shadow

images (8)

உண்மை வழியில் நடக்கும், மேஷ ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், ராகுவினால் நன்மை உண்டாகும். மனக் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். தடை விலகி முன்னேற்றப் பாதையில் வெற்றி நடை போடுவீர்கள். வாகனப் பயணத்தில் விழிப்புணர்வு தேவை. புத்திரர்களின் செயல்பாடு பெருமை அளிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை உண்டாகும். மனைவி வழியில் ஆதாயம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய முயற்சியில் ஈடுபட்டு லாபம் காண்பீர்கள். பணியாளர்கள், பணி இலக்கை விரைந்து முடிப்பர். பெண்கள், வீட்டுச் செலவில் சிக்கனத்தை கடைபிடிப்பர். மாணவர்கள், கல்வியில் சிறந்து விளங்குவர்.

பரிகாரம்:
தட்சிணாமூர்த்தி வழிபாடு, தொழிலில் வளர்ச்சி தரும்.

அனைவரிடமும் அன்பு காட்டும், ரிஷப ராசி அன்பர்களே!

செவ்வாய், புதன், சுக்கிரன், சனி, கேது ஆகியோரால் நன்மை கிடைக்கும். முருகனின் அருள் பலம் துணை நிற்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். உறவினருடன் இணக்கம் உண்டாகும். புத்திரரை கண்டித்து, அவர்களின் குறைகளை சரி செய்வீர்கள். உடல்நிலை திருப்தியளிக்கும். மனைவியின் செயல்பாடு கண்டு மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் படிப்படியாக அதிகரிக்கும். பணியாளர்கள், பணிச்சுமையில் இருந்து விடுபடுவர். பெண்கள், வீட்டை அழகுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவர். மாணவர்கள், திட்டமிட்டு படிப்பர்.

பரிகாரம்: அம்பிகையை வழிபட்டால், குடும்ப ஒற்றுமை சிறக்கும்.

சமயோசிதமாக செயல்படும், மிதுன ராசி அன்பர்களே!

சூரியன், சுக்கிரன் ஆகியோரால் நற்பலன் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள் சமூக அந்தஸ்து உயரும். சேமிப்பு, அத்தியாவசிய செலவுக்குப் பயன்படும். தாய் வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். புத்திரரின் வளர்ச்சிக்குத் துணை புரிவீர்கள். எதிரியின் கெடுசெயல் பலமிழக்கும். மனைவியின் செயல்பாட்டால், குடும்ப வளர்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கேற்ப வருமானம் கிடைக்கும். பணியாளர்கள், எதிர்பார்த்த சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். மாணவர்கள், படிப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவர்.

பரிகாரம்:
தன்வந்திரி வழிபாடு, உடல்நலனை பாதுகாக்கும்.

தற்புகழ்ச்சியை விரும்பாத, கடக ராசி அன்பர்களே!

குரு, ராகு, சுக்கிரன் ஆகியோரால் வாழ்வில் யோகம் உண்டாகும். வருமானம் புதிய வழியில் கிடைக்கும். இயன்ற உதவியை பிறருக்குச் செய்ய முயல்வீர்கள். விருந்து, விழாவில் அடிக்கடி பங்கேற்பீர்கள். பயணத்தின் மூலம் இனிய அனுபவம் உண்டாகும். புத்திரர்களுக்கு அறிவுரை கூறி, அவர்களின் குறைகளை சரிசெய்வீர்கள். மனைவியின் கருத்துக்கு மதிப்பளிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டி குறைந்து, வருமானம் உயரும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்கள், சிக்கனத்தால் சேமிக்க வழிகாண்பர். மாணவர்கள், அக்கறையுடன் படிப்பர்.

பரிகாரம்: பைரவர் வழிபாடு, நன்மைக்கு வழிவகுக்கும்.

புதுமையை விரும்பி ஏற்கும், சிம்ம ராசி அன்பர்களே!

சுக்கிரன், சனி ஆகிய இருவரும் நன்மையை வாரி வழங்குவர். உறவினர்களிடம் இணக்கம் உண்டாகும். நீண்ட நாள் எதிர்பார்ப்பும் இனிதே நிறைவேறும். வாகன பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். புத்திரர்களின் எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். சத்தான உணவும், சீரான ஓய்வும் உடல்நலனை பாதுகாக்கும். மனைவி கருத்துக்கு மதிப்பளிப்பது நல்லது. தொழில், வியாபார ரீதியான வெளியூர் பயணம் வெற்றி பெறும். வருமானம் கூடும். பணியாளர்கள், சுதந்திர உணர்வுடன் பணிபுரிவர். பெண்கள், விரும்பிய ஆடை, ஆபரணம் வாங்குவர். மாணவர்கள், பாதுகாப்பு குறைந்த இடங்களுக்குச் செல்ல வேண்டாம்.

பரிகாரம்: சிவன் வழிபாட்டால், வாழ்வில் நலம் சேரும்.

கருணை மனம் படைத்த, கன்னி ராசி அன்பர்களே!

சுக்கிரன், செவ்வாயால் நன்மை காத்திருக்கிறது. கொடுத்த வாக்குறுதியை, எப்பாடுபட்டாவது நிறைவேற்றுவீர்கள். உடன் பிறந்தவர்கள் பாசமுடன் நடந்து கொள்வர். தாயின் தேவையை நிறைவேற்றி, அவரின் ஆசி பெறுவீர்கள். புத்திரர்கள், பிடிவாத குணத்துடன் செயல்படுவர். உடல்நிலை அதிருப்தியளிக்கலாம்; கவனம். மனைவியால் ஆடம்பரச் செலவு ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பணியாளர்கள், எதிர்பார்த்த சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள், குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர். மாணவர்கள், ஆசிரியர் மத்தியில் நற்பெயர் காண்பர்.

பரிகாரம்:
விநாயகர் வழிபாட்டால், தடை அனைத்தும் விலகும்.

அமைதி மனம் படைத்த, துலாம் ராசி அன்பர்களே!

பெரும்பாலான கிரகங்கள் நன்மை அளிக்கும் விதத்தில் உள்ளனர். மனதில் நேர்மை குணம் நிறைந்திருக்கும். கருத்து வேறுபாடு மறைந்து, குடும்ப ஒற்றுமை சிறக்கும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடும். புதிய வாகனம், வீடு வாங்க யோகமுண்டு. புத்திரர் படிப்பு, வேலையில் நல்ல முன்னேற்றம் அடைவர். வழக்கு விவகாரத்தில் சுமுக தீர்வு கிடைக்கும். பூர்வீக சொத்து மூலம் வருமானம் கிடைக்கும். மனைவியின் செயல்பாடு கண்டு மனம் மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய முயற்சியில் ஈடுபட்டு, லாபம் காண்பீர்கள். பணியாளர்கள், நிர்வாகத்தினரின் பாராட்டைப் பெறுவர். பெண்கள், ஆன்மிக சுற்றுலா செல்வர். மாணவர்கள், படிப்பில் சாதனை படைப்பர்.

பரிகாரம்:
லட்சுமி வழிபாட்டால், செல்வ வளம் பெருகும்.

ஆர்வமுடன் பணியாற்றும், விருச்சிக ராசி அன்பர்களே!

சூரியன், புதன், ராகு ஆகியோரால் நன்மை ஏற்படும். சிறிய முயற்சியிலும் கூட பெரிய பலன் காண்பீர்கள். அறிமுகம் இல்லாதவருக்கு வீடு, வாகனத்தில் இடம் தர வேண்டாம். புத்திரரின் எதிர்கால வாழ்வுக்கு உறுதுணை புரிவீர்கள். மறைமுக எதிரிகளை இனம் கண்டு விலகுவீர்கள். அக்கம் பக்கத்தினர் மத்தியில் செல்வாக்கு கூடும். மனைவியின் அன்புக்கு உரியவராகத் திகழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பணியாளர்கள், பணி நிமித்தமாக வெளியூர் செல்ல நேரிடும். பெண்கள், சிக்கனத்தைப் பின்பற்றி சேமிக்க முயல்வர். மாணவர்கள், கல்வியில் வளர்ச்சி காண்பர்.

பரிகாரம்:
கிருஷ்ணரை வழிபட்டால், தொழிலில் லாபம் கூடும்.

உழைப்பில் உறுதி மிக்க, தனுசு ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், சனி ஆகிய மூவராலும் நன்மை உண்டாகும். மற்றவரின் எண்ணத்தை உணர்ந்து செயல்படுவீர்கள். சிரமம் அணுகாத வாழ்வு உருவாகும். புத்திரரின் குறையை, நிதானமுடன் பேசி சரிசெய்வீர்கள். உறவினர் வருகையால், குடும்ப செலவு கூடும். இல்லறத் துணை, கூடுதல் அன்பு, பாசம் கொள்வார். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். பணியாளர்கள், பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். பெண்கள், பிறருக்காக பொறுப்பு ஏற்க வேண்டாம். மாணவர்கள், பெற்றோர் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது அவசியம்.

பரிகாரம்:
முருகனை வழிபட, உற்சாக மனநிலை உருவாகும்.

லட்சியவாதியாக விளங்கும், மகர ராசி அன்பர்களே!

கேது, சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்களால் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தாய்வழி உறவினருடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். புத்திரரின் முன்னேற்றம் கண்டு பெருமிதம் கொள்வீர்கள். உடல்நலனில் அக்கறை செலுத்துவீர்கள். பயணத்தின் மூலம் இனிய அனுபவம் காண்பீர்கள். விருந்து, விழாவில் அடிக்கடி பங்கேற்பீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட வருமானம் அதிகரிக்கும். பணியாளர்கள், விரும்பிய சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள், பிள்ளைகளின் நலனுக்காகப் பாடுபடுவர். மாணவர்கள், திட்டமிட்டுப் படித்து முன்னேறுவர்.

சந்திராஷ்டமம்: 16.8.15 காலை 6:00 மணி 17.8.15 மதியம் 2:06 மணி.

பரிகாரம்:
ஆஞ்சநேயர் வழிபாடு, வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

மற்றவர் நலனில் அக்கறை மிக்க, கும்ப ராசி அன்பர்களே!

செவ்வாய், குருவால் நன்மை ஏற்படும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வருவீர்கள். குடும்பம், முன்னேற்ற பாதையில் வெற்றிநடை போடும். உறவினர் கேட்ட உதவியை செய்து மகிழ்வீர்கள். புத்திரர்களுக்கு தக்க அறிவுரை கூறி, நல்வழிப்படுத்துவீர்கள். நண்பர்களின் ஆலோசனையை ஏற்பது நல்லது. பெற்றோர் உடல்நலனில் அக்கறை தேவை. மனைவியின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். திடீர் வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். தொழில், வியாபாரத்தில் சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். பணியாளர்கள், நிர்வாகத்தினரின் நன்மதிப்பை பெறுவர். பெண்கள், ஆன்மிக நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்பர். மாணவர்கள், ஆசிரியர் வழிகாட்டுதலை ஏற்று முன்னேறுவர்.

சந்திராஷ்டமம்:
17.8.15 மதியம் 2:07 மணி 19.8.15 இரவு 1:41 மணி.


பரிகாரம்:
அய்யப்பன் வழிபாடு, மன வலிமையை தரும்.

பெற்றோர் மீது பாசம் மிக்க, மீன ராசி அன்பர்களே!

சூரியன், புதன் ஆகியோரால் புத ஆதித்ய யோக பலன் உண்டாகும். சாதுரியத்துடன் செயல்பட்டு வருவீர்கள். திட்டமிட்டு பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆடம்பர எண்ணத்தை தவிர்ப்பது நல்லது. வீடு, வாகன பாதுகாப்பில் கவனம் செலுத்தவும். புத்திரரின் எதிர்கால வளர்ச்சி குறித்து ஆலோசிப்பீர்கள். ஆரோக்கியம் பலம் பெறும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம்; கவனம். தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கேற்ப வருமானம் கிடைக்கப் பெறுவீர்கள். பணியாளர்கள், சுறுசுறுப்புடன் பணியாற்றி, பணிகளை விரைந்து முடிப்பர். பெண்கள், விலைமதிப்புள்ள பொருட்களை இரவல் கொடுக்க, வாங்கக் கூடாது. மாணவர்கள், வகுப்பில் முன்னிலை வகிப்பர்.

சந்திராஷ்டமம்: 19.8.15 இரவு 1:42 மணி – 22.8.15 மதியம் 12:02 வரை.

பரிகாரம்: ராமரை வழிபட்டால், சுபநிகழ்ச்சி இனிதே நிறைவேறும்.

Leave a Reply