shadow

மேஷம்

சொன்ன சொல்லைக் காப்பாற்றும் குணமுடைய நீங்கள், எப்பொழுதும் நல்லதையே நினைப்பீர்கள். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்கள் செயலில் வேகம் கூடும். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். பழுதான சமையலறை சாதனங்களை மாற்றுவீர்கள். சூரியன் சாதகமாக இருப்பதால் அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வழக்கு சாதகமாகும். சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரமும், சனியின் போக்கும் சரியில்லாததால் அவ்வப்போது ஒருவித விரக்தி, அலுப்பு, சலிப்பு, தூக்கமின்மை வந்துச் செல்லும். 22, 23 ஆகிய தேதிகளில் எதிலும் நிதானம் தேவை. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடம் பரிசீலிக்கும். கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய இடத்தை விரிவுப்படுத்தி, அழகுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் சின்ன சின்ன நெருக்கடிகள் வந்தாலும் தேங்கிக் கிடந்தப் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பழைய சிக்கல்கள் தீரும் வாரமிது.

 

ரிஷபம்

விடாப்பிடியான செயல்திறனும், விட்டுக் கொடுக்கும் மனசும் கொண்ட நீங்கள், இனிமையான பேச்சுக்கு சொந்தக்காரர். முக்கிய கிரகங்களான சூரியன், குரு, சனி மற்றும் ராகு ஆகிய கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் பெரிய திட்டங்கள் நிறைவேறும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். புது பொறுப்புகள், பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். 5-ல் செவ்வாய் தொடர்வதால் மனஇறுக்கம், வீண் டென்ஷன், எதிலும் ஒருவித தயக்கம், சொத்து சிக்கல்கள் வந்துச் செல்லும். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது. சகோதர வகையில் மனவருத்தம் வரும். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் வி. ஐ. பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும் வாரமிது.

மிதுனம்அமைதியை விரும்பும் நீங்கள், போட்டியென வந்து விட்டால் விஸ்வரூபம் எடுத்து மற்றவர்களை மிரள வைப்பீர்கள். கேது வலுவாக லாப வீட்டிலேயே தொடர்ந்துக் கொண்டிருப்பதால் வீரியத்தை விட காரியம் தான் முக்கியம் என்பதை உணருவீர்கள். அயல்நாட்டு தொடர்பால் முன்னேறுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். ஆன்மிகப் பெரியோர்களின் நட்பால் சில குழப்பங்களிலிருந்து தெளிவு கிடைக்கும். ஷேர் மூலமாக பணம் வரும். சுக்ரனும் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்திருந்த பணம் தாமதமானாலும் எதிர்பாராத வகையில் கணிசமான தொகை வந்து சமாளிப்பீர்கள். பிள்ளைகள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு புது திட்டங்கள் தீட்டுவீர்கள். ஜென்ம குரு தொடர்வதால் மற்றவர்களை அலட்சியப்படுத்த வேண்டாம். பழைய வழக்கை நினைத்து கவலையடைவீர்கள். அரசியல்வாதிகளே! தகுந்த ஆதாரமின்றி எதிர்கட்சியினரை தாக்கி பேச வேண்டாம். கன்னிப் பெண்களே! பள்ளி கல்லூரி கால தோழியை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களில் ஒருசிலர் உங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன் வைப்பார்கள். வளைந்துக் கொடுக்க வேண்டிய வாரமிது.

 

கடகம்

நியாயமாக கிடைக்க வேண்டியதைக்கூட சில நேரங்களில் விட்டுக்கொடுக்கும் நீங்கள் மற்றவர்களின்மீது அதிக பாசம் வைப்பீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் சாதுர்யமாகப் பேசி பிரச்னைகளை சமாளிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். பூர்வீக சொத்தில் உங்கள் ரசனைக் கேற்ப சில மாற்றங்கள் செய்வீர்கள். வெளிவட்டாராத்தில் மதிப்புக் கூடும். உறவினர், நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவிகள் கிட்டும். மகளின் பிடிவாதப் போக்கு மாறும். மகனுக்கு நல்ல வாழ்க்கை துணை அமைவார். வாய்தா வாங்கி தள்ளிப் போன வழக்கு ஒன்றில் சாதகமான தீர்ப்பு வரும். சூரியன் 8-ல் அமர்ந்ததாலும், சுக்ரன் 6ல் மறைந்திருப்பதாலும் திடீர் பயணங்கள், வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள், குடி நீர் குழாய், கழிவு நீர் குழாய் பழுது வந்து நீங்கும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அரசியல்வாதிகளே! தலைமைப் பற்றிய ரகசியங்களை யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கன்னிப் பெண்களே! மனசை அலைபாயவிடாமல் ஒருநிலை படுத்துங்கள். வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகள் மூலம் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அவ்வப்போது டென்ஷனாவீர்கள். சகோதர உதவியால் சாதித்துக் காட்டும் வாரமிது.

 

சிம்மம்

அடிப்படை உரிமைகளை எப்போதும் விட்டுக்கொடுக்காத நீங்கள் அடுத்தவர்களின் சுதந்திரத்தில் அநாவசியமாக தலையிடமாட்டீர்கள். சுக்ரன் 5-ம் வீட்டில் நிற்பதால் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். புது வீடு கட்டிக் குடிப் புகுவீர்கள். கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். ராகு, சனி மற்றும் குரு சாதகமாக இருப்பதால் விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். சபைகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். சிலர் புதுத் தொழில் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். புதன் 6-ல் மறைந்திருப்பதால் உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வந்துச் செல்லும். ராசிநாதன் சூரியன் 7-ம் வீட்டில் நுழைந்திருப்பதால் உடல் உஷ்ணத்தால் அடிவயிற்றில் வலி, வேனல் கட்டி, கண் எரிச்சல் வந்துச் செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். அரசியல்வாதிகளே! சகாக்கள் உங்கள்மீது அதிருப்தியடைவார்கள். கன்னிப் பெண்களே! உயர்கல்வி நல்ல விதத்தில் அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்-. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக் கேற்ப புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உடைத் தெறிவீர்கள். தைரியமான முடிவுகளால் முன்னேறும் வாரமிது.

 

கன்னி

 

சமயோஜித புத்தியால் எதையும் செய்து முடிக்கும் நீங்கள், எப்பொழுதும் பரபரப்பாக இருப்பீர்கள். சூரியன் 6-ம் வீட்டில் நிற்பதால் எதிர்ப்புகள் அடங்கும். தள்ளிப் போன அரசாங்க விஷயம் விரைந்து முடியும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். புது வேலை அமையும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். அதிக வட்டிக் கடனை பைசல் செய்ய வழி பிறக்கும். சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் உறவினர், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். செவ்வாய் ராசிக்குள் நிற்பதாலும், பாதச் சனி தொடர்வதாலும், குரு 10-ல் நீடிப்பதாலும் சுற்றியிருப்பவர்களெல்லாம் உங்களை ஏமாற்றுவதாக சில நேரங்களில் நினைத்துக் கொள்வீர்கள். தோல்விமனப்பான்மையால் மனஇறுக்கம் அதிகரிக்கும். வெளிப்படையாகப் பேசி பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். அரசியல்வாதிகளே! கட்சி தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கன்னிப் பெண்களே! காதல் கைக்கூடும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமையைப் பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள். நெருக்கடிகளை நீந்திக் கடக்கும் வாரமிது.

 

துலாம்

 

நம்பிவந்தவர்களுக்கு நல்லதை செய்யும் நீங்கள், சமூகத்தின் மீது அக்கறையுள்ளவர்கள். குருபகவான் வலுவாக இருப்பதால் சின்ன சின்ன கனவுகள் நனவாகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். சோர்ந்திருந்த நீங்கள் உற்சாகமடைவீர்கள். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பித் தருவார்கள். சூரியன் 5-ம் வீட்டில் நுழைந்ததால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். ஜென்மச் சனி தொடர்வதாலும், ராகுவும் ராசிக்குள் நிற்பதாலும் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மை வந்து நீங்கும். வாயுக் கோளாறால் நெஞ்சு வலிக்கும். செரிமானக் கோளாறு வந்து நீங்கும். அரசியல்வாதிகளே! மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். கன்னிப் பெண்களே! தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அலட்சியப் போக்கை தவிர்க்க வேண்டிய வாரமிது.

 

விருச்சிகம்

மனதில் பட்டதை பளிச்சென பேசும் உங்களுக்கு, பகுத்தறிவும், பட்டறிவும் அதிகமுண்டு. புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். வி. ஐ. பிகளால் ஆதாயமடைவீர்கள். புரோக்கரேஜ், கமிஷன் மூலமாக பணம் வரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பூர்வீக சொத்தை விரிவுப்படுத்தி, அழகுப்படுத்துவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். ராகுவும், சனியும் 12-ல் மறைந்திருப்பதால் தூக்கமின்மை, கனவுத் தொல்லை, பழைய பகை, கடனை நினைத்த கவலைகள் வந்துச் செல்லும். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். நீண்ட நாட்களாக போக நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். அரசியல்வாதிகளே! வீண் பேச்சை தவிர்த்து தொகுதி நலனில் அக்கறை காட்டுங்கள். கன்னிப் பெண்களே! உங்களுக்கு இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். காதலில் வெற்றி உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் வேலைச்சுமையுடன் பாராட்டும் உண்டு. தொலை நோக்குச் சிந்தனையால் வெற்றி பெறும் வாரமிது

 

தனுசு

 

எங்கும் எதிலும் புதுமையும், புரட்சியும் செய்யும் நீங்கள், சுற்றியிருப்பவர்களை அனுசரித்துப் போகும் குணமுடையவர்கள். சூரியன் 3-ம் வீட்டில் நுழைவதால் எதிலும் வெற்றி கிட்டும். பணம் வரும். நாடாளுபவர்கள் உதவுவார்கள். அரசு காரியங்கள் சுலபமாக முடியும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். கண் எரிச்சல், பல் வலி நீங்கும். பிதுர்வழி சொத்து வந்துச் சேரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். புதுப் பதவிக்கு உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். வருமானம் உயரும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். மாற்று மதத்தவர், வேற்றுமொழிக்காரர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். அரசியல்வாதிகளே! அனைத்துக் கட்சியினரையும் அனுசரித்துப் போகும் மனப்பக்குவம் வரும். கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் புது முடிவுகள் எடுப்பீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சியும் பலிதமாகும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. திடீர் திருப்பங்களும், சந்திப்புகளும் நிகழும் வாரமிது.  அதிர்ஷ்ட தேதிகள் : 18, 20, 22 அதிர்ஷ்ட எண்கள் : 1, 5 அதிர்ஷ்ட நிறங்கள் : அடர்நீலம், ரோஸ் அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

 

மகரம்

 

தோல்வி கண்டு துவளாமல், விசையுறு பந்தை போல் மீண்டு எழும் நீங்கள், கடின உழைப்பாளிகள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் மாறுபட்ட யோசனைகள் உங்கள் மனதில் உதிக்கும். எதிர்பார்த்த வேலைகள் தாமதமானாலும் எதிர்பாராத சில காரியங்கள் முடிவடையும். பூர்வீக சொத்தில் ஒருபகுதியை விற்று சில பிரச்னைகளிலிருந்து வெளி வருவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். சொந்த-பந்தங்களின் சுய ரூபத்தை தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள். சூரியன் 2-ல் அமர்ந்திருப்பதால் பார்வைக் கோளாறு, காது வலி வந்து நீங்கும். பேச்சில் காரம் வேண்டாம். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். எவ்வளவு பணம் வந்தாலும் கரையும். சுக்ரன் 12-ல் மறைந்திருப்பதால் திருமணம், சீமந்தம் போன்ற சுபச் செலவுகள் அதிகரிக்கும். வாகனம் பழுதாகும். திடீர் பயணம் உண்டு. 17-ந் தேதி நண்பகல் 12 மணி வரை எதிலும் கவனம் தேவை. அரசியல்வாதிகளே! வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஆலோசனைகள் உதவிகரமாக இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். தவிர்க்க முடியாத செலவுகளால் திணறும் வாரமிது.   அதிர்ஷ்ட தேதிகள் : 20, 21, 22 அதிர்ஷ்ட எண்கள் : 4, 6 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ்பச்சை, மெரூண் அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

 

கும்பம்

 

கள்ளங்கபடமில்லாத வெள்ளையுள்ளமும், மற்றவர்களது தேவையறிந்தும் உதவுபவர்களே! கேதுவும், குருவும் வலுவாக இருப்பதால் சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவீர்கள். சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். எத்தனை சோகங்கள் இருந்தாலும் அதை வெளியிலே காட்டிக் கொள்ள மாட்டீர்கள். பிள்ளைகளின் திருமணம், உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். கோவில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். நினைத்திருந்த டிசைனில் ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். ராசிக்குள் சூரியன் நுழைந்திருப்பதால் முன்கோபம், உஷ்ணத்தால் அடிவயிற்றில் வலி, வேனல் கட்டி வந்துச் செல்லும். அரசு விவாரங்களில் அலட்சியம் வேண்டாம். வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும். 17-ந் தேதி நண்பகல் 12 மணி முதல் 18 மற்றும் 19-ந் தேதி இரவு 8 மணி வரை எதிலும் பொறுமையுடன் செயல்படப்பாருங்கள். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்தைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் தள்ளி இருங்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். சின்ன சின்ன உடற்பயிற்சிகள் தேவைப்படும் வாரமிது.  அதிர்ஷ்ட தேதிகள் : 20, 22, 23 அதிர்ஷ்ட எண்கள் : 4, 7 அதிர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தாபச்சை, கிரே அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

 

Leave a Reply