shadow

download (3)

உறவினர்களிடம் அதிக பாசம் கொண்ட, மேஷ ராசி அன்பர்களே!

சூரியன், கேது, குரு, புதன் அதிக நன்மை தருவர். வளர்ச்சிப் பாதைக்கான புதிய சூழல் உருவாகும். பணிகளை ஆர்வமுடன் செயல்படுத்துவீர்கள். குடும்பச் செலவுக்கான பணவரவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர்கள் உங்கள் அறிவுரையை ஏற்று படிப்பு, வேலை வாய்ப்பில் முன்னேறுவர். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவியின் மனதில் குழப்பம் விலகி நம்பிக்கை வளரும். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் கணவரின் பணவரவு அறிந்து நடக்க வேண்டும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் வேண்டும்.

பரிகாரம்:
விநாயகர் வழிபாடு, வினை தீர்க்கும்.

சிறிய செயலையும், நேர்த்தியாக செய்யும் ரிஷப ராசி அன்பர்களே!

சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் அதிக அளவில் நற்பலன் தருவர். ஒதுக்கி வைத்த பணிகளை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் கேட்ட உதவியை வழங்குவீர்கள். தாயின் அன்பு ஆசி கிடைக்கும். வாகன பராமரிப்பு செலவு உயரும். புத்திரர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மனைவி உங்கள் கருத்தை அன்புடன் ஏற்றுக் கொள்வார். புதிய முயற்சியால், தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். சேமிக்கும் அளவு பணவரவு பெருகும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து நற்பெயர் பெறுவர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். மாணவர்கள் படிப்பில் முன்னேறி நற்பெயர் பெறுவர்.

பரிகாரம்:
சாஸ்தா வழிபாடு, சகல நன்மையும் தரும்.

தன்னைச் சார்ந்தவர்களும் நன்றாக இருக்க வேண்டுமென நினைக்கும் மிதுன ராசி அன்பர்களே!

ராகு, சனீஸ்வரர், புதன் சுக்கிரனால் தாராள நன்மை கிடைக்கும். உழைப்பிற்கான பலன் முழு அளவில் வந்து சேரும். நிம்மதி நிறைந்த வாழ்வு உருவாகும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. புத்திரர்கள் விரும்பிக் கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள். வழக்கு விவகாரத்தில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மங்கள நிழ்வு ஏற்படும். மனைவியின் பாசம் நெகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரத்தில் இடையூறுகள் வந்தாலும் சரி செய்து விடுவீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து வெகுமதி பெறுவர். பெண்கள் குடும்ப நலன் பாதுகாத்திடுவர். மாணவர்கள் ஞானம் நிறைந்த கருத்துக்களை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வர்.

பரிகாரம்:
ஆஞ்சநேயர் வழிபாடு, வெற்றி தரும்.

எளியவரையும் மதித்து பழகுகிற, கடக ராசி அன்பர்களே!

குரு, சந்திரன் மட்டுமே ஓரளவு நற்பலன் தருவர். நற்பண்பு நிறைந்தவர்களின் உதவி கிடைக்கும். மனம், செயலில் உற்சாகம் அதிகரிக்கும். வளர்ச்சியை நோக்கி நடை போடுவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பயணத்தில் அதிக பாதுகாப்பு வேண்டும். புத்திரர்கள் நல்வழியில் செயல்பட இதமாக வழி நடத்தவும். வழக்கு, விவகாரங்களில் பணவிரயம் தவிர்க்கலாம். மனைவி, உங்களின் நல்ல குணங்களை பாராட்டுவார். தொழில், வியாபாரம் செழிக்க, மாற்று உபாயம் பின்பற்ற வேண்டும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டத்தை பின்பற்றி நற்பெயர் பெறுவர். பெண்கள் ஆன்மிக சுற்றுலா சென்று வர வாய்ப்பு வரும். மாணவர்கள் வாகனங்களில் செல்லும் போது கவனம்.

பரிகாரம்:
சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

மன உறுதியும், செயல்திறனும் கொண்ட, சிம்ம ராசி அன்பர்களே!

புதன், செவ்வாய், சந்திரனால் ஓரளவு நன்மை உண்டு. முக்கிய பணிகளை, இந்த வாரம் ஒத்தி வைக்கலாம். இதனால் நஷ்டமும், கெட்ட பெயரும் வராமல் தவிர்க்கலாம். தாய்வழி உறவினர்கள், கருத்து வேறுபாடு கொள்வர். புத்திரர்களின் போக்கு மனவருத்தம் தரலாம். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். மனைவி வழி உறவினர்கள், பண உதவி கேட்டு அணுகுவர். பயணங்களால் அதிக லாபம் இருக்காது. தொழில், வியாபாரத்தில் அளவான லாபம் இருக்கும். பணியாளர்கள் பணியில் மிக கவனமாக செயல்படவும். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் எளிய பயிற்சியால் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறலாம்.

பரிகாரம்:
பைரவர் வழிபாடு, சிரமத்தைப் போக்கும்.

எளியவரையும் மதித்து பழகுகிற, கடக ராசி அன்பர்களே!

குரு, சந்திரன் மட்டுமே ஓரளவு நற்பலன் தருவர். நற்பண்பு நிறைந்தவர்களின் உதவி கிடைக்கும். மனம், செயலில் உற்சாகம் அதிகரிக்கும். வளர்ச்சியை நோக்கி நடை போடுவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பயணத்தில் அதிக பாதுகாப்பு வேண்டும். புத்திரர்கள் நல்வழியில் செயல்பட இதமாக வழி நடத்தவும். வழக்கு, விவகாரங்களில் பணவிரயம் தவிர்க்கலாம். மனைவி, உங்களின் நல்ல குணங்களை பாராட்டுவார். தொழில், வியாபாரம் செழிக்க, மாற்று உபாயம் பின்பற்ற வேண்டும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டத்தை பின்பற்றி நற்பெயர் பெறுவர். பெண்கள் ஆன்மிக சுற்றுலா சென்று வர வாய்ப்பு வரும். மாணவர்கள் வாகனங்களில் செல்லும் போது கவனம்.

பரிகாரம்:
சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

நண்பர்களின் கருத்திற்கு மதிப்பளிக்கும், கன்னி ராசி அன்பர்களே!

சுக்கிரன், சனீஸ்வரர், சூரியனால் வியத்தகு நற்பலன் கிடைக்கும். பலநாள் திட்டமிட்ட பணிகளை முழு முயற்சியுடன் நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் பாசத்துடன் இருப்பர். புத்திரர்கள் மற்றும் மனைவி விரும்பிய பொருளை, தாராள செலவில் வாங்கித் தருவீர்கள். உடல்நலம் சுமாராக இருக்கும். மனைவியால் பணவரவுக்கு இடமுண்டு. குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி கூடும். தொழில், வியாபாரத்தில் வாடிக்கையாளர் பெருக்கத்தால், வளர்ச்சி அடையலாம். பணியாளர்கள் குறித்த காலத்தில், பணி இலக்கை நிறைவேற்றி பாராட்டு, வெகுமதி பெறுவர். பெண்கள், தாராள பணவசதி கிடைத்து, மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். மாணவர்கள் படிப்புடன் பொது அறிவிலும் மேம்படுவர்.

சந்திராஷ்டமம்: 14.2.16 காலை 6:00 மணி முதல் 15.02.16 மதியம் 1:49 மணி வரை.

பரிகாரம்: மகாலட்சுமி வழிபாடு, பணவரவை உயர்த்தும்.

மன உறுதியும், செயல்திறனும் கொண்ட, சிம்ம ராசி அன்பர்களே!

புதன், செவ்வாய், சந்திரனால் ஓரளவு நன்மை உண்டு. முக்கிய பணிகளை, இந்த வாரம் ஒத்தி வைக்கலாம். இதனால் நஷ்டமும், கெட்ட பெயரும் வராமல் தவிர்க்கலாம். தாய்வழி உறவினர்கள், கருத்து வேறுபாடு கொள்வர். புத்திரர்களின் போக்கு மனவருத்தம் தரலாம். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். மனைவி வழி உறவினர்கள், பண உதவி கேட்டு அணுகுவர். பயணங்களால் அதிக லாபம் இருக்காது. தொழில், வியாபாரத்தில் அளவான லாபம் இருக்கும். பணியாளர்கள் பணியில் மிக கவனமாக செயல்படவும். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் எளிய பயிற்சியால் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறலாம்.

பரிகாரம்:
பைரவர் வழிபாடு, சிரமத்தைப் போக்கும்.

நியாயம், மன உறுதியைப் பின்பற்றும், துலாம் ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், புதன், ராகு தாராள நற்பலன் தருவர். செயல்கள் சிறப்பாக அமைந்து புகழ் தரும். குடும்ப உறுப்பினர்கள் அன்பு கொள்வர். அறிமுகம் இல்லாதவர்க்கு வாகனத்தில் இடம் தர வேண்டாம். புத்திரர்களின் வெகுநாள் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மனைவியின் கருத்து குடும்ப நலனுக்கு உதவும். மாற்றுத்திட்டத்தைப் பயன்படுத்தி தொழில், வியாபாரத்தில் செழிப்படைவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை, விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். பெண்கள் சிறப்பான செயல்களால், குடும்பத்தில் பாராட்டு பெறுவர். மாணவர்கள் ஞாபகத் திறனை வளர்த்து, அதிக மதிப்பெண் பெறுவர்.

சந்திராஷ்டமம்: 15.2.16 மதியம் 1:50 மணி முதல் 17.2.16 மாலை 5:05 மணி வரை.

பரிகாரம்:
முருகன் வழிபாடு, நம்பிக்கை தரும்.

அனைவரும் போற்றும் வகையில் செயல்படும், விருச்சிக ராசி அன்பர்களே!

சுக்கிரன், சந்திரன் ஆதாயம் தருவர். தகுதி, திறமையை முழுமையாக வெளிப்படுத்தி பணி செய்வீர்கள். மற்றவர்களின் கருத்தை விமர்சிக்க வேண்டாம். அரசு சார்ந்த உதவி பெறுவதில் தாமதம் ஏற்படலாம். புத்திரர்கள் படிப்பு, செயல் திறனில் மேம்படுவர். சொத்து பராமரிப்பில் அதிக கவனம் வேண்டும். உறவினர்களின் உதவி மனதிற்கு உற்சாகம் தரும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மனைவி, உங்கள் எண்ணங்களை செயல்படுத்துவார். பயணங்களால் அதிக லாபம் இராது. தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி கூடும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும். பெண்கள் குடும்ப நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் நண்பர்களின் உதவியால் படிப்பில் முன்னேறுவர்.

சந்திராஷ்டமம்: 17.2.16 மாலை 5:06 மணி முதல் 19.2.16 இரவு 10:35 மணி வரை.

பரிகாரம்:
பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.

திட்டங்களை முயற்சியுடன் நிறைவேற்றும், தனுசு ராசி அன்பர்களே!

பெரும்பான்மையான கிரகங்கள் அனுகூலமான இடங்களில் உள்ளன. உங்கள் எண்ணங்களில், புதுமையான கருத்து உருவாகும். பொது இடங்களில் சூழல் உணர்ந்து செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்களின் மங்கள நிகழ்ச்சிக்கான பேச்சு திருப்திகரமாகும். புதிய வீடு, வாகனம் வாய்ப்பு வரும். புத்திரர்கள் நற்செயலால் பெற்றோருக்கு பெருமை தேடித்தருவர். நண்பருக்கு கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். மனைவியின் மனதில் நம்பிக்கை வளர உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி சிறப்பாக நிறைவேறும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டத்தை பின்பற்றி, அதிக நன்மை பெறுவர். பெண்கள் ஆன்மிக சுற்றுலா செல்ல வாய்ப்புண்டு. மாணவர்கள் நன்றாக படித்து, பரிசு வாங்குவர்.

சந்திராஷ்டமம்: 19.2.16 இரவு 10:36 மணி முதல் 20.2.16 இரவு 11:55 மணி வரை.

பரிகாரம்:
அம்பிகை வழிபாடு, மகிழ்ச்சி தரும்.

இயலாதவர்களுக்கு உதவும் குணமுள்ள, மகர ராசி அன்பர்களே!

சுக்கிரன், சந்திரன், சனீஸ்வரர் நற்பலன் தருவர். கடந்த காலத்தில், நீங்கள் செய்த நற்செயலுக்கான நன்மை தேடிவரும். தம்பி, தங்கைகள் வாழ்வில் முன்னேற கேட்ட உதவியை செய்வீர்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர்களின் அறிவுத்திறன் வளர, உங்களின் அனுபவங்களை எளிய நடையில் சொல்வீர்கள். சிரமமான சூழ்நிலையை மதி நுட்பத்துடன் சரி செய்ய வேண்டும். நேரத்திற்கு உணவு உண்பதால், உடல் ஆரோக்கியம் பலம் பெறும். மனைவி கருத்து ஒற்றுமையுடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் புதியவர்களின் வருகை போட்டியை உருவாக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டத்தை தவறாமல் பின்பற்ற வேண்டும். பெண்களுக்கு குடும்பச் செலவுக்கான, பணவசதி தாராள அளவில் இருக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற நண்பர்கள் உதவுவர்.

பரிகாரம்:
தட்சிணாமூர்த்தி வழிபாடு, மங்கள வாழ்வு தரும்.

சிறு நன்மையையும் பெரிதென போற்றும், கும்ப ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், சந்திரனால் நன்மை உண்டாகும். பணிகள் தங்கு தடையின்றி நிறைவேறும். வாழ்வில் முன்னேற உதவியவர்களுக்கு பதில் உதவி செய்வீர்கள். ஆடம்பர செலவைத் தவிர்க்கவும். பயணங்கள் இனிய அனுபவம் தரும். புத்திரர்கள் பிடிவாத குணத்துடன் செயல்படுவதால், மனவருத்தம் வரலாம். பூர்வ சொத்து பராமரிப்பில், உரிய கவனம் வேண்டும். வாழ்க்கைத் துணைவர் உங்களுக்கு பல வகையிலும் ஒத்துழைப்பார். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த சுபசெய்தி வரும். தொழில், வியாபாரத்தில் வருகிற இடையூறுகளை தாமதமின்றி சரி செய்வதால் வளர்ச்சி சீராகும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும். பெண்கள் குடும்பத்தின் எதிர்கால நலன் சிறக்க பணிபுரிவர். மாணவர்கள் படிப்புடன் கலையிலும் ஆர்வம் கொள்வர்.

பரிகாரம்:
துர்க்கை வழிபாடு, தைரியம் வளர்க்கும்.

பணிகளை உடனடியாக செய்து முடிப்பதில் ஆர்வமுள்ள, மீன ராசி அன்பர்களே!

ராகு, புதன், சுக்கிரன் ஆதாய பலன்களை அள்ளி வழங்குவர். குடும்ப நிகழ்வுகள் மனதிற்கு இதம் தரும். பழகுபவர்களின் மனமறிந்து பேசி நற்பெயர் பெறுவீர்கள். பயணங்களால் லாபம் உண்டு. புத்திரர்களின் உடல்நலத்திற்காக சிறு செலவு வரலாம். எதிர்ப்புகள் விலகி வாழ்வில் முன்னேற்றம் பெற, புதிய வாய்ப்பு வரும். மனைவியின் நம்பிக்கை நிறைந்த பேச்சு, உங்களுக்கு தெம்பைத் தரும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறைந்து லாபம் கூடும். பணியாளர்கள் தொழில்நுட்பங்களை அறிந்து, எதிர்கால வளர்ச்சிக்கு வித்திடுவர். பெண்கள் வீட்டு அலங்கார பொருள் வாங்குவர். மாணவர்கள் முயற்சியுடன் படித்து முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம்:
சிவன் வழிபாடு, சகல நன்மையும் தரும்.

Leave a Reply