shadow

images (2)

வெற்றிக்கு மயங்காத, மேஷ ராசி அன்பர்களே!

ராகு, சுக்கிரன், குருவின் அமர்வு நன்மை தரும். புத்துணர்வுடன் பணிபுரிவீர்கள் திட்டங்கள் சிறப்பாக நிறைவேறும். பொது இடங்களில் நிதானமாக பேசுவதால், சிரமம் தவிர்க்கலாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர்கள், நண்பர்கள் போல் உங்களிடம் சுமுக உறவு கொள்வர். கடன்களை செலுத்துவீர்கள். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். மனைவியின் அன்பும், பாசமும் மகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு, சலுகை கிடைக்கும். பெண்கள், புத்தாடை, அணிகலன் வாங்க யோகம் உண்டு. மாணவர்கள், படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

பரிகாரம்:
மாரியம்மன் வழிபாடு, நன்மை தரும்.

எவரிடமும் பண்புடன் பழகும், ரிஷப ராசி அன்பர்களே!

குரு, ராகு, தவிர மற்ற கிரகங்கள் சிறப்பான பலன் தருவர். தடைப்பட்ட செயல்கள் நிறைவேறும். இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும். உறவினர்களின் வருகை, மகிழ்ச்சி தரும். புத்திரர்களின் நற்செயல்களால், பெருமை அடைவீர்கள். வம்பு, வழக்கு அணுகாத சுமுக வாழ்வு பெறுவீர்கள். வாழ்க்கைத் துணை, குடும்ப நலன் கருதி திட்டங்களை மாற்றி அமைப்பார். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி மேற்கொள்வீர்கள். அரசு சார்ந்த உதவி கிடைக்கும். பணியாளர்கள் பாராட்டு, வெகுமதி பெறுவர். பெண்கள், குடும்ப அமைதியை பேணிக் காப்பர். மாணவர்கள், நண்பர்களின் உதவியால் நன்மை பெறுவர்.

பரிகாரம்: மகாலட்சுமி வழிபாடு, செல்வ வளம் தரும்.

சுற்றுச்சூழல் உணர்ந்து செயல்படும், மிதுன ராசி அன்பர்களே!

சுக்கிரன், சந்திரன் மட்டும் ஓரளவு நன்மை தருவர். மற்றவர்கள் விஷயத்தில் தலையிட்டால், பிரச்னை வரலாம். பணவரவு குறையலாம் என்பதால், அதற்கேற்ப செலவை திட்டமிடவும். அறிமுகம் இல்லாதவர்களுக்கு வீடு, வாகனத்தில் இடம் தர வேண்டாம். புத்திரர்கள் அறிவுத்திறனில் மேம்பட உதவுவீர்கள். பாதுகாப்பு குறைந்த இடங்களுக்கு செல்ல வேண்டாம். மனைவி வழி உறவினர்கள், உதவி செய்ய முன்வருவர். தொழில், வியாபாரத்தில் ஓரளவே லாபம் உண்டு. பணியாளர்களுக்கு, சலுகை கிடைக்க தாமதமாகும். பெண்கள், வீட்டுச்செலவுக்கு சிறிது திண்டாடலாம். மாணவர்கள், கடும் உழைப்பால் மட்டுமே தேர்ச்சி பெறலாம்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு, கஷ்டங்களை போக்கும்.

பெரியவர்களின் வழிகாட்டுதலை பின்பற்றும், கடக ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், ராகு அதிக நன்மை தருவர். பேச்சில் சத்தியம், வசீகரம் இருக்கும். எதிர்கொள்ளும் நிகழ்வு இனிதாக அமையும். உடன் பிறந்தவர்கள் செய்யும் செயலை குறை சொல்ல வேண்டாம். புத்திரர்களின் எதிர்காலம் வளமாக அமைய உதவுவீர்கள். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். இல்லறத் துணை, உங்களின் கவுரவம் அதிகரிக்கும் வகையில் செயல்படுவார். தொழில், வியாபாரம் மந்த கதியில் இயங்கலாம். பணியாளர்கள், வேலையில் குளறுபடி வராமல் செயல்பட வேண்டும். பெண்கள், வீட்டுச்செலவுக்கு சற்று திண்டாடலாம். மாணவர்கள், படிப்பில் அதிக கவனம் கொள்வர்.

பரிகாரம்: முருகன் வழிபாடு, தொழிலில் வளர்ச்சி தரும்.

எதையும் ஆராய்ந்து செயல்படும் குணம் உள்ள, சிம்ம ராசி அன்பர்களே!

சுக்கிரன், சனியின் அமர்வு சிறப்பான இடங்களில் உள்ளது. செயல்பாடுகள் சிறப்பாக அமையும். புதியவர்களின் அன்பு, உதவி கிடைக்கும். வீட்டில் மங்கள நிகழ்வு ஏற்படும். புத்திரர்கள் நல்ல முறையில் நடந்து பெருமை தேடித் தருவர். வழக்கு, விவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும்.
இல்லறத் துணை இணக்கமான போக்குடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரம் செழித்து வளரும். பணியாளர்களுக்கு சம்பள உயர்வு, சலுகைகள் கிடைக்கும். பெண்கள், பிறர் விஷயத்தில் தலையிட வேண்டாம். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர்.

பரிகாரம்:
பைரவர் வழிபாடு, மனதிற்கு மகிழ்ச்சி தரும்.

உழைப்பை பெருமிதமாக கருதும், கன்னி ராசி அன்பர்களே!

சூரியன், செவ்வாய், சுக்கிரன், அனுகூல அமர்வில் உள்ளனர். சவால் நிறைந்த பணிகளை, இனிய அணுகு முறையால் நிறைவேற்றி விடுவீர்கள். வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். புத்திரர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சீரான ஓய்வு, உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றினால், பிரச்னைகளில் இருந்து தப்பலாம். பெண்கள், புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவர். மாணவர்கள் படிப்பில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்வர்.

பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு, செயலில் வெற்றி தரும்.

நண்பர்களிடம் வெளிப்படையாக பேசும், துலாம் ராசி அன்பர்களே!

சனி, ராகு, செவ்வாய் தவிர மற்ற கிரகங்களால், அதிக நன்மை உண்டாகும். ஞானமும், செல்வமும் அதிகம் பெறுவீர்கள். தர்ம காரியங்களில் ஈடுபாடு வளரும். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பூர்வ சொத்தில் வருகிற பணவரவு கூடும். புத்திரர் உங்கள் சொல் கேட்டு நடப்பர். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். இல்லறத்துணை நல்ல ஆலோசனை சொல்லி முன்னேற உதவுவார். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணிகள் நிறைவேறும். பணியாளர்கள் நிறைந்த சலுகை பெறுவர். பெண்கள், உறவினர் வீட்டின் மங்கள நிகழ்ச்சிக்கு உதவுவர். மாணவர்கள் புரிந்து படித்து அதிக மதிப்பெண் பெறுவர்.

சந்திராஷ்டமம்: 9.8.15 காலை 6:00 மணி 10.8.15 காலை 10:15 மணி.

பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபடுவதால் பொன், பொருள் சேரும்.

நல்ல எண்ணம் கொண்ட, விருச்சிக ராசி அன்பர்களே!

சந்திரன், புதன், ராகுவினால் ஓரளவு நன்மை கிடைக்கும். உறவினர், நண்பர்கள் உங்களை நன்கு உபசரிப்பர். கடந்த கால கஷ்டங்களுக்கு தீர்வு கிடைக்கும். பயணத்தின் போது, உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றவும். புத்திரர்களின் நல்ல சிந்தனைகளை செயல்படுத்த வழி காட்டுவீர்கள். இல்லறத் துணையுடன் கருத்து வேறுபாடு வரலாம். விட்டுக் கொடுத்து செல்லவும். எதிர்ப்பாளர்கள் விலகுவர். தொழில், வியாபாரத்தில் அளவான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் தொழில் நுட்பங்களை அறிவதில் ஆர்வம் கொள்வர். பெண்கள் நகை இரவல் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். மாணவர்கள் படிப்பில் முன்னேறுவர்.

சந்திராஷ்டமம்: 10.8.15 காலை 10:16 மணி 12.8.15 மாலை 5:32 மணி.

பரிகாரம்: ராமபிரானை வழிபடுவதால் மனதிற்கு இதம் கிடைக்கும்.

எவரிடமும் உயர்வு தாழ்வு கருதாமல் பழகும், தனுசு ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், சனி பகவான் அனுகூல அமர்வில் உள்ளனர். வாழ்வில் முன்னேற, புதிய பாதை கண்ணில் படும். மனதில் நம்பிக்கை கூடும். உடன் பிறந்தவர்களுக்கு ஓரளவு உதவுவீர்கள். வீடு, வாகன பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும். புத்திரர்களின் குறையை கண்டிப்பதில் இதமான அணுகுமுறையை பின்பற்றவும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவி, அதீத அன்புடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரம் செழிக்க, தேவையான திட்டங்களை நல்லமுறையில் செயல்படுத்துவீர்கள். பணியாளர்களுக்கு, வேலைப்பளு கூடும். பெண்கள், வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். மாணவர்கள், சிறப்பாகப் படிப்பர்.

சந்திராஷ்டமம்: 12.8.15 மாலை 5:33 மணி – 14.8.15 நள்ளிரவு 2:45 மணி.

பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால், கஷ்டம் தீரும்.

நேர்மையான வழியில் வாழ்க்கை நடத்தும், மகர ராசி அன்பர்களே!

கேது, புதன், சுக்கிரன் நற்பலன் தருவர். பசு, பால் பாக்ய யோகத்தால், பலவித நன்மைகள் கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். புத்திரர்கள், சிந்தனை மற்றும் செயலில் சிறந்து விளங்குவர். உடல்நிலையில் பின்னடைவு நிலை தொடர வாய்ப்புண்டு. மனைவியின் ஒவ்வொரு செயலும், மனதிற்கு நிம்மதி தரும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். பணியாளர்களுக்கு, வேலைப்பளு அதிகரிக்கும். பெண்களுக்கு, தாய்வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள், தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்வர்.

பரிகாரம்:
நந்தீஸ்வரர் வழிபாடு, செல்வம், புகழ் தரும்.

பணவரவுக்கு ஏற்ப செலவுகளை திட்டமிடும், கும்ப ராசி அன்பர்களே!

செவ்வாய், சூரியன், குரு அதிக நன்மை தருவர். ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். எதிர்ப்பு விலகி, பணிகளில் முன்னேற்றம் உருவாகும். கடன் கொடுத்த பணம் வசூலாகும். தெய்வ திருப்பணிக்கு உதவுவீர்கள். புத்திரர்கள், பிடிவாத குணத்துடன் நடந்து கொள்வர். நோய் தொந்தரவு குறைந்து, உடல்நிலை பலம் பெறும். இல்லறத் துணையின் மனதில், உங்கள் மீதான நம்பிக்கை வளரும் வகையில் நடந்து கொள்ளுங்கள். தொழில், வியாபாரம் வியத்தகு முன்னேற்றம் பெறும். பணியாளர்கள், அதிக சலுகை பெறுவர். பெண்கள், பிறர் விஷயத்தில் தலையிட வேண்டாம். மாணவர்களுக்கு, படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.

பரிகாரம்:
சிவனை வழிபடுவதால், குடும்ப ஒற்றுமை சீராகும்.

செயல் நிறைவேற மாற்று உபாயம் பின்பற்றும், மீன ராசி அன்பர்களே!

சந்திரன், புதனால் ஓரளவு நன்மை உண்டாகும். தேவையற்றதைப் பேசுவோரிடம் இருந்து விலகவும். தகுதிக்கு மீறிய வாக்குறுதி எதுவும் தர வேண்டாம். உடல்நலம் பேணுவதில் உரிய கவனம் வேண்டும். தாய்வழி உறவினர்கள், கருணை மனதுடன் உதவுவர். புத்திரர்கள், நல்லபடியாக நடந்து கொள்வர். இல்லறத் துணையின் அன்பால், மகிழ்ச்சியடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் அளவான லாபம் கிடைக்கும். பணியாளர்கள், தங்கள் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். பெண்கள் சகிப்புத் தன்மையுடன் நடந்து, குடும்ப நலம் பேணுவர். மாணவர்கள், ஆர்வமுடன் படிப்பர்.

பரிகாரம்:
தன்வந்திரி வழிபாடு, உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

Leave a Reply