shadow

download (2)

உழைப்பின் மூலம் நன்மை பெறும், மேஷ ராசி அன்பர்களே!

சுக்கிரன், குரு, புதன், ராகு ஆகியோரால் நன்மை உண்டாகும். அஷ்டம சனியின் தாக்கம் இருப்பதால், தகுதிக்கு மீறிய செயலில் ஈடுபட வேண்டாம். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்து மூலம் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. உடல் நலனில் அக்கறை காட்டுவீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் நன்மை ஏற்படும். வாகன பயணத்தின் மூலம் இனிய அனுபவம் உண்டாகும். மனைவியின் செயல்பாடு கண்டு மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாக நேரிடும். பெண்கள், ஆடம்பர விஷயத்தில் நாட்டம் கொள்வர். மாணவர்கள், திட்டமிட்டுப் படித்து கல்வி வளர்ச்சி காண்பர்.

பரிகாரம்:
தட்சிணாமூர்த்தி வழிபாடு, நன்மை தரும்.

இனிய பேச்சால் பிறரைக் கவரும், ரிஷப ராசி அன்பர்களே!

செவ்வாய், சுக்கிரன், கேது சிறப்பான பலன் தருவர். உறவினரிடம் இருந்த கருத்து வேறுபாடு மறையும். அறிமுகம் இல்லாதவர்களிடம், அதிக நெருக்கம் வேண்டாம். புத்திரர்களின் செயல்பாடு திருப்தி அளிக்கும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. மனைவியின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும், ஆதாயமும் உண்டாகும். பணியாளர்கள் பணிச் சுமையைத் திறம்பட சமாளிப்பர். பெண்கள் வீட்டுச் செலவில் சிக்கனம் மேற்கொள்வர். மாணவர்கள் சாகச விளையாட்டில் ஈடுபட வேண்டாம்.

பரிகாரம்: மகாலட்சுமி வழிபாடு, செல்வ வளம் அளிக்கும்.

நன்றி மறவாத மனம் படைத்த, மிதுன ராசி அன்பர்களே!

சூரியன், சுக்கிரன், குரு, சனி புதனால் நன்மை உண்டாகும். சாதுரியமாகச் செயல்பட்டு, குடும்ப பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். பேச்சிலும், செயலிலும் உண்மை நிறைந்திருக்கும் பணிகள் திட்டமிட்டபடி நிறைவேறும். உறவினர் மத்தியில் அந்தஸ்து அதிகரிக்கும். குடும்பத்தில், சுப விஷயம் குறித்த பேச்சில், நல்ல முடிவு கிடைக்கும். புத்திரர் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். எதிரி பிரச்னை அடியோடு விலகும். மனைவியின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பெண்கள், பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள், போட்டியில் பங்கேற்று பரிசு பெறுவர்.

பரிகாரம்:
சிவன் வழிபாடு, தொழில் வளர்ச்சி தரும்.

பிறருக்கு உதவும் மனம் கொண்ட, கடக ராசி அன்பர்களே!

சுக்கிரன், குரு, ராகு அதிக நன்மை தருவர். அஷ்டமச்சனி விலகியதால், வாழ்வில் வளர்ச்சி காண்பீர்கள். எதிர்பார்த்த சுபசெய்தி வீடு தேடி வரும். வீடு, வாகனம் வாங்க யோகமுண்டு. கருத்து வேறுபாடு நீங்கி, தாய்வழி உறவினர் அன்பு பாராட்டுவர். புத்திரர் செயல்பாடு அதிருப்தி அளிக்கலாம். ஆரோக்கியம் பலம் பெறும். மனைவி கண்ணும் கருத்துமாக குடும்ப நலம் பேணுவார். தொழிலில் புதிய உத்தி மூலம் வாடிக்கையாளரைக் கவர்வீர்கள். பணியாளர்கள், பணிச்சுமையில் இருந்து விடுபடுவர். பெண்கள், சகோதரர்களின் உதவி கிடைக்கப் பெறுவர். மாணவர்கள், கல்வியில் சிறந்து விளங்குவர்.

பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு வெற்றியளிக்கும்.

பெற்றோருக்கு மதிப்பு அளிக்கும், சிம்ம ராசி அன்பர்களே!

சுக்கிரன், சந்திரன் ஆகிய இருவரும் நற்பலன் தருவர். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்வது நல்லது. சகோதரர்களின் செயலைக் குறை சொல்ல வேண்டாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. பிள்ளைகளின் செயல்பாடு கண்டு பெருமிதம் கொள்வீர்கள். உடல் நலனில் அக்கறை கொள்வீர்கள். மனைவி விரும்பிக் கேட்ட பொருளை வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் படிப்படியாக லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். பெண்கள், உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் பங்கேற்று மகிழ்வர். மாணவர்கள், திட்டமிட்டுப் படித்து சிறப்பர்.

பரிகாரம்:
அம்பிகை வழிபாட்டால், நன்மை மேலோங்கும்.

நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும், கன்னி ராசி அன்பர்களே!

சுக்கிரன், செவ்வாய், சனி ஆகியோரால் நன்மை உண்டாகும். உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. மருத்துவச் செலவு செய்ய நேரிடும். கடந்த கால நற்செயலுக்கான நன்மை தேடி வரும். வீடு, வாகன பாதுகாப்பில் கவனம் செலுத்தவும். பிள்ளைகள், படிப்பில் சிறந்து விளங்குவர். மனைவியின் அன்பு கண்டு மனம் நெகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் மிதமான ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள், விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கப் பெறுவர். பெண்கள், குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர். மாணவர்கள், படிப்புடன் விளையாட்டிலும் ஈடுபட்டு மகிழ்வர்.

பரிகாரம்:
தன்வந்திரி வழிபாடு, ஆரோக்கியம் தரும்.

நியாய வழியில் நடக்க விரும்பும், துலாம் ராசி அன்பர்களே!

சூரியன், குரு, கேதுவினால் நற்பலன் கிடைக்கும். கவுரவத்திற்காக ஆடம்பர செலவு செய்வீர்கள். எதிர்கால வளர்ச்சி குறித்து திட்டமிடுவீர்கள். பேச்சில் நிதானத்தைப் பின்பற்றுவது நல்லது. சகோதர வகையில் சுப விஷயம் குறித்த பேச்சு நடக்கும். பிள்ளைகள் பிடிவாத குணத்துடன் செயல்படுவர். மனைவியின் கருத்துக்கு மதிப்பளிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் மனம் போல ஆடை, ஆபரணம் வாங்குவர். மாணவர்களுக்கு, நண்பர்களால் உதவி கிடைக்கும்.

பரிகாரம்:
விநாயகரை வழிபட்டால், தடை விலகும்.

நன்றி மறவாத மனம் கொண்ட, விருச்சிக ராசி அன்பர்களே!

சுக்கிரன், சூரியன், புதன் ராகுவினால் நன்மை உண்டாகும். சுறுசுறுப்புடன் பணியில் ஈடுபடுவீர்கள். சகோதரர்களின் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். வாகனத்தில் பராமரிப்பு செலவு உண்டாகும். பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். எதிரியின் கெடுசெயல் பலமிழந்து போகும். மனைவியின் செயல்பாடு கண்டு மனம் மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் விரிவாக்க முயற்சியில் ஈடுபடுவீர்கள். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை வந்து சேரும். பெண்கள் மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பர்.

சந்திராஷ்டமம்: 6.9.15 காலை, 6:00 மணி 8.9.15 இரவு 12.50 மணி.

பரிகாரம்: முருகன் வழிபாடு, சுபயோகம் அளிக்கும்.

குறிக்கோளுடன் பணியாற்றும், தனுசு ராசி அன்பர்களே!

புதன், சுக்கிரன், குரு மூவராலும் நன்மை உண்டாகும். குடும்பத்தில் சுபவிஷயம் குறித்த பேச்சு துவங்கும். மனதில் புத்துணர்வு மேலோங்கும். மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுங்குவீர்கள். வீடு, வாகன வகையில் பராமரிப்பு செலவு உண்டாகும். பிள்ளைகள் படிப்பில் சாதனை புரிவர். மனைவியால் செயல்பாடு பெருமையளிக்கும். தொழில், வியாபாரத்தில் வருமானம் படிப்படியாக அதிகரிக்கும். பணியாளர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப் பெறுவர். பெண்கள் ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வர். மாணவர்கள் எதிர்கால நன்மை கருதி படிப்பர்.

சந்திராஷ்டமம்: 8.9.15 இரவு, 12:51 மணி 11.9.15 காலை, 10:02 மணி.

பரிகாரம்:
பைரவர் வழிபாடு, தொழிலில் வளர்ச்சி தரும்.

உழைப்பால் உயர விரும்பும், மகர ராசி அன்பர்களே!

சந்திரன், கேது ஓரளவு நற்பலன் தருவர். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. செலவில் சிக்கனத்தை பின்பற்றி சேமிப்புக்கு வழிகாண்பீர்கள். சகோதரர் வழியில் கருத்து வேறுபாடு உண்டாகும். வாகன பயணம் மூலம் இனிய அனுபவம் பெறுவீர்கள். பிள்ளைகளின் குறையை சரி செய்வதில் நிதானத்தைப் பின்பற்றவும். எதிரிகளை இனம் கண்டு விலகுவீர்கள். மனைவியின் உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர், அக்கறையுடன் பணிபுரிவது நல்லது. பெண்கள் உறவினர்களின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். மாணவர்கள் சாகச விளையாட்டில் ஈடுபட வேண்டாம்.

சந்திராஷ்டமம்: 11.9.15 காலை, 10:03 மணி 12.9.15 இரவு, 12:00 மணி.

பரிகாரம்: விஷ்ணு வழிபாடு, சகல நன்மையும் தரும்.

மற்றவர் நலன் பேணும், கும்ப ராசி அன்பர்களே!

செவ்வாய், குரு, புதன் நற்பலன் தருவர். மனதில் தைரியம் அதிகரிக்கும். பணிகளை திறம்பட நிறைவேற்றுவீர்கள். தாய்வழி உறவினரைக் குறை சொல்ல வேண்டாம். புத்திரரின் நற்செயல் பெருமை தேடித் தரும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. எதிரியால் ஏற்பட்ட தொல்லை விலகும். மனைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு உயரும். பணியாளர்கள், பணி விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். பெண்கள், பிறருக்காக பணப் பொறுப்பு ஏற்க வேண்டாம். மாணவர்கள், விடாமுயற்சியுடன் படித்து முன்னேறுவர்.

பரிகாரம்:
ராமர் வழிபாடு, குடும்ப ஒற்றுமை வளர்க்கும்.

பெரியவர்களை மதித்து நடக்கும் மீன ராசி அன்பர்களே!

சுக்கிரன், சூரியனால் நன்மை அதிகரிக்கும். புதியவர்களின் அறிமுகமும், உதவியும் கிடைக்கும். அஷ்டமச் சனி விலகியதால் மனதில் நிம்மதி உண்டாகும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றுவது நல்லது. தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புத்திரர்களின் செயல்பாடு பெருமையளிக்கும். ஆரோக்கியம் பலம் பெறும். விருந்து, விழாவில் அடிக்கடி கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய உத்தியால் லாபம் உண்டாகும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளானாலும், ஆதாயம் கிடைக்கும். பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் பாதுகாப்பற்ற இடங்களுக்குச் செல்ல வேண்டாம்.

பரிகாரம்:
நரசிம்மர் வழிபாடு, நன்மையளிக்கும்.

Leave a Reply