shadow

download (2)

திட்டமிட்டுச் செயலாற்றி வெற்றி பெறும், மேஷ ராசி அன்பர்களே!

குரு, செவ்வாய், ராகு, புதனால் அதிக நன்மை ஏற்படும். புதிய உத்தி மூலம் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சுப விஷயத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும். வாகனப் பயணத்தின் மூலம் இனிய அனுபவம் உண்டாகும். புத்திரர், உங்கள் வழிகாட்டுதல்களை ஏற்று செயல்படுவர். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். ஆரோக்கியம் பலம் பெறும். மனைவியின் செயல்பாட்டால் குளறுபடி உருவாகலாம். தொழில், வியாபாரத்தில் சுமாரான ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள், நிர்வாகத்தின் சட்டதிட்டம் உணர்ந்து செயல்படவும். பெண்கள், அடுத்தவர் விஷயத்தில் கருத்து சொல்வது தவிர்க்கவும். மாணவர்கள், படிப்பில் சிறப்பிடம் பெறுவர்.

பரிகாரம்: சாஸ்தா வழிபாடு, சங்கடம் போக்கும்.

பணியை நேர்த்தியுடன் செய்து முடிக்கும், ரிஷப ராசி அன்பர்களே!

சுக்கிரன், கேது, சந்திரனால் நற்பலன் உண்டாகும். எதிர்பார்த்த நன்மை கிடைக்க தாமதமாகலாம். உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். புத்திரர்களின் பிடிவாதம் கண்டு கோபப்பட வாய்ப்புண்டு. பணம் விஷயத்தில் விழிப்புடன் இருப்பது நல்லது. மனைவி பெருந்தன்மை குணத்துடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். பணியாளர்கள், பணி தவிர்த்த பிற விஷயத்தில் ஈடுபட வேண்டாம். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும். பெண்கள், வீட்டுச் செலவில் சிக்கனம் பின்பற்றுவர். மாணவர்கள், படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.

சந்திராஷ்டமம்: 15.11.15 காலை 6:00 மணி முதல் 16.11.15 இரவு 1:07 மணி வரை.

பரிகாரம்:
ஆஞ்சநேயர் வழிபாடு, நன்மை தரும்.

பிறருக்கு துன்பத்தில் உதவ முயலும், மிதுன ராசி அன்பர்களே!

சுக்கிரன், சனீஸ்வரர், சூரியன், புதன் அதிகளவு நன்மை தருவர். திட்டமிட்ட பணிகள் சிறப்பாக நிறைவேறும். உறவினர்களின் உதவி கிடைக்கும். வீடு, வாகன வகையில் நன்மை ஏற்படும். நற்பெயரும், புகழும் உங்களைத் தேடி வரும். பிள்ளைகள், படிப்பு, வேலையில் முன்னேற்றம் காண்பர். ஆரோக்கியம் பலம் பெறும். வழக்கு விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். மனைவி அன்பைக் கண்டு மனம் மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் விற்பனை சிறந்து லாபம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பெண்கள், தாராள பணச் செலவில் குடும்பத் தேவையை நிறைவேற்றுவர். மாணவர்கள், விரும்பிய பொருளை பெற்றோரிடம் கேட்டு வாங்குவர்.

சந்திராஷ்டமம்:
16.11.15 இரவு, 1:08 மணி முதல் 19.11.15 அதிகாலை, 5:26 மணி வரை.

மன அமைதியுடன் வாழ விரும்பும், கடக ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், ராகு, செவ்வாய் அனுகூல அமர்வில் உள்ளனர். செயல்களில் மனிதநேயமும், நேர்மையும் நிறைந்திருக்கும். உடன் பிறந்தவருக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். பூர்வீகச் சொத்து மூலம் வருமானம் அதிகரிக்கும். வருமான உயர்வால் கடன் அடைபடும். பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும். அக்கம் பக்கத்தினர் அன்பு பாராட்டுவர். மனைவியின் நற்செயல்களை முழு மனதுடன் பாராட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இடையூறு நீங்கி வருமானம் உயரும். பணியாளர்களுக்கு அதிர்ஷ்டவசமாக சலுகை கிடைக்கும். பெண்கள், உறவினர் குடும்பத்தில் சுப நிகழ்ச்சியில் பங்கேற்று மகிழ்வர். மாணவர்கள், அக்கறையுடன் படித்து, அதிக மதிப்பெண் பெறுவர்.

சந்திராஷ்டமம்: 19.11.15 அதிகாலை, 5:27 மணி முதல் 21.11.15 காலை, 8:18 மணி வரை.

பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நல்லது.

சமயோசித செயலால் சாதனை புரியும், சிம்ம ராசி அன்பர்களே!

சுக்கிரன், புதன், சந்திரனால் நன்மை உண்டாகும். புதிய முயற்சிகளில் உழைப்புக்கேற்ப பலன் கிடைக்கும். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதமாகலாம். சமூக நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் பங்கேற்பீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். புத்திரர் படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேறுவர். வெளியூர் பயணத்தின் போது விழிப்புடன் இருப்பது அவசியம். மனைவி குடும்ப நலனில் அக்கறை கொள்வார். தொழில், வியாபார வளர்ச்சிக்கு புதியவர்களின் ஆதரவு துணை நிற்கும். பணியாளர்களுக்கு புதிய வேலைவாய்ப்பும், உபரி வருமானமும் கிடைக்கும். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர். மாணவர்கள் சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

சந்திராஷ்டமம்: 21.11.15 காலை 8:19 அன்று நாள் முழுவதும்.

பரிகாரம்: விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

பொறுப்புணர்வுடன் செயலாற்றிடும், கன்னி ராசி அன்பர்களே!

சுக்கிரன், சனீஸ்வரர், சந்திரனால் நன்மை மேலோங்கும். பேச்சு, செயலில் நிதானம் வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். வீட்டுச் செலவில் சிக்கனத்தைக் கடைபிடிப்பது நல்லது. புத்திரர்களின் செயல்பாடு கண்டு பெருமிதம் கொள்வீர்கள். உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்லது. மனைவியால் குடும்பத்தில் ஒற்றுமை சிறக்கும். தொழில், வியாபாரத்தில் வருமானம் சுமாராக இருக்கும். பணியாளர்களுக்கு விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்கள் தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு கொள்வர். மாணவர்கள் புதிய நண்பர்களிடம் விழிப்பாக இருக்கவும்.

பரிகாரம்:
பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.

நல்லோர்களின் நட்பை விரும்பும், துலாம் ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், கேதுவினால் நன்மை உண்டாகும். மனதில் உற்சாகம் மேலோங்கும். நண்பர், உறவினர்களால் பாராட்டப்படுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். பொது விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். அலைச்சல், நீண்ட துார பயணத்தை தவிர்க்க முயலுங்கள். பிள்ளைகளின் ஆர்வம் மிகுந்த செயல் நிறைவேற உதவுவீர்கள். எதிரி இருந்த இடம் தெரியாமல் விலகுவர். மனைவி வழி உறவினர்களின் அன்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி படிப்படியாக உருவாகும். பணியாளர்கள் கூடுதல் வேலை வாய்ப்பை ஏற்று வருமானம் காண்பர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். மாணவர்கள் படிப்புடன் கலை பயில்வதிலும் ஆர்வம் கொள்வர்.

பரிகாரம்: சிவன் வழிபாடு, நன்மை தரும்.

லட்சியத்தில் உறுதி கொண்ட, விருச்சிக ராசி அன்பர்களே!

ராகு, செவ்வாய், சுக்கிரனால் நன்மை உண்டாகும். சுக்கிர மங்கள யோகம் அதிர்ஷ்டகரமாக செல்வ வளம் தரும். தாமதித்த பணிகளை ஆள்பலம், பணபலத்துடன் நிறைவேற்றுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. பிள்ளைகளின் எதிர்கால நலனுக்கு தேவையானதை செய்வீர்கள். பூர்வீகச் சொத்து வகையில் மராமத்து செலவு ஏற்படும். சுற்றுலா சென்று வர திட்டமிடுவீர்கள். பகைவர் உங்களின் வளர்ச்சி கண்டு வியப்பில் மூழ்குவர். மனைவி வழி உறவினர்களால் நன்மை உண்டு. தொழில், வியாபாரத்தில் புதிய உத்தியால் ஆதாயம் அடைவீர்கள். பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பெண்கள் சேமிப்பு விரும்பிய ஆடம்பர பொருள் வாங்குவர். மாணவர்களுக்கு படிப்பில் சிறந்த தேர்ச்சி கிடைக்கும்.

பரிகாரம்:
சனீஸ்வரர் வழிபாடு, வெற்றியளிக்கும்.

செய்த உதவியை பெரிதுபடுத்தாத, தனுசு ராசி அன்பர்களே!

குரு, சந்திரனால் நன்மை கிடைக்கும். நிதானமுடன் செயல்பட்டால் சிரமம் வராமல் தவிர்க்கலாம். குடும்பத்திற்கான செலவு அதிகரிக்கும். வீடு, வாகனத்தில் நம்பகக் குறைவானவருக்கு இடம் தர வேண்டாம். புத்திரரின் பிடிவாத செயல்களைக் கண்டிக்க நேரிடும். பணம் கொடுக்கல், வாங்கலில் விழிப்புடன் இருக்கவும். மனைவி உங்களின் நல்ல குணம் உணர்ந்து பெருமிதம் கொள்வார். அரசு வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களிடம் விவாதம் பேச வேண்டாம். பெண்கள் பிறருக்காக பணப் பொறுப்பு ஏற்பது கூடாது. மாணவர்கள் நன்றாக படித்து, பாராட்டு பெறுவர்.

பரிகாரம்: முருகன் வழிபாடு நலம் சேர்க்கும்.

நல்லெண்ணத்துடன் பணிபுரியும், மகர ராசி அன்பர்களே!

பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக உள்ளன. கருணை மனதில் நிறைந்திருக்கும். நண்பர், உறவினர் கேட்ட உதவியை மறுக்காமல் செய்வீர்கள். வெகுநாள் திட்டமிட்ட பணி எளிதில் நிறைவேறும். மனதில் தைரியம் மேலோங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். வாகனப் பயணம் இனிய அனுபவம் தரும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். விருந்து, விழாவில் அடிக்கடி கலந்து கொள்வீர்கள். மனைவி உங்கள் எண்ணத்திற்கு ஏற்ப நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அதிகரித்து வருமானம் உயரும். பணியாளர்கள், புதிய தொழில் நுட்பங்களை ஆர்வமுடன் கற்பர். பெண்கள், குடும்ப நலனை கருத்தில் கொண்டு செயல்படுவர். மாணவர்கள் முயற்சியுடன் படித்து முன்னேறுவர்.

பரிகாரம்: அம்பிகை வழிபாடு மகிழ்ச்சி தரும்.

புதிய கருத்துகளை மனதார வரவேற்கும், கும்ப ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், சூரியன், புதனால் நன்மை உண்டாகும். உடல் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். பேச்சில் ஆன்மிக சிந்தனை மிகுந்திருக்கும். உறவினர்களுடன் சந்திப்பால் சந்தோஷம் காண்பீர்கள். வாகன பயன்பாட்டால் நன்மை உண்டாகும். புத்திரர் அறிவார்ந்த செயலால் பெருமை தேடித் தருவர். கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். வெளியூர் பயணத்தால் நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கேற்ப வருமானம் உண்டாகும். பணியாளர், எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பெண்கள் குடும்ப உறுப்பினர்களின் அன்புக்குரியவராவர். மாணவர்கள் படிப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவர்.

பரிகாரம்:
தட்சிணாமூர்த்தி வழிபாடு சுபயோகம் தரும்.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும், மீன ராசி அன்பர்களே!

சந்திரனால் நன்மை உண்டாகும். அன்புக்கு உரியவரின் ஆலோசனை நன்மைக்கு வழிவகுக்கும். பணம் கொடுக்கல், வாங்கலில் நிதானத்தை பின்பற்றவும். வாகன வகையில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதத்துடன் செயல்படலாம். சத்தான உணவும், சீரான ஓய்வும் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். எதிரிகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. மனைவியின் குறையை பெரிதுபடுத்தி பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மூலதனத்தை அதிகப்படுத்த வேண்டாம். பணியாளர்கள் பணிச் சுமையால் அவதிப்பட நேரிடும். பெண்கள் வீட்டு பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்தவும். மாணவர்கள் நண்பர்கள் மூலம் உதவி பெற வாய்ப்புண்டு.

பரிகாரம்: துர்க்கை வழிபாட்டால் தைரியம் கூடும்.

Leave a Reply