shadow

images (2)

பக்குவமுடன் செயல்படும் மேஷ ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன் உள்ளிட்ட கிரகங்களால் நன்மை உண்டாகும். நீண்ட நாள் எதிர்பார்ப்பும் நிறைவேறும். நல்லோரின் அன்பும், ஆசியும் கிடைக்கும். வாகன வகையில் பராமரிப்பு செலவு ஏற்படும். பிள்ளைகளின் செயல்பாடு கண்டு பெருமை கொள்வீர்கள். மனைவியின் ஆலோசனை, வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தொழிலில் உற்பத்தி சிறக்கும். விற்பனை அதிகரிப்பதால் வருமானம் பன்மடங்கு உயரும். பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பெண்கள் சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்பர். மாணவர்கள் படிப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவர்.

சந்திராஷ்டமம்:
15.10.15 இரவு 2:34 மணி முதல் 17.10.15 நாள் முழுவதும்.

பரிகாரம்: சனீஸ்வரர் வழிபாடு நன்மை தரும்.

லட்சிய நோக்குடன் பணிபுரியும் ரிஷப ராசி அன்பர்களே!

செவ்வாய், சுக்கிரன், கேதுவினால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை சிறக்கும். வருமானத்திற்கான புதிய முயற்சி வெற்றி பெறும். வாகன பயணத்தில் மிதவேகம் கடைபிடிப்பது நல்லது. புத்திரரின் பிடிவாதத்தால் சங்கடம் உருவாகும். உடல்நலனில் அக்கறை தேவை. சத்து நிறைந்த உணவு உண்பது அவசியம். மனைவியின் செயலால் குளறுபடிக்கு ஆளாக நேரிடும். தொழில், வியாபாரத்தில் முயற்சிக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். பணியாளர்கள் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கப் பெறுவர். பெண்களுக்கு பாதுகாப்பு விஷயத்தில் கவனம் தேவை. மாணவர்கள், போட்டியில் பங்கேற்று பரிசு பெறுவர்.

பரிகாரம்: பைரவர் வழிபாடு துன்பம் போக்கும்.

நட்புடன் பழகும் மனம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

சுக்கிரன், புதன், சனி ஆகியோரால் நன்மை உண்டாகும். அன்றாடப்பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையும். எதிரிகளின் பலம் குறையும். தாய் வழி உறவினர்களால் உதவி கிடைக்கும். வாகன பயணத்தின் மூலம் இனிய அனுபவம் ஏற்படும். பிள்ளைகள் உங்களின் சொல்லுக்கு மதிப்பளிப்பர். பணக்கடன் தீரும். மனைவி பாசத்துடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை விலகி லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் அக்கறையுடன் பணியாற்றி நற்பெயர் காண்பர். பெண்களுக்கு தாய்வீட்டுச் சீதனம் கிடைக்கும். மாணவர்கள் ஞாபகத்திறன் சிறப்பதால், கல்வியில் முன்னேறுவர்.

பரிகாரம்:
சிவன் வழிபாடு நன்மை பெருகும்.

திறமையும், துணிச்சலும் மிக்க கடக ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், சூரியன், ராகு அதிக நன்மை வழங்குவர். பேச்சில் இனிமை உண்டாகும். புதியவர்களின் அறிமுகத்தால் நன்மை ஏற்படும். சமூகப்பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். புதிதாக வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. புத்திரரின் எதிர்கால நலனுக்கு தேவையான பணிகளை மேற்கொள்வீர்கள். எதிரியும் உங்களிடம் மறைமுக உதவிபெற முயற்சிப்பார். மனைவியின் ஆலோசனையால் நன்மை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் வருமானம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் விழிப்புடன் பணியாற்றுவது நல்லது. பெண்களின் மனதில் பக்தி மேலோங்கும். மாணவர்கள் விருப்பமுடன் படிப்பர். போட்டியில் பங்கேற்று பரிசு பெறுவர்.

பரிகாரம்:
முருகன் வழிபாடு மேன்மை தரும்.

ஆடம்பரத்தில் நாட்டம் மிக்க சிம்மராசி அன்பர்களே!

சுக்கிரன், சந்திரனால் நற்பலன் உருவாகும். சோம்பலைத் தவிர்த்து பணியில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத் தேவைக்கான பணச் செலவு அதிகரிக்கும். உடல்நலனில் அக்கறை கொள்வது நல்லது. சத்தான உணவு, சீரான ஓய்வு அவசியம். அறிமுகம் அற்றவர்களுக்கு வீடு, வாகனத்தில் இடம் தர வேண்டாம். பிள்ளைகள் வளர்ச்சியில் கவனம் செலுத்துவீர்கள். மனைவியின் சொல்லும், செயலும் மனதிற்கு ஆறுதல் அளிக்கும். தொழில், வியாபார மேம்பாட்டில் கவனம் செலுத்துவீர்கள். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் சட்டதிட்டத்தை மதித்து நடக்கவும். மாணவர்களுக்கு நட்பு விஷயத்தில் கவனம் தேவை.

பரிகாரம்: துர்கை வழிபாட்டால் நன்மை பெருகும்.

பிறர் வாழ்வு வளம் பெற உதவும் கன்னி ராசி அன்பர்களே!

சனி, செவ்வாய், சுக்கிரன் நன்மை தருவர். புதிய முயற்சி சிறப்பாக நிறைவேறும். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளியூர் பயணத்தால் இனிய அனுபவம் காண்பீர்கள். பிள்ளைகள் படிப்பு, வேலை வாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். உறவினர் விஷயத்தில் குறை காண்பதை தவிர்க்கவும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் அதிக மூலதனம் தேவைப்படும்; லாபம் கூடும். பணியாளர்கள் பணியிலக்கை விரைந்து முடிப்பர். பெண்கள் யாருக்கும் நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். மாணவர்கள், படிப்புடன், கலைத்துறையிலும் ஆர்வம் கொள்வர்.

பரிகாரம்: விநாயகர் வழிபாடு வளர்ச்சி அளிக்கும்.

நேர்மை குணம் படைத்த துலாம் ராசி அன்பர்களே!

கேது, குரு, சுக்கிரன் நற்பலன் தர காத்திருக்கின்றனர். மற்றவர் விஷயத்தில் கருத்து சொல்வதை தவிர்க்கவும். குடும்பத்தில் ஒற்றுமை சிறக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்வது நல்லது. புத்திரர்களின் முன்னேற்றம் கண்டு மனம் மகிழ்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். மனைவி வழி உறவினர்களின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். பணியாளர், பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். மாணவர்கள், பெற்றோர் மகிழும் விதத்தில் படிப்பர்.

பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு வெற்றி தரும்.

மற்றவர் கருத்தை மதிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே!

புதன், ராகு, சூரியன் ஆதாய பலன்களைத் தருவர். அன்றாடப் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். உறவினர் வருகையால் கலகலப்பு உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை பெருகும். வீடு, வாகன பாதுகாப்பில் கவனம் செலுத்தவும். பிள்ளைகள் அறிவில் மேம்படுவர். எதிரியின் கெடு செயல் பலமிழந்து போகும். மனைவியின் செயல்களில் குறை காண வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம். பெண்கள் குடும்ப நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் படிப்பில் முதலிடம் வகிப்பர்.

பரிகாரம்:
சிவன் வழிபாடு சகல வளமும் தரும்.

அனைவரிடமும் அன்பு காட்டும் தனுசு ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், சூரியன், புதன் அனுகூல பலன் தருவர். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். குடும்பச் செலவு அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். வாகன பயணம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள். எதிரி தொல்லை மறையும். மனைவியின் அன்பைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் மூலதனத்தை அதிகப்படுத்தி லாபம் காண்பீர்கள். பணியாளர்கள், நிர்வாகத்தினரின் நன்மதிப்பை பெறுவர். பெண்கள் குடும்ப நலனில் கவனம் செலுத்துவர். மாணவர்கள் தனித்திறனில் மேம்படுவர்.

பரிகாரம்: லட்சுமி வழிபாடு செல்வ வளம் சேர்க்கும்.

ஆன்மிகத்தில் ஆர்வம் கொண்ட மகர ராசி அன்பர்களே!

கேது, சுக்கிரன், சனீஸ்வரரால் நற்பலன் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட வாய்ப்பால் வருமானம் கூடும். வீடு, வாகன பாதுகாப்பில் கவனம் செலுத்தவும். புத்திரரின் நற்செயல் மனதை மகிழ்விக்கும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். மனைவியின் பாராட்டைப் பெற்று மகிழ்வீர்கள். தொழில், வியாபார வளர்ச்சிக்கு புதியவர்களின் ஆதரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பெண்கள் பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்க வேண்டாம். மாணவர்கள், படிப்பில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது.

பரிகாரம்:
தன்வந்திரி வழிபாடு ஆரோக்கியம் தரும்.

சுபநிகழ்வில் விரும்பி பங்கேற்கும் கும்பராசி அன்பர்களே!

செவ்வாய், குரு, புதனால் நன்மை உண்டாகும். குழப்பம் நீங்கி, மனதில் தெளிவு பிறக்கும்; எதிர்பார்ப்பு குறித்த காலத்தில் நிறைவேறும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரரின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். மனைவியின் மனதில் நம்பிக்கைக் குறைவு நேராமல் பார்த்துக் கொள்ளவும். தொழில், வியாபாரத்தில் இடையூறு விலகுவதால் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் திறம்பட பணியாற்றி, நிர்வாகத்தின் பாராட்டைப் பெறுவர். பெண்கள் மகிழ்ச்சிகரமான வாழ்வு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் மேம்படுவர்.

சந்திராஷ்டமம்:
11.10.15 காலை 6:00 மணி முதல் 13.10.15 பகல் 3:56 மணி வரை


பரிகாரம்:
நாகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

சூழலுக்கேற்ப சாதுர்யமாக நடக்கும் மீன ராசி அன்பர்களே!

சந்திரனால் நன்மை கிடைக்கும். உங்களின் நற்செயலுக்கு அங்கீகாரம் கிடைக்க தாமதமாகலாம். பேச்சிலும், செயலிலும் நிதானத்தைப் பின்பற்றவும். புத்திரரின் செயல்பாட்டால் குளறுபடி ஏற்படலாம். குடும்பச் செலவு அதிகரிக்கும். உடல்நலனில் அக்கறை கொள்வது அவசியம். மனைவியின் செயல்பாடு நிம்மதிக்கு வழிவகுக்கும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் உண்டாகும். பணியாளர்களுக்கு, எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர். மாணவர்கள் முயற்சியுடன் படிப்பது நல்லது.

சந்திராஷ்டமம்:
13.10.15 பகல் 3:57 மணி முதல் 15.10.15 இரவு 2:33 மணி வரை


பரிகாரம்:
கிருஷ்ணர் வழிபாடு சிரமம் தீர்க்கும்.

 

Leave a Reply