shadow

download (2)

அனுபவ அறிவால் நன்மை பெறும், மேஷ ராசி அன்பர்களே!

சுக்கிரன், குரு, ராகு நற்பலன் தருவர். குடும்பத்தில் ஒற்றுமை கூடும். உற்சாகத்துடன் செயலாற்றி வருவீர்கள். சமூகத்தில் நற்பெயர் கிடைக்கும். வாகனப் பயணம் இனிதாக அமையும். புத்திரர், தங்களின் சொல் கேட்டு நடப்பர். அவர்களின் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வீர்கள். ஆரோக்கியம் மேம்படும். மனைவியின் ஆலோசனை, குடும்பத்தின் நல்வாழ்வுக்கு துணைநிற்கும். வெளியூர் பயணத்தால் நன்மை காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பணியாளர், பணியிடத்தில் சுதந்திர உணர்வுடன் பணியாற்றுவர். பெண்கள் ஆடம்பரச் செலவில் விருப்பம் போல ஈடுபடுவர். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பர். போட்டியில் பங்கேற்று பரிசும் பெறுவர்.

சந்திராஷ்டமம்: 18.9.15 இரவு 7:13 மணி முதல் 19.9.15 இரவு 12:00 மணி வரை

பரிகாரம்: சூரியன் வழிபாடு, நன்மையளிக்கும்.

பேச்சால் பிறர் மனம் வசீகரிக்கும், ரிஷப ராசி அன்பர்களே!

சுக்கிரன், புதன், கேதுவினால் நன்மை உண்டாகும். புதிய வாய்ப்பை பயன்படுத்தி முன்னேறுவீர்கள். நண்பரின் உதவி, தக்க சமயத்தில் கிடைக்கும். குடும்பத்தில் சுப விஷயம் குறித்த பேச்சு நடக்கும். பிள்ளைகள் கல்வி, வேலைவாய்ப்பில் நல்ல வளர்ச்சி பெறுவர். மனம், உடல் எப்போதும் புத்துணர்வுடன் இருக்கும். பூர்வீகச் சொத்து மூலம் அதிக வருமானம் வரும். மனைவியின் செயல்பாட்டில் இருந்த குளறுபடி மறையும். தொழில், வியாபாரத்தில் விற்பனையைப் பெருக்க, புதிய உத்திகளைப் பின்பற்றுவீர்கள். பணியாளர்கள், நிர்வாகத்தினரின் சட்டதிட்டத்தை மதிப்பது நல்லது. பெண்கள், குடும்ப நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள், நண்பர்களின் விஷயத்தில் கவனம் தேவை.

பரிகாரம்:
விஷ்ணு வழிபாடு, யோகம் தரும்.

பிறர் உதவியைப் பெரிதென கருதும், மிதுன ராசி அன்பர்களே!

சுக்கிரன், சூரியன், சனி நற்பலன் தருவர். வசீகர பேச்சு மூலம், புதிய நண்பர்களைப் பெறுவீர்கள். குடும்பத் தேவையை குறைவின்றி நிறைவேற்றுவீர்கள். வாகனத்தில் பராமரிப்புச் செலவு உண்டாகும். புத்திரர் படிப்பு, வேலையில் முன்னேற்றம் காண்பர். வழக்கு, விவகாரம் அணுகாத சுமுக வாழ்வு அமையும். மனைவி வீட்டுச் செலவில் சிக்கனத்தைப் பின்பற்றி சேமிப்பர்.
தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும், லாபமும் உண்டாகும். பணியாளர்கள் பணியில் திறமையை வெளிப்படுத்துவர். பெண்கள், தாய்வீட்டாரின் உதவியைக் கேட்டுப் பெறுவர். மாணவர்கள் புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வம் காட்டுவர்.

பரிகாரம்:
சனீஸ்வரர் வழிபாடு, வெற்றியளிக்கும்.

கருணை மனதுடன், பிறருக்கு உதவும், கடக ராசி அன்பர்களே!

சுக்கிரன், குரு, ராகுவினால் நன்மை உண்டாகும். புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். தாமதமான பணிகள் கூட விரைவாக நிறைவேறும். சகோதரர்களின் வளர்ச்சிக்கு துணைபுரிவீர்கள். பொருள் வளம் சேரும். புதிய வாகனம், வீடு வாங்கும் முயற்சி வெற்றி பெறும். பிள்ளைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். விலகிய உறவினரும் சொந்தம் பாராட்டி மகிழ்வர். மனைவியின் பாசத்துடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் உயரும். பணியாளர்களுக்கு அதிர்ஷ்டவசமாக சலுகை கிடைக்கும். பெண்கள் மகிழ்ச்சியான மனநிலை பெறுவர். மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பர்.

பரிகாரம்:
தட்சிணாமூர்த்தி வழிபாடு, நலம் சேர்க்கும்.

மனவலிமையுடன் செயல்படும், சிம்ம ராசி அன்பர்களே!

சுக்கிரன், சந்திரன் நற்பலன் வழங்குவர். எதிலும் நிதானமுடன் இருப்பது நல்லது. அடுத்தவர் பிரச்னையில் கருத்து சொல்ல வேண்டாம். கடந்த கால நற்செயலுக்கான பலன் தற்போது கிடைக்கும். நம்பகத்தன்மை இல்லாதவர்களுக்கு வீடு, வாகனத்தில் இடம் தருவது கூடாது.
பிள்ளைகள் புத்திசாலித்தனமுடன் செயல்படுவர். அலைச்சலால் சோர்வுக்கு ஆளாகலாம். தகுந்த ஓய்வு தேவை. மனைவியின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் யாரிடமும் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். பெண்கள், குழந்தைகளின் அன்பைப் பெறுவர். மாணவர்கள் பாதுகாப்பற்ற இடங்களுக்குச் செல்ல வேண்டாம்.

பரிகாரம்: காமதேனு வழிபாடு, சுபயோகம் தரும்.

இயற்கையை நேசித்து வாழும், கன்னி ராசி அன்பர்களே!

சுக்கிரன், செவ்வாய், சனி ஆகியோர் நற்பலன் அளிப்பர். புத்துணர்ச்சியுடன் அன்றாடப் பணிகளில் ஈடுபடுவீர்கள். உறவினரிடம் இருந்த கருத்து வேறுபாடு மறையும். குடும்பத் தேவைக்கான செலவு அதிகரிக்கும். புத்திரரின் நற்செயல் கண்டு பெருமிதம் கொள்வீர்கள். ஆரோக்கியம் மேம்படும். மனைவியின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தொழில், வியாபாரத்தில் மூலதனத்தை அதிகப்படுத்தி லாபம் காண்பீர்கள். பணியாளர்கள், புதிய தொழில் நுட்பத்தை ஆர்வமுடன் கற்றுக் கொள்வர். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர். மாணவர்கள் படிப்பில் அக்கறையுடன் ஈடுபடுவர்.

பரிகாரம்:
துர்க்கை வழிபாடு, சங்கடம் தீர்க்கும்.

நியாயம், தர்மத்தை இரு கண்களாக கருதும், துலாம் ராசி அன்பர்களே!

குரு, சூரியன், புதன், கேது அனுகூல அமர்வில் உள்ளனர்; இதனால், பணம், புகழ் நல்லறிவு, தெய்வ அருள் கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்வு ஏற்படும். பயணங்கள் சுபமாக அமையும்.
புத்திரர்கள் நற்செயலால் பெருமை தேடித் தருவர். உங்களை எதிர்த்தவர்கள் உங்களிடமே உதவி கேட்டு வருவர். மனைவியின் உடல்நலத்திற்கு சிகிச்சை தேவைப்படலாம். தொழில், வியாபாரத்தில் இடையூறை உடனடியாக சரி செய்யவும். பணியாளர்களுக்கு பணவரவு சுமாராகவே இருக்கும். பெண்கள் பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்கவேண்டாம். மாணவர்கள் சிறப்பாகப் படிப்பர்.

பரிகாரம்:
நடராஜர் வழிபாடு, தொழிலில் வளர்ச்சி தரும்.

வாழ்வில் உயர் நெறிகளை பின்பற்றும், விருச்சிக ராசி அன்பர்களே!

சுக்கிரன், புதன், சூரியன், ராகு அதிக நன்மை தருவர். முயற்சிகள் சிறப்பாக நிறைவேறும். மூத்த சகோதரர் உதவுவார். பயணங்கள், புதிய அனுபவம் பெற்றுத் தரும். புத்திரர்களின் விரக்தியான மனநிலையை சரிசெய்வீர்கள். உடல்நிலை நன்றாக இருக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். வாழ்க்கைத்துணை, உங்கள் செயல்களுக்கு ஒத்துழைப்பு தருவார். தொழில், வியாபாரம், புதிய வாடிக்கையாளர்களால் வளர்ச்சி பெறும். பணியாளர்களுக்கு அதிக வேலை இருந்தாலும் அதற்கேற்ப வருமானம் பெறுவர். பெண்கள் புத்தாடை, ஆபரணம் வாங்குவர். மாணவர்கள் பாடங்களை எளிமையாக மனதில் பதிப்பர்.

பரிகாரம்:
கிருஷ்ணர் வழிபாடு, மங்கல வாழ்வு தரும்.

மனப்பூர்வமாக பணிகளில் ஈடுபடும், தனுசு ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன் அளப்பரிய நன்மை தருவர். வாழ்வின் அர்த்தம் உணர்ந்து செயல்படுவீர்கள். நற்செயலின் பலன் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு உண்டாகும்; பொன், பொருள் சேரும்.
புத்திரர்களின் செயல்பாட்டில் குளறுபடி வரலாம். விருந்து, விழாக்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். மனைவி வழி உறவினரால் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டியை சரி செய்வதில், அதிக கவனம் வேண்டும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும். பெண்கள் நினைத்ததை வாங்கும் நிலை இருக்கிறது. மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் வழிகாட்டுதலை ஏற்று சிறப்பாக படிப்பர்.

பரிகாரம்:
ஆஞ்சநேயர் வழிபாடு, சங்கடம் தீர்க்கும்.

பிறர் நலனிலும் அக்கறையுள்ள, மகர ராசி அன்பர்களே!

கேது, புதன், சனீஸ்வரர் நற்பலன் வழங்குவர். நிதானமாகப் பேசுவீர்கள். இஷ்ட தெய்வ அருள் துணை நிற்கும். வாகன பராமரிப்பு செலவு குறையும். புத்திரர்களின் குறைகளை, இனிய அணுகுமுறையால் சரி செய்வீர்கள். நோய் தொந்தரவு குறையும். முக்கியஸ்தரின் உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணையை அனுசரித்து செல்வது நல்லது. தொழில், வியாபாரம் மந்த கதியில் இயங்கும். பணியாளர்கள், அலுவலகத்தில் கேட்ட கடன் பெறுவதில் தாமதம் ஆகலாம். பெண்கள் நகை இரவல், கொடுக்க வாங்க கூடாது. மாணவர்கள் நன்றாகப் படிப்பர்.

சந்திராஷ்டமம்: 13.9.15 காலை 6:00 மணி முதல் இரவு 9:12 மணி வரை

பரிகாரம்: முருகன் வழிபாடு, தொழிலில் நன்மை தரும்.

எளிதாக செயல்புரிந்து ஆர்வமுள்ள, கும்ப ராசி அன்பர்களே!

செவ்வாய், குரு, நற்பலன் வழங்குவர். அதிக முயற்சியினால் மட்டுமே செயலில் வெற்றி கிடைக்கும். தம்பி, தங்கை உதவுவர். வீடு, வாகனத்தில் பராமரிப்பு தேவைப்படும்.
புத்திரர்கள் பிடிவாத குணத்துடன் செயல்படுவர். கடன் கொடுத்த பணம் வசூலாகும். எதிரிகளால் உருவான கெடுசெயல் பலமிழக்கும். மனைவியின் சொல்லும், செயலும் குளறுபடியாக இருக்கும். தொழில், வியாபாரம் செழித்து வளரும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் நகை, பணம் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் கடும் பயிற்சியினால் நன்மை பெறலாம்.

சந்திராஷ்டமம்:
13.9.15 இரவு 9:13 மணி முதல் 16.9.15 காலை 8:46 மணி வரை


பரிகாரம்:
நாக தேவதை வழிபாடு, கஷ்டம் போக்கும்.

கடின உழைப்பால் செல்வ வளம் பெறும், மீன ராசி அன்பர்களே!

சுக்கிரன், புதன், சூரியன் அதிக நன்மை தருவர். உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு வரலாம். இடம், சூழல் உணர்ந்து பேசுவது நல்லது. மகளின் ஜாதக யோக பலம், பலவித நன்மைகளைத் தரும். எதிரிகள் சொந்த சிரமங்களால் விலகுவர்.
மனைவி கருத்து இணக்கமுடன் நடந்து கொள்வார். சுற்றுலா சென்று வருவீர்கள். மதி நுட்பத்தினால் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அடைவீர்கள். பணியாளர்கள் நிர்வாகத்தின் நன்மதிப்பைப் பெறுவர். பெண்கள் குடும்ப முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிப்பர். மாணவர்கள் படிப்பில் சிறந்த தேர்ச்சி பெறுவர்.

சந்திராஷ்டமம்: 16.9.15 காலை 8:47 மணி முதல் 18.9.15 இரவு 7:12 மணி வரை.

பரிகாரம்:
தன்வந்திரி வழிபாடு, ஆரோக்கியம் தரும்.

Leave a Reply