shadow

9ஆ

மேஷம்: அடுத்தவரின் நற்செயலை மனதார பாராட்டுகிற மேஷ ராசிக்காரர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாய் ராசிக்கு ஆறாம் இடமான புதன் வீட்டில் பரிவர்த்தனை ஆகி உள்ளார். தன சப்தம ஸ்தான அதிபதியாகிய சுக்கிரன் சமசப்தம அமர்வில் செவ்வாயை பார்க்கிறார். இதனால், மனதில் உத்வேகமும் செயல்களில் வசீகரமும் ஏற்படும். குடும்பத்தில் மங்கலநிகழ்வு உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பெண்களால் உதவி உண்டு. புத்திரர் சிறு விஷயங் களுக்காக ஆர்வம், கோப குணங்களுக்கு ஆட்படுவர். எதிரியால் இருந்த தொந்தரவு விலகும். இல்லறத்துணையின் கருத்துகளை மனமுவந்து ஏற்பீர்கள். தொழிலில் அபிவிருத்தி பணிபுரிய தகுந்த வாய்ப்பு வரும். பணியாளர் கடமை உணர்ந்து பணி இலக்கு பூர்த்தி செய்வர். பெண்கள், குடும்ப நலன் சிறக்க சில மாற்றுத்திட்டம் உருவாக்குவர். மாணவர்கள், வெளியிடம் சுற்றுவதை குறைப்பதால் படிப்பில் அக்கறை வளரும்..

ரிஷபம்: தனது தகுதி, திறமைக்கு ஏற்ப பணி மேற்கொள்ளும் ரிஷப ராசிக்காரர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஆதாய ஸ்தானத்தில் உச்ச பலத்துடன் உள்ளார். குரு, சனி, ராகு கூடுதல் அளவில் நற்பலன் தருகின்றனர். திட்டமிடுகிற பணியில் குறுக்கீடு அணுகாத சுமுக சூழ்நிலை இருக்கும். மனஉறுதியுடன் செயல்பட்டு அதிக நன்மை பெறுவீர்கள். நண்பரின் கஷ்டம் நிவர்த்தியாக தேவையான உதவி வழங்குவீர்கள். சிலர் கூடுதல் பயன்பாட்டு வசதி பெற வீடு, வாகனத்தில் மாற்றம் செய்வர். புத்திரரின் சேர்க்கை சகவாசம் அறிந்து
நல்வழி நடத்துவது நலம் பெற உதவும். இல்லறத்துணை தன் செயல்திறனால் குடும்பத்தை ஆளுமை செய்வர். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழித்து உபரி பணவரவு கிடைக்கும். பணியாளர் கூடுதல் வேலைவாய்ப்பு திருப்திகர சன்மானம் பெறுவர். பெண்கள் கணவரின் நல்அன்பு, தாராள பணவசதி கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். மாணவர்கள், நண்பரின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவதால் நட்பு சீராக இருக்கும்.

 

மிதுனம்: எதிர்ப்புகளை சமயோசிதமாக வெல்லும் திறனுள்ள, மிதுன ராசிக்காரர்களே!

உங்கள் ராசிநாதனும், சுக ஸ்தான அதிபதியுமாகிய புதன் லாபஸ்தானத்தில் கேது, உச்சம் பெற்ற சூரியனுடன் அனுகூல அமர்வில் உள்ளார். முயற்சி நிறைவேற சமயோசிதமாக செயல்படுவீர்கள். இஷ்ட தெய்வ அருள் பலமும் துணை நின்று உதவும். இளைய சகோதரர், உங்களின் ஆலோசனையை பெரிதும் விரும்புவர். குடும்பத்தேவை பெருமளவில்
பூர்த்தியாகி மகிழ்ச்சி பெருகும்.புத்திரர் படிப்பு, வேலை வாய்ப்பில் உருவாகிற தடங்கல் தாமதமின்றி சரி செய்ய வேண்டும் கடந்த நாட்களில் எதிர்மறை எண்ணத்துடன் பழகியவர் சுயலாபம் பெற உங்களை புகழ்ந்து பேசுவர். நிதானித்து பழகுவது நல்லது. இல்லறத்துணை மனதில் உங்கள் மீதான நம்பிக்கைக்கு குறையேதும் வராமல் நடந்து கொள்ள வேண்டும்.
தொழில் வியாபாரம் நடைமுறை சிறக்க அதிக மூலதனம் தேவைப்படும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும். பெண்கள் உறவுக்கார பெண்களின் வழிகாட்டுதலை அளவுடன் ஏற்பது நல்லது. மாணவர்கள் சாகச விளையாட்டில் ஈடுபடக்கூடாது

 

.கடகம்: மனதை புத்துணர்வுடன் வைத்து செயலில் வெற்றி பெறும் கடக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு சுக, லாப ஸ்தான அதிபதி சுக்கிரன் உச்சபலத்துடன் பாக்கிய ஸ்தானத்தில் உள்ளார். மூன்றில் செவ்வாய், பத்தாம் இடத்தில் சூரியன், புதன் அனுகூலமாக உள்ளனர். வாழ்வின் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்ற உதவுகிற திட்டங்களைப் பற்றி சிந்திப்பீர்கள்.
இளைய சகோதரரின் உதவி பலமாக கிடைக்கும். வீடு, வாகனத்தில் பராமரிப்பு பணி தேவைப்படும். புத்திரர் செயல்திறன் வளர்த்து படிப்பு, வேலை வாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். எதிரியிடம் விலகுவதால் சிரமம் அணுகாமல் தவிர்க்கலாம்.இல்லறத்துணையின் கூடுதல் அன்பு, பாசம் மனதில் நெகிழ்ச்சி தரும். தொழில் வியாபாரம் செழித்து வளர, தேவையான அரசு உதவி பெற அனுகூலம் உண்டு. உத்தியோகஸ்தர் திட்ட இலக்கை அடைய பணியாளர்களுக்கு
ஊக்கமும் உதவியும் தருவர். பெண்கள், தாய்வீட்டு உதவி கிடைத்து மனதில் பெருமிதம் கொள்வர். மாணவர்கள், நன்றாக படித்து விரும்பிய பரிசுப்பொருள் பெற்றோரிடம் கேட்டுப் பெறுவர்.

 

சிம்மம்: முயற்சியில் உரிய நன்மை பெற ஆர்வமுடன் பணிபுரியும் சிம்ம ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, புகழ், தொழில் ஸ்தான அதிபதியாகிய சுக்கிரன், மீனத்தில் உச்ச பலத்துடன் உள்ளார். குரு, சனி, ராகு அதிகளவில் நற்பலன் தருகின்றனர். பணிகள் எளிதாக நிறைவேறி, மனதில் புத்துணர்வு, பெருமிதம் உருவாக்கும். அறிமுகம் இல்லாதவர்க்கு வீடு, வாகனத்தில் இடம் தரவேண்டாம். பசு பால் பாக்ய யோகம் சிறப்பாக அமைந்துள்ளதால், உறவினர் வீட்டு விருந்து, விழாவில் ஆர்வமுடன் கலந்து கொள்வீர்கள். புத்திரர் நண்பருக்கு இணையான அன்புடன் உங்களிடம் பழகுவர். மின்சார உபகரணங்களை கவனமுடன் பயன்படுத்த வேண்டும். இல்லறத்துணை ஒற்றுமை குணத்துடன் குடும்ப நலனில் அக்கறை கொள்வார்.
தொழில் வியாபாரம் செழிக்க நண்பரின் உதவியால் புதிய ஆர்டர் கிடைக்கும். பணியாளர், வெகுநாள் எதிர்பார்த்த சலுகை, பாராட்டு வந்து சேரும். பெண்கள் குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் கொள்வர். மாணவர்கள் அதிக விலையுள்ள பொருள் நண்பரிடம் இரவல் வாங்க வேண்டாம்

 

கன்னி: உலக நடப்புகளை அறிந்து கொள்வதில் ஆர்வமுள்ள கன்னி ராசிக்காரர்களே!

உங்கள் ராசி நாதனும், ஜீவன ஸ்தான அதிபதியுமாகிய புதன், தினகதி சுழற்சி கிரகம் சந்திரன் மட்டுமே இந்த வாரம் நற்பலன் தருகின்றனர். கடந்த நாட்களில் உங்களின் செயல்நிறைவேற தடையாக இருந்தவர் மற்றும் சூழ்நிலையை எண்ணுவீர்கள். சத்தியமும், தர்மமும் நல்வழியை தரும் என்று நம்பிக்கையுடன் பணிமேற்கொள்வீர்கள். பழகுபவர்களிடம் அளவுடன் பேசுவது அன்பை பாதுகாக்கும். வாகன பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும். புத்திரரின் செயல் குறையை பொறுமையுடன் சரி செய்வீர்கள். குடும்ப செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். இல்லறத்துணை புரிதல் திறனில் மாறுபட்டு மனவருத்தம் கொள்கிற சூழ்நிலை வளராமல் தவிர்க்கவும். தொழில் வியாபாரம் சீராக அமைந்திட அதிக உழைப்பு உதவும். தொழிற்சாலை பணியாளர் பாதுகாப்பு முறை தவறா மல் பின்பற்றவும். பெண்கள், கணவரின் வாழ்வியல் சிரமம் குறைக்க உதவிகரமாக இருக்க வேண்டும். மாணவர்கள் ஆசிரியரின் நல்வழிகாட்டுதல் முழு மனதுடன் ஏற்பது நன்மை தரும்.

 

துலாம்: சோதனையான நேரத்திலும் மனம் தளராமல் பணிபுரியும், துலாம் ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு குரு, சந்திரன் மட்டுமே நற்பலன் வழங்குகின்றனர். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதால் மட்டுமே பணக்கடன் பெறுகிற சூழ்நிலை மாறும். உங்கள் சொல்லுக்கு வரவேற்பு தருபவர்களிடம் மட்டும் பேசுவது நல்லது. உடன்பிறந்தவர் உங்களின் கஷ்ட சூழ்நிலை நிவர்த்தியாக தேவையான உதவி தருவார்.
வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். புத்திரர் விரும்பிய பொருள் கேட்டுப் பெறுவதில் பிடிவாத குணத்துடன் செயல்படுவார். அளவான உழைப்பு, சீரான ஓய்வு, உடல் நலம் பாதுகாக்கும்.
இல்லறத்துணையின் செயல்குறையை பொறுத்துக் கொள்வதால், ஒற்றுமை வளரும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை மிதமான அளவில் இருக்கும். பணியாளர், நிர்வாகத்தின் சட்ட திட்டம் தவறாமல் பின்பற்றவும். பெண்கள், நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். மாணவர்கள், புதியவரை நண்பராக ஏற்பதில் கவனம் அவசியம்.

 

விருச்சிகம்: நியாயமான ஆசைகளை மட்டும் நிறைவேற்றுகின்ற நற்குண முள்ள விருச்சிக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஆதாய ஸ்தானத்தில் அனகூலமாக உள்ளார். ஐந்தில் உச்சம் பெற்ற சுக்கிரன் ஆறாம் இடத்தில் புதன், கேது, உச்சம் பெற்ற சூரியன் சிறப்பான பலன் வழங்குகின்றனர். சமூக நிகழ்வுகளை தெளிந்த மனதுடன் அணுகுவீர்கள். உங்கள் மீதான மற்றவரின் பார்வை மதிப்பு மிகுந்ததாக இருக்கும்.
வாகன பயன்பாடு சராசரி அளவில் உபயோகம் இருக்கும். புத்திரர் வகையில் மங்கல நிகழ்வு ஏற்படும். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்வு கிடைக்கும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சி உண்டாகும். பணியாளர்கள் உபரி பணவரவில் சேமிப்பை அதிகரிப்பர். பெண்கள், பிள்ளைகளின் நலனில் கூடுதல் கவனம் கொள்வர். மாணவர்கள், புதிய பயிற்சியினால் தேர்ச்சி விகிதம் சீராக்குவர்.சந்திராஷ்டமம்: 3.5.14 இரவு 12:01 மணி முதல் 5.5.14 மதியம் 11:39 மணி வரை

 

தனுசு: துன்பத்தை மாற்ற மனதில் துணிவை வளர்த்திடும் தனுசு ராசிக்காரர்களே!

உங்கள் ராசிநாதன் குரு பகவான் தரும் நன்மைகளுக்கு நிகராக, குரு வீட்டில் உச்சம் பெற்றுள்ள சுக்கிரனும் நற்பலன் தருகிறார். சனி, ராகு ஆதாய ஸ்தானத்தில்
இருந்து வாழ்வில் மிகப் பெரிய நல்ல மாற்றத்தை உருவாக்குகிறார். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தின் தேவை பூர்த்தியாகும். சிலர், புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. புத்திரரின் உடல்நலம் சீராக மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். எதிரி உங்கள் மீது நல்ல அபிப்ராயம் கொள்வர். இல்லறத்துணை தன் கடமை உணர்ந்து பணிகளில் ஈடுபடுவார்.
தொழில், வியாபாரத்தில் உருவாகிற போட்டியை சரி செய்து பணவரவும், புகழும் பெறுவீர்கள். பணியாளர்கள், தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்வர். பெண்கள், கணவர் வழி சார்ந்த உறவினர்களை மனமுவந்து உபசரிப்பர். மாணவர்கள், நன்றாக படித்து அதிக தேர்ச்சி பெறுவர்.சந்திராஷ்டமம்: 5.5.14 மதியம் 11:40 மணி முதல் 7.5.14 இரவு 11:30 மணி வரை.

 

மகரம்: பிறருக்கு இயன்ற அளவில் உதவி புரிந்து மன நிறைவு கொள்ளும் மகர ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணியம், தொழில் ஸ்தான அதிபதியாகிய சுக்கிரன் உச்ச பலத்துடன் உள்ளார். நான்காம் இடத்தில் உள்ள புதன் நன்மை பலவும் வழங்குகிறார். இடம், சூழ்நிலை உணர்ந்து பேசி நற்பெயரை பாதுகாத்திடுவீர்கள்.
குடும்பத்தினரின் தேவை தாராள பணச்செலவில் நிறைவேற்றுவீர்கள். உறவினர் வருகை வீட்டில் மகிழ்ச்சி உருவாக்கும். புத்திரர் அறிவாற்றலில் சிறந்து, படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் அடைவர். நிர்பந்த பணக்கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். இல்லறத்துணை, உங்களின் அருமை பெருமை மிகுந்த நற்குணம் பாராட்டுவார்.
தொழில், வியாபாரத்தில் உருவாகிற குளறுபடி நண்பரின் உதவியால் நிவர்த்தியாகும். பணியாளர், சக பணியாளர்களிடம் சுமுக நட்பு பாராட்டுவர். பெண்கள், இறையருளால் பெற்ற நன்மைகளுக்காக நன்றி வழிபாடு நடத்துவர். மாணவர்கள், பெற்றோரின் சொல் கேட்டு நடந்து பெருமை தேடித் தருவர்.சந்திராஷ்டமம்: 7.5.14 இரவு 11:31 மணி முதல் 10.5.14 காலை 10:22 மணி வரை.

 

கும்பம்: கடின உழைப்பு அதிர்ஷ் டகரமான பலன் தரும் என்கின்ற நம்பிக்கைஉள்ள, கும்ப ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு சுக, பாக்ய ஸ்தான அதிபதியாகிய சுக்கிரன் உச்ச பலத்துடன் உள்ளார். மூன்றாம் இடத்தில் சூரியன், கேது ஐந்தில் குரு அனுகூலமாக உள்ளனர். பழகுபவர்களிடம் இனிய வார்த்தை பேசி மனம் கவர்வீர்கள். சமூக நிகழ்வின் போக்கு இப்படித் தான் இருக்கும் என, கணிக்கும் திறன் வளரும். வீடு, வாகனத்தில் அபிவிருத்தி பணி மேற்கொள்வீர்கள். புத்திரரின் வாழ்வியல் முறை பிறர் மெச்சத்தகும் அளவில் உருவாகும். எதிரியை மன்னிக்கும் மனப்பாங்கு பெறுவீர்கள்.இல்லறத்துணையின் தியான மனதை புரிந்து கொள்வீர்கள்.
தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூல தன்மை களை முழு முயற்சியுடன் பாதுகாத்திடுவீர்கள். பணியாளர்கள், பதவி உயர்வு சலுகை பெற அனுகூலம் உண்டு.
பெண்கள், கணவரின் கவுரவம் அதிகரிக்க உதவும் வகையில் செயல்படுவர். மாணவர்கள், படிப்பில் சிறந்து ஆசிரியர், பெற்றோரிடம் பாராட்டு பெறுவர்.
சந்திராஷ்டமம்: 10.5.14 காலை 10:23 மணி முதல் அன்று நாள் முழுவதும்.

 

மீனம்: லட்சிய மனதுடன் பணிபுரிந்து உரிய பலன் பெறுகின்ற மீன ராசிக்காரர்களே!

உங்கள் ராசியில் உள்ள சுக்கிரன் தினகதி சுழற்சி கிரகம் சந்திரன் மட்டுமே இந்த வாரம் நற்பலன் தருகின்றனர். இதனால், ஒவ்வொரு செயலிலும் நிதான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். பிறரது பகட்டு நிறைந்த வாழ்வு முறையை பின்பற்ற மனம் விரும்பும். சுக்கிரனின் அமர்வினால் வருகிற ஆடம்பர பணச்செலவை ஓரளவு கட்டுப்படுத்துவீர்கள். உடன் பிறந்தவர் உறுதுணையாக செயல்படுவர். வீட்டிற்கு வரும் விருந்தினரை அவசர பணிகளை காரணம் சொல்லி, உபசரிப்பில் குறை வைக்க வேண்டாம். புத்திரர் படிப்பில் சிறந்து கவிதை சொல்லும் அளவில் ரசனையுடன் பேசுவார். உஷ்ணம் தொடர்பான பிணி அணுகாதிருக்க உணவுப் பழக்கத்தில் மாற்றம் செய்வது நல்லது. இல்லறத்துணை உங்களின் நலன் சிறக்க தன் பங்களிப்பு தந்து உதவுவார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற அனுபவசாலியின் ஆலோசனை பெறுவீர்கள். பணியாளர்கள் நேரம் தவறாமையை பின்பற்றுவதால் சில நன்மை கிடைக்கும். பெண்கள், கணவரின் கருத்துக்கு ஏற்பட நடந்து கொள்வர். மாணவர்கள், பொது அறிவு பெறுவதில் அக்கறை கொள்வர்.

 

 

Leave a Reply