவியின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவது நல்லது. தொழில், வியாபாரம் புதியவர்களின் ஆதரவினால் சராசரி இலக்கை அடையும். பணியாளர்கள் பணியிடத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பெண்கள் வீட்டுச்செலவுக்கு சற்று திண்டாடலாம். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் கொள்வர்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு, மனத்தெளிவு தரும்.

நற்செயல் புரிந்து அதிக நன்மை பெறும் மீன ராசி அன்பர்களே!

செவ்வாய், சந்திரனால் நன்மை ஏற்படும். புதிய திட்டங்களை வடிவமைப்பீர்கள். எவருக்கும் அதிக பட்ச வாக்குறுதி தர வேண்டாம். புத்திரர்கள் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வர். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும். எதிர் மனப்பாங்கு உள்ளவர்கள் கூட மறைமுக உதவிபெற முயற்சிப்பர். மனைவியின் செயலை குறை சொல்ல வேண்டாம்.
தொழில், வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். பணியாளர்கள் புதிய தொழில் நுட்பங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் செலுத்துவர். பெண்கள் செலவுக்கு திண்டாட நேரிடும். மாணவர்கள் பாதுகாப்பற்ற இடங்களுக்கு பயணம் செல்ல வேண்டாம்.

பரிகாரம்:
நரசிம்மர் வழிபாடு, நன்மை தரும்.

Leave a Reply