shadow

images (4)

அடுத்தவரின் நற்செயலை மனதார பாராட்டும், மேஷ ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு சூரியன், புதன், சுக்கிரன், ராகு இந்த வாரம் அனுகூல பலன் தருவர். செயல் சிறந்து உரிய நன்மை கிடைக்கும். எதிர்ப்புகளை வெல்லும் திறன் அறிவீர்கள். உடன்பிறந்தவர்களின் உதவி உண்டு. வீடு, வாகனத்தில் பயன்பாடு திருப்திகரமாகும்.
புத்திரர் படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். பணக்கடனில் ஒருபகுதியை செலுத்துவீர்கள். இல்லறத்துணை விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சிக்கு தேவையான அரசு உதவியை கேட்டுப் பெறலாம். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள், குடும்ப நலன்களை அக்கறையுடன் பாதுகாத்திடுவீர்கள். மாணவர்கள், ஆசிரியரின் வழிகாட்டுதலை தவறாமல் பின்பற்றுவீர்கள்.

பரிகாரம்: காமதேனுவை வழிபடுவதால், தாமதமான நன்மை முறையாக வந்து சேரும்.

மனதை புத்துணர்வுடன் வைத்து செயலில் வெற்றி பெறும், ரிஷப ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, லாப ஸ்தானத்தில் உள்ள சுக்கிரன், கேது, செவ்வாய் முழு அளவில் நற்பலன் தருவர். குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும். வாகனத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால், பயணம் எளிதாக அமைந்திடும். புத்திரரின் விருப்பத்தை ஓரளவு நிறைவேற்றுவீர்கள். உங்கள் வாழ்வியல் சிறப்பினை கண்டு, எதிர்மனப்பாங்கு உள்ளவரும் அன்பு பாராட்டுவார். இல்லறத்துணையின் சொல்லும், செயலும் உங்கள் மனதிற்கு உத்வேகம் தரும். கூடுதல் உழைப்பால் தொழில் வளர்ச்சி சீராகும். பணியாளர்கள், பாதுகாப்பில் உரிய கவனம் வேண்டும். பெண்கள், மனக்கவலை நீங்கி, பணிகளில் புதுமையை பின்பற்றுவீர்கள். மாணவர்கள், தாழ்வு மனப்பான்மையை அகற்றி, படிப்பில் அக்கறை கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம்: 14.2.15 நள்ளிரவு 12:01 மணிமுதல், 16.2.15 மாலை 5:37 மணி வரை.

பரிகாரம்: நாக தேவதையை வழிபடுவதால், வாழ்க்கைத்தரம் மேம்படும்.

தன் தகுதி, திறமை உணர்ந்து பணிபுரியும், மிதுன ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு குரு, சனி, புதன் நற்பலன் தரும் இடங்களில் உள்ளனர். நிதானித்து பேசி பல நலமும் பெறுவீர்கள். எதிர்ப்பாளர் விலகிச் செல்கிற புதிய சூழல் உருவாகும். புத்திரரின் தேவை நிறைவேற தாமதம் ஆவதால், மனக்கிலேசம் கொள்வர். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவை உண்ண வேண்டாம். இல்லறத்துணையின் மனக்குழப்பம் தீர, உங்கள் அன்பு, பரிவு நிறைந்த செயல் உதவும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் தேவைப்படும். பணியாளர்கள், குளறுபடி வராமல் செயல்பட வேண்டும். பெண்கள், பணச்செலவில் சிக்கனம் பின்பற்றுவீர்கள். மாணவர்கள், பாதுகாப்பு விஷயங்களில் உரிய கவனம் வேண்டும்.

சந்திராஷ்டமம்: 16.2.15 மாலை 5:38 மணி முதல், 18.2.15 இரவு 8:51 மணி வரை.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

எதிர்ப்புகளை உரிய வகையில் சரி செய்யும், கடக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு சுக்கிரன், ராகு, சந்திரன் இந்த வாரம் நற்பலன் தருவர். நற்செயல்களால் புகழ் பெறுவீர்கள். புதிய பணிகளை பயன் அறிந்து ஏற்கவும். உடன் பிறந்தவர் உதவி புரிவர். வீடு, வாகனத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்வீர்கள். புத்திரரின் உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவை உண்ணத் தர வேண்டாம். விவகாரங்களில் தீர்வு பெறுவதில் தாமதம் ஏற்படலாம். இல்லறத்துணை கூடுதல் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வார். தொழிலில் வருகிற இடையூறை தாமதமின்றி சரி செய்யவும். பணியாளர்கள், பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும். பெண்கள், நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். மாணவர்கள், பெற்றோர் சொல்படி நடந்து, நன்மை பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம்: 18.2.15 இரவு 8:52 மணிமுதல், 20.2.15 இரவு 10:34 மணி வரை.

பரிகாரம்: ராமபிரானை வழிபடுவதால், மனதில் ஒருமுகத்தன்மை ஏற்படும்.

தன் தகுதி, திறமை உணர்ந்து பணிபுரியும், மிதுன ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு குரு, சனி, புதன் நற்பலன் தரும் இடங்களில் உள்ளனர். நிதானித்து பேசி பல நலமும் பெறுவீர்கள். எதிர்ப்பாளர் விலகிச் செல்கிற புதிய சூழல் உருவாகும். புத்திரரின் தேவை நிறைவேற தாமதம் ஆவதால், மனக்கிலேசம் கொள்வர். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவை உண்ண வேண்டாம். இல்லறத்துணையின் மனக்குழப்பம் தீர, உங்கள் அன்பு, பரிவு நிறைந்த செயல் உதவும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் தேவைப்படும். பணியாளர்கள், குளறுபடி வராமல் செயல்பட வேண்டும். பெண்கள், பணச்செலவில் சிக்கனம் பின்பற்றுவீர்கள். மாணவர்கள், பாதுகாப்பு விஷயங்களில் உரிய கவனம் வேண்டும்.

சந்திராஷ்டமம்: 16.2.15 மாலை 5:38 மணி முதல், 18.2.15 இரவு 8:51 மணி வரை.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

புன்னகை முகபாவத்துடன் பணி மேற்கொள்ளும், சிம்ம ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, ஆறாம் இடத்தில் சூரியன், புதன், எட்டாம் இடத்தில் உச்ச பலத்துடன் சுக்கிரன் அனுகூலமாக உள்ளனர். செயல்களில் நிதானமும், திட்டமிடுதலும் பின்பற்றி முழு அளவில் நற்பலன் பெறுவீர்கள். வீண் பேச்சு பேசுபவரிடம் விலகுவது நல்லது. தம்பி, தங்கையின் வாழ்வு வளம் பெற உதவுவீர்கள். அறிமுகம் இல்லாதவருக்கு வீடு, வாகனத்தில் இடம் தர வேண்டாம்.
புத்திரரின் தேவையை நிறைவேற்ற, கூடுதல் பணம் செலவாகும். எதிர்ப்பாளரால் வருகிற தொந்தரவு பலமிழக்கும். இல்லறத்துணை, ஒற்றுமையுடன் உங்களுக்கு உதவுவார். தொழில், வியாபாரம் அதிர்ஷ்டவசமாக முன்னேற்றப்பாதையில் நடைபோடும். பணியாளர்கள், சிறப்பாக பணிபுரிவீர்கள். பெண்கள், குடும்ப உறுப்பினர்களின் கூடுதல் அன்பை பெறும் விதத்தில் செயல்படுவீர்கள். மாணவர்கள், படிப்பில் முன்னேற அனுகூல வழிகளை ஆராய்வீர்கள்.

சந்திராஷ்டமம்: 20.2.15 இரவு 10:35 மணி முதல், 21.2.15 அன்று நாள் முழுவதும்.

பரிகாரம்: சிவனை வழிபடுவதால், பணிகளில் செயல்திறன் அதிகரிக்கும்.

உலக நடப்புகளை அறிவதில் ஆர்வமுள்ள, கன்னி ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, இந்த வாரம் குரு, சனி, சந்திரன் நற்பலன் தருவர். உடல்நலத்தில் உரிய கவனம் கொள்வதால், பணிகளை சிறப்பாக நிறைவேற்றலாம். கடந்தகால நற்செயலுக்கு புகழும், நன்மையும் தேடி வரும். வெளியூர் பயணம், புதியவர்களின் அறிமுகத்தை பெற்றுத்தரும். புத்திரர், உத்வேகமுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பர். எதிரியால் இருந்த தொல்லை விலகும். இல்லறத்துணையின் நம்பிக்கைக்கு குறை வராமல் நடந்து கொள்ளவும். தொழிலில் போட்டி அதிகரிக்கலாம். பணியாளர்கள், கெடுபிடி குணம் உள்ளவரிடம் பணக்கடன் பெற வேண்டாம். பெண்கள், உறவினர் குடும்ப பிரச்னையில் கருத்து சொல்ல வேண்டாம். மாணவர்கள், ஆசிரியரின் வழிகாட்டுதலை விருப்பமுடன் பின்பற்றுவீர்கள்.

பரிகாரம்:
மாரியம்மனை வழிபடுவதால், தொழிலில் வளர்ச்சி ஏற்படும்.

சோதனையான நேரத்திலும், மன உறுதி தளராத, துலாம் ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு புதன், செவ்வாய், கேது இந்த வாரம் நற்பலன் தருவர். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி நிலைத்திருக்கும். பொது விவகாரங்களில் கருத்து சொல்வதை தவிர்த்திடுவீர்கள். முக்கிய செலவுக்கு தேவையான பணம் கிடைக்கும். தாய்வழி உறவினர் சில உதவியை மனமுவந்து வழங்குவர். புத்திரர் அறிவு, செயல்திறனில் முன்னேற்றம் பெற புதிய நுட்பம் பின்பற்றுவர். உடல் நலம் ஆரோக்கியம் பெறும். நித்திரையில் தெய்வீகம் சார்ந்த கனவு வரும்.
இல்லறத்துணையிடம் தேவையற்ற விவாதம் பேச வேண்டாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். பணியாளர், கூடுதல் வேலை வாய்ப்பை தவறாமல் ஏற்கவும். பெண்கள், தெய்வ வழிபாட்டில் ஆர்வம் கொள்வீர்கள். மாணவர்களுக்கு, புதியவர்களின் அறிமுகத்தால் நன்மை ஏற்படும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால், தடை விலகி செயல் நிறைவேறும்.

அத்தியாவசிய தேவையை மட்டும் நிறைவேற்றுகிற விருச்சிக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு மூன்றில் சூரியன், ஐந்தில் சுக்கிரன், ஒன்பதில் குரு, பதினொன்றில் ராகு ‘கிரக மாரி யோகம்’ தரும் வகையில் உள்ளனர். வாழ்வில் பல காலம் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். சமூகத்தில் கூடுதல் மதிப்பு, மரியாதை பெறுவீர்கள். பூர்வ சொத்தில் வளர்ச்சியும், வருமானமும் கூடும். புத்திரர், புதிய லட்சியங்களை மனதில் வளர்த்து செயல்படுவர். சத்து நிறைந்த உணவு உண்பதால், உடல் நலம் ஆரோக்கியம் பெறும். இல்லறத்துணை வழிசார்ந்த உறவினர் உதவுவர். தொழிலில் திட்டமிட்ட வளர்ச்சியை அடைவீர்கள். பணியாளர், தன் கடமை உணர்ந்து பணிபுரிவீர்கள். பெண்கள் புத்தாடை, அணிகலன் வாங்க நல்யோகம் உண்டு. மாணவர்கள், கூடுதல் பயிற்சியினால் சிறந்த தேர்ச்சி பெறுவர்.

பரிகாரம்:
மகாலட்சுமியை வழிபடுவதால், செல்வ வளம் அதிகரிக்கும்.

துன்பங்களை மனத் துணிவினால் மாற்றும், தனுசு ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு இந்த வாரம் சுக்கிரன், சந்திரன் மட்டுமே நற்பலன் தருவர். பிறர் தரும் வாக்குறுதிகளை நம்பி செயல்களில் ஈடுபட வேண்டாம். பணத்தேவை அதிகரிக்கும்.
நயவஞ்சகத்துடன் புகழ்ந்து பேசுபவரிடம் விலகுவது நல்லது. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரரை கண்டிப்பதில் நிதானம் வேண்டும். உணவுப்பொருள் தரம் அறிந்து உண்பதால், உடல்நல ஆரோக்கியம் மேம்படும். இல்லறத்துணையின் செயல்குறையை விமர்சிக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். பணியாளர்கள் செலவுகளில் சிக்கனம் பின்பற்றவதால், சேமிப்பின் அளவை பாதுகாக்கலாம். பெண்கள், சமையலறை பணிகளில் கவனமுடன் ஈடுபடவும். மாணவர்கள், படிப்பு தவிர, பிற விவாதம் பேச வேண்டாம்.

பரிகாரம்: அர்த்த நாரீஸ்வரரை வழிபடுவதால், குடும்ப ஒற்றுமை சிறக்கும்.

நல்மனதுடன் பிறருக்கு இயன்ற அளவில் உதவும்,மகர ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு சூரியன், புதன், ராகு தவிர, மற்ற கிரகங்கள் அளப்பரிய நற்பலன் தருவர். மனதில் ஞானசிந்தனை வளரும். சுய கவுரவம் பாதுகாக்க சில பணிபுரிவீர்கள். முயற்சி சிறந்து எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். சிலர், புதிய வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. நண்பருக்கு இணையாக ஆலோசனை சொல்வீர்கள். உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். இல்லறத்துணை வெகுநாள் கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து வளரும். பணியாளர்களுக்கு திருப்திகர அளவில் சலுகை கிடைக்கும். பெண்கள், உறவினர் குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உதவுவீர்கள். மாணவர்கள், நன்றாக படித்து பரிசு பெறுவீர்கள்.

பரிகாரம்: விஷ்ணுவை வழிபடுவதால், மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.

உழைப்பு உயர்வு தரும் என்ற நம்பிக்கை மிகுந்த, கும்ப ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு சுக்கிரன், சந்திரன் மட்டுமே நற்பலன் தருவர். திட்டமிட்ட முயற்சி சில காரணங்களால் நிறைவேற தாமதமாகலாம். சிலர் மீது உருவாகிற அதிருப்தியை வெளிப்படுத்த வேண்டாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். தாயின் கருத்தை ஏற்பதால், சில நன்மை பெற வழி பிறக்கும். காலமுறை உணவுப்பழக்கம், சீரான ஓய்வு உடல்நலத்தை பாதுகாக்கும்.
இல்லறத்துணை, உங்கள் நலனில் மிகுந்த அக்கறை கொள்வார். கூடுதல் உழைப்பினால் தொழிலில் உற்பத்தி, விற்பனை சீராகும். பணியாளர், நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும். பெண்கள், நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். மாணவர்கள், நண்பரின் உதவியால், படிப்பில் சிறந்த தேர்ச்சி பெறுவீர்கள்.

பரிகாரம்:
விநாயகப் பெருமானை வழிபடுவதால், துன்பம் விலகி நன்மை ஏற்படும்.

லட்சிய மனதுடன் செயல்பட்டு உரிய நன்மை பெறும், மீன ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு சுக்கிரன், குரு, சூரியன், புதனின் அமர்வு சிறப்பான இடங்களில் உள்ளது. மனம், செயலில் புத்துணர்வு ஏற்படும். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். குடும்பத் தேவைகளை தாராள பணச்செலவில் நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் வருகையால், வீட்டில் மகிழ்ச்சி கூடும். பூர்வ சொத்தில் அபிவிருத்தி உண்டு. பகைவரின் தொந்தரவு அணுகாத சுமுக வாழ்க்கை உருவாகும். இல்லறத்துணை, கடந்த கால இனிய நிகழ்வுகளை பகிர்ந்து கொள்வார். தொழில், வியாபாரம் புதிய வளர்ச்சி இலக்கை அடையும். பெண்கள் குடும்ப உறுப்பினர்கள் நலனில் அதிக அக்கறை கொள்வர். மாணவர்கள், ஞாபகத்திறன் வளர்த்து படிப்பில் முன்னேற்றம் அடைவர்.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபடுவதால் பொன், பொருள் சேரும்.

Leave a Reply