shadow

weekly rasipalan 24082014சமூக நலன்களுக்கு முக்கியத்துவம் தருகின்ற மேஷ ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு நான்கில் சுக்கிரன், ஆறாம் இடத்தில் உள்ள புதன், ராகு அனுகூல பலன் தருவர். பிறர் மனம் அறிந்து பேசுவீர்கள். சொல்லில் வசீகரம், உண்மையின் வெளிப்பாடு இருக்கும். உடன் பிறந்தவர் கூடுதல் அன்பு பாராட்டுவர். புத்திரரின் செயல்களை ஒழுங்குபடுத்துவது அவசியம். வழக்கு விவகாரத்தில் வெற்றி கிடைக்கும்.இல்லறத்துணையின் உடல் நலம் ஆரோக்கியம் பெற, மருத்துவ சிகிச்சை உதவும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம். தொழில் வியாபாரத்தில், சிறுஅளவில் குறுக்கீடு வந்து பின்னர் சரியாகும். குடும்ப பெண்கள் அக்கறை நிறைந்த மனதுடன் செயல்படுவர். மாணவர்கள் ஆசிரியரிடம் நற்பெயர் பெறும் வகையில், படிப்பில் கவனம் கொள்வர்.

பரிகாரம்: காமதேனு வழிபாடு நடத்துவதுடன் பசுவுக்கு பச்சரிசியில் வெல்லம் கலந்து தரலாம்.

 

வாழ்வின் முக்கிய தேவையை மட்டும் நிறைவேற்றுகின்ற ரிஷப ராசிக்கார்களே!

இந்த வாரம் உங்கள் ராசிக்கு சுக்கிரன், சனி, செவ்வாய் கேதுவின் அமர்வு சிறப்பான இடங்களில் உள்ளது. ஆர்வமுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். புதியவர்களின் அன்பு, உதவி கிடைக்கும். வீட்டுத் தேவை தாராள பணச்செலவில் நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் மங்கலநிகழ்வு உண்டாகும். புத்திரர் எதிர்பார்ப்பு தாமதம் ஆவதால், வருத்தம் கொள்வர். நிலுவைப் பணம் வசூலாகும்.இல்லறத்துணை, உங்களின் நல்ல குணம் பாராட்டுவார். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி, உபரி பணவரவு உண்டு. பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் பணவசதிக்கேற்ப ஆடை, அணிகலன் வாங்குவர். மாணவர்கள் புதியவரை நண்பராக ஏற்பதில் ஆர்வம் கொள்வர்.

பரிகாரம்: நாக தேவதையை வழிபடுவதுடன் ஏழைக் குழந்தையின் பசி போக்க பால் வழங்கலாம்

 

பணியில் தவறு நிகழ்ந்தால், உடனே சரி செய்திடும் மிதுன ராசிக்காரர்களே!

இந்த வாரம் உங்கள் ராசிக்கு குரு, சுக்கிரன், சூரியன், புதனின் அமர்வு சிறப்பான இடங்களில் உள்ளது. சமூகத்தில் பெற்ற நற்பெயரை பாதுகாத்து வாழ்வில் முன்னேற்ற பலன் பெற முயற்சி செய்வீர்கள். ஆரோக்கிய உடல்நலம் அமைந்து பணிகளில் உற்சாகம் கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிறைந்திருக்கும். புத்திரர் ஆர்வமிகு செயலால் சிரமம் எதிர்கொள்ள நேரிடலாம். கவனம் தேவை. பூர்வ சொத்தில் பராமரிப்பு பணச்செலவு கூடும். இல்லறத்துணையின் ஆலோசனை மனதில் புதிய மாற்றம் தரும். தொழில் வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். பணியாளர் திறம்பட பணிபுரிந்து வெகுமதி பெறுவர். பெண்கள், உறவினர்களின் நன்மதிப்பு பெறும் வகையில் நடந்து கொள்வர். மாணவர்கள் லட்சிய மனதுடன் படிப்பில் முன்னேற்றம் அடைவர்.

பரிகாரம்:
நந்தீஸ்வரரை வழிபடுவதுடன்பழங்கள் படையல் செய்து பக்தர்களுக்கு தரலாம்.

 

அன்பு, பணிவின் மூலம் பிறர் மனம் கவர்ந்திடும் கடக ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு சுக்கிரன், ராகு நற்பலன் தருவர். ஆடம்பர செயல் தவிர்ப்பதால் மனஅமைதி பாதுகாத்து பணக்கடன் சுமையை குறைக்கலாம். அதிர்ஷ்டவசமாக சில பணி நிறைவேற, எதிர்கால வாழ்வில் நம்பிக்கை தரும். பொது விஷயங்களில் கருத்து சொல்ல வேண்டாம். தொலைதுார வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரரின் உடல் நலத்திற்கு, ஒவ்வாத உணவு வகை உண்பதை தவிர்க்க சொல்லுங்கள். எதிரியிடம் விலகுவது நல்லது.இல்லறத்துணை குடும்ப நலன் காத்திடுவார். தொழில் வியாபாரத்தில், சிறுகுறுக்கீடு வந்து பின்னர் சரியாகும். பணியாளர் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும். குடும்ப பெண்கள் பணச்செலவில் சிக்கனம் மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்லக்கூடாது.

பரிகாரம்: அன்னை மீனாட்சியை வழிபடுவதுடன் ஏழைச்சிறுமிக்கு புத்தாடை வழங்கலாம்.

 

சுயதிறமையை கவனத்தில் கொண்டு செயல்படும், சிம்ம ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு சுக்கிரன் சனி செவ்வாய் அதிக அளவில் நற்பலன் தருவர். மற்ற கிரகங்கள் எதிர்மறையாக உள்ளனர். தாழ்வு மனம், கோபம் தவிர்த்து நம்பிக்கையுடன் பணிபுரிவது அவசியம். உடன்பிறந்தவர் இயன்ற அளவில் உதவுவர். தாயின் தேவை நிறைவேற்றுவீர்கள். புத்திரர் ஆடம்பர எண்ணங்களுடன் நடந்து கொள்வர். எதிரி சொந்த சிரமங்களால் விலகுவர். இல்லறத்துணை கூடுதல் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வார். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி மகிழ்ச்சி தரும். பணியாளர் தொழில் நுட்பத் திறன் வளர்த்துக் கொள்வர். பெண்கள் குடும்ப உறுப்பினர்களின் கருத்துகளை ஏற்பர். மாணவர்கள் இலகுவான மனதுடன் படித்து சிறந்த தேர்ச்சி விகிதம் பெறுவர்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதுடன் கொண்டக்கடலை தானம் வழங்கலாம்.

உழைப்பின் பலனை முழுமையாக பெற்றிடும் கன்னி ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு குரு, சுக்கிரன் மட்டுமே நற்பலன் தருகின்றனர். மனதில் குழப்பம் பணிகளை தாமதப்படுத்தலாம். உடல் நலத்தில் கூடுதல் அக்கறை வேண்டும். பேசும் வார்த்தை கடினமாக அமைந்து, பிறர் மனம் கஷ்டப்படுத்தலாம். கவனம் தேவை. உறவினர் குடும்ப நிகழ்ச்சிகளில், அதிக நேரம் கலந்து கொள்வதை தவிர்க்கவும். புத்திரரின் நற்செயல் பெருமை தேடித்தரும். பணக்கடன் பெறுவதில் நிதானம் வேண்டும். இல்லறத்துணை ஆறுதல் மனபாங்குடன் நடந்து கொள்வர். தொழிலில் வருகிற இடையூறு தாமதமின்றி சரி செய்யவும். பணியாளர் பணியிடத்தில் விவாதம் பேச வேண்டாம். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள், பெற்றோரின் கூடுதல் அன்பை பெறுவர்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபடுவதுடன், படிப்பில் சிறந்த மாணவர்களுக்கு உதவலாம்.

வாழ்வில் இன்பமும், துன்பமும் வருவது இயற்கை என கருதும், துலாம் ராசிக்காரர்களே!

இந்த வாரம் உங்கள் ராசிக்கு கேது, சூரியன் மட்டுமே நற்பலன் தருகின்றனர். சிலர், கடந்த காலத்தில் செய்த இடையூறை நினைத்து வருந்த நேரிடலாம். இருப்பினும், நிகழ்கால நன்மை ஆறுதலாக அமைந்திடும். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள். புத்திரரின் அவசர செயல்களை ஒழுங்கு செய்வது நல்லது. பணக்கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள்.இல்லறத்துணை வழி சார்ந்த உறவினர்களிடம் அதிக எதிர்பார்ப்பு வேண்டாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சீராக, சில மாற்றம் பின்பற்றவும். பணியாளர்களுக்கு குடும்ப செலவு அதிகரிக்கும். குடும்ப பெண்கள், புறம்பேசுபவர்களிடம் விலகுவது நல்லது. மாணவர்கள், அதிக கவனமுடன் படிக்க வேண்டும்.

பரிகாரம்: சூரிய பகவானை வழிபடுவதுடன், தந்தையின் வழிகாட்டுதல் பின்பற்றி செயல்படவும்.

செயலில் உறுதியும், அமைதியில் நாட்டமும் கொண்ட, விருச்சிக ராசிக்காரர்களே!

இந்த வாரம் உங்கள் ராசிக்கு சுக்கிரன், சூரியன், ராகு, புதனின் அமர்வு சிறப்பாக உள்ளது. கடந்த நாட்களில் தாமதமான பணியை, புதிய முயற்சியினால் நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவர். அறிமுகம் இல்லாதவர்களுக்கு வீடு, வாகனத்தில் இடம் தர வேண்டாம். புத்திரர் நண்பருக்கு இணையான அன்புடன் பழகுவர். எதிர்மறை கருத்து பேசுபவரிடம் விலகவும். இல்லறத்துணை குடும்ப நலன் சிறக்க, உரிய ஆலோசனை சொல்வார். தொழிலில் முன்னேற்றம் பெற, தேவையான அரசாங்க உதவி பெறலாம். பணியாளர், பணச்செலவில் சிக்கனம் பின்பற்றவும். பெண்கள், கணவரின் அன்பு கிடைத்து, மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். மாணவர்கள் வாகனத்தில், மித வேகம் பின்பற்றவும்.

பரிகாரம்: விநாயகரை வழிபடுவதுடன், அவல், பொரி, சர்க்கரை நிவேதனம் செய்து பிரசாதம் வழங்கலாம்.

நல்ல குணங்களை தவறாமல் பின்பற்றும், தனுசு ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு சுக்கிரன், புதன், சனி, செவ்வாயின் அமர்வு அனுகூலமாக உள்ளது. பணிகளில் ஆர்வம் கொள்வீர்கள். உறவினர், நண்பரின் அன்பு வார்த்தை மனதில் நம்பிக்கை தரும். வாகன பயன்பாடு அளவுடன் மேற்கொள்வீர்கள். புத்திரரின் நற்செயல் பெற்றோருக்கு பெருமை தேடித்தரும். உங்களின் நலம் விரும்புபவர் சில உதவி வழங்குவார். இல்லறத்துணை கூடுதல் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வார். மகிழ்ச்சி, தன்னம்பிக்கை கூடும். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். பணியாளர், தன்கடமை உணர்ந்து பணியில் நற்பெயர் பெறுவர். பெண்கள், குடும்ப நலனில் அதிக கவனம் கொள்வர். மாணவர்கள், பெற்றோர் மனம் வருந்தும்படி நடந்து கொள்ளக்கூடாது.

சந்திராஷ்டமம்: 23.8.14 நள்ளிரவு 12:01 மணி முதல் 24.8.14 இரவு 4:45 மணி வரை.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதுடன் வெண்ணெய் சாற்றி பிரசாதம் வழங்கலாம்.

வார்த்தை நிதானித்து பேசி, நற்பெயர் பாதுகாக்கும் மகர ராசிக்காரர்களே!

இந்த வாரம் உங்கள் ராசிக்கு கேது, குரு மட்டுமே நற்பலன் தருகின்றனர். ஆன்மிக நம்பிக்கையுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். வார்த்தையில் நிதானம் நற்பெயரை பாதுகாக்கும். தாயின் உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை உதவும். புத்திரர் விரும்பிய பொருள் பெறுவதில் தாமதம் ஏற்படலாம். எதிரியின் பொறாமை மிகுந்த செயலை வெறுத்து ஒதுக்குவீர்கள்.இல்லறத்துணையின் கருத்துகளில் உள்ள நியாயம் உணருவீர்கள். தொழில், வியாபார நடைமுறையில் உள்ள அனுகூலம் கவனமுடன் பாதுகாப்பது அவசியம். பணியாளர்கள், பணி இலக்கு நிறைவேற்ற கால அவகாசம் தேவைப்படும். பெண்கள், கணவரின் மனக்குறையை சரி செய்ய முயற்சிப்பது ஒற்றுமை வளர்க்கும். மாணவர்கள், சாகச விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது.

சந்திராஷ்டமம்: 24.8.14 இரவு 4:46 மணிமுதல் 27.8.14 மாலை 4:04 மணி வரை.

பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதுடன், இனிப்பு பதார்த்தம் படையல் செய்து, பக்தர்களுக்கு தரலாம்

அடுத்தவர் கருத்தின் நியாயம் உணர்ந்து செயல்படும் கும்ப ராசிக்காரர்களே!

இந்த வாரம் உங்கள் ராசிக்கு புதன் மற்றும் தினகதி சுழற்சி கிரகம் சந்திரன் மட்டுமே நற்பலன் தருவர். புதிய முயற்சியில் முன் யோசனையுடன் ஈடுபட வேண்டும். சமூக நிகழ்வு மாறாக அமைந்து, மன வருத்தம் தரலாம். வீடு, வாகனத்தில் உரிய பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். புத்திரர் படிப்பு, அறிவுத்திறனில் முன்னேற்றம் காண்பர். எதிரியின் அவதுாறு பேச்சுக்களை பொருட்படுத்த வேண்டாம்.இல்லறத்துணையின் மனதில் உங்கள் மீதான நம்பகத்தன்மை குறையாமல் நடந்து கொள்ளவும். தொழில், வியாபார நடைமுறை தாமதகதியில் இயங்கும். பணியாளர், பணியில் குளறுபடி வராமல் கவனமுடன் செயல்பட வேண்டும். பெண்கள், பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்க கூடாது. மாணவர்கள், நண்பரிடம் தேவையற்ற விவாதம் பேச வேண்டாம்.

சந்திராஷ்டமம்: 27.8.14 மாலை 4:05 மணி முதல் 29.8.14 இரவு 1:41 மணி வரை.

பரிகாரம்: பைரவரை வழிபடுவதால் துன்பம் நீங்கி வாழ்வில், நன்மை வளரும்

உறவினர்களிடம் பாசத்துடன் பழகுகின்ற மீன ராசிக்காரர்களே!

இந்த வாரம் உங்கள் ராசிக்கு குரு, சூரியன் மட்டுமே நற்பலன் தருகின்றனர். கடந்த கால அனுபவங்களை பாடமாக எண்ணி செயல்படுவீர்கள். நற்குணம் உள்ளவர்களின் அன்பு, ஆதரவு கிடைக்கும். உடன் பிறந்தவரின் வாழ்வு வளம் பெற உதவுவீர்கள். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். புத்திரரின் நல்ல செயல் உறவினர், நண்பர்களிடம் வாழ்த்து பெற்றுத் தரும். எதிரி சொந்த சிரமங்களால் விலகுவர். இல்லறத்துணை தாயின் பரிவுடன் உங்களை பார்த்துக் கொள்வார். தொழில், வியாபாரத்தில் முன்னேற்ற பலன் உண்டு. பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். குடும்ப பெண்கள், சேமிப்பு பணத்தில் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். மாணவர்கள், பொது இடங்களில் அதிக நேரம் வேடிக்கை பார்க்க வேண்டாம்.

சந்திராஷ்டமம்: 29.8.14 இரவு 1:42 மணி முதல் 30.8.14 அன்று நாள் முழுவதும்.

பரிகாரம்: சனிபகவானை வழிபடுவதுடன், வயோதிக ஏழைக்கு உணவு வழங்கலாம்.

Leave a Reply