shadow

4aa

நேர்மை நிறைந்த செயலால், அதிக நன்மை பெறும், மேஷ ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் உள்ள செவ்வாய், பன்னிரெண்டாம் இடத்தில் உச்சம் பெற்றுள்ள சுக்கிரன், அளப்பரிய வகையில் நற்பலன் வழங்குகின்றனர். நடைமுறை வாழ்வு எதிர்பார்ப்புகள் இல்லாமல், சுமுகமாக அமையும். குடும்பத்தில் மங்கலநிகழ்வு மகிழ்ச்சியை அதிகரிக்கும். உங்களை அவமானப்படுத்த முயற்சிப்பவர், வெட்கி தலைகுனிய சூழ்நிலை உருவாகும். வாகன பயன்பாடு திருப்திகரமாகும். புத்திரர் ஊர் சுற்றுவதில் ஆர்வம் கொள்வர். விருந்து விழாவில் இல்லறத்துணையுடன் கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி பெற, புதிய அணுகுமுறை உதவும். பணியாளர்கள், பணியிடத்தில் நண்பரின் உதவியால் நன்மை பெறுவர். பெண்கள் தாராள பணவசதி அமைந்து, குடும்ப வாழ்வை சிறப்பாக்குவர். நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் கருத்து பரிமாற்றம், மேம்பட புதியவரின் உதவி கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: 14.5.14 இரவு 1:19மணி முதல் 16.5.14 அதிகாலை 4:52 மணி வரை

 

நம்பிக்கையுடன் உழைத்து, குடும்ப தேவையை பூர்த்தி செய்யும், ரிஷப ராசிக்காரர்களே!

இந்த வாரம் உங்கள் ராசிக்கு குரு, சனி, ராகு, சுக்கிரனின் அமர்வு வியத்தகு நற்பலன் வழங்கும் வகையில் உள்ளது. உங்களிடம் பழகுபவர்களில் சிலரது மனதில் உங்கள் ஞானமும், மேதைத்தனமும் நிறைந்த அறிவுரை நல்மாற்றத்தை உருவாக்கும். குடும்பச் செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரரின் எதிர்கால வாழ்வு சிறந்து விளங்க, தேவையான பணி மேற்கொள்வீர்கள். சத்து நிறைந்த உணவுகளை விரும்பி சாப்பிட்டு, உடல் நல ஆரோக்கியம் பாதுகாத்திடுவீர்கள். இல்லறத்துணையின் கருத்துகளை, இன்முகத்துடன் ஏற்பீர்கள். அன்பு, ஒற்றுமை வளரும். தொழிலில் அபிவிருத்தி பணிபுரிய, தாராள பணவசதி துணை நிற்கும். பணியாளர் சிறப்பாக செயல்பட்டு நன்மதிப்பு, கூடுதல் பணவரவு பெறுவர். பெண்கள் குடும்ப செலவில், சிக்கனம் பின்பற்றி சேமிப்பு அதிகரிப்பர். மாணவர்கள் அதிக பயன்தராத பொருள், விலைக்கு வாங்குகின்ற ஆர்வம் தவிர்க்கவும்.

சந்திராஷ்டமம்: 16.5.14 அதிகாலை 4:53 மணி முதல் 17.5.14 அன்று நாள் முழுவதும்.

 

சமூக நடப்புகளை அறிந்து, அதற்கேற்ப செயல்படும், மிதுன ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு ஆதாய ஸ்தானத்தில் உள்ள சூரியன், கேது நற்பலன் வழங்குகின்றனர். சுய கவுரவம் அதிகரிக்க, தேவையான நல்ல செயல்களை மேற்கொள்வீர்கள். எதிர்ப்பாளரின் கெடுதல் முயற்சியை சமாளித்து, சில நன்மை பெறுவீர்கள். வீடு, வாகன பாதுகாப்பில் தகுந்த கவனம் வேண்டும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவதில், பணச்செலவு அதிகரிக்கும். மனஅமைதியும், சீரான ஓய்வும் உடல்நலம் காக்க உதவும். இல்லறத்துணை உங்களின் சில கருத்துகளில், சமரசம் ஏற்க தயங்குவார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற, தேவையான அரசு உதவி முயற்சியினால் பெறலாம். பணியாளர் எதிர்பார்த்த சலுகை, ஓரளவு கிடைக்கும். பெண்கள், கணவரின் மனப்பாங்கு அறிந்து, குடும்ப நலன் குறித்து பேசுவது நல்லது. மாணவர்கள், சாகச விளையாட்டில் ஈடுபடக்கூடாது.

நட்பின் புனிதம் போற்றி, வாழ்ந்திடும், கடக ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு செவ்வாய், சுக்கிரன், சூரியன், புதனின் அனுகூல அமர்வு நல்ல பலன்களை, முழு அளவில் வழங்கும். சாதனை நிகழ்த்தும் எண்ணத்துடன் பணிபுரிவீர்கள். அனுகூல வாய்ப்பு பல வகையிலும் உருவாகும். பணவரவும், புகழும் திருப்திகர அளவில் கிடைக்கும். சிலர், வீடு, வாகனம் வாங்க நல்யோகம் உண்டு. புத்திரர் அறிவு, செயல் திறன் வளர்ந்து படிப்பில் முன்னேற்றம் காண்பர். எதிரி சமரச திட்டத்துடன் அணுகுவார். இல்லறத்துணை குடும்ப உறுப்பனர்களின் நலன் சிறக்க, தேவையான பணி மேற்கொள்வார். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரித்து பணவரவு கூடும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து நன்மதிப்பு, வெகுமதி பெறுவர். பெண்கள், கணவரின் நல்ல குணம் மனமுவந்து பாராட்டுவர். மாணவர்கள், படிப்பில் சிறந்து கலைகள் கற்பதிலும் ஆர்வம் கொள்வர்.

வெற்றி இலக்கை அடைய, ஆர்வமுடன் பணிபுரியும், சிம்ம ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு செவ்வாய், கேது தவிர மற்ற கிரகங்கள் அனுகூல இட அமர்வில் உள்ளனர். வார பிற்பகுதி நாட்களில் சூரியன் நன்மை பலவும் தருவார். பேசுவதில் நிதானம் பின்பற்றி, நண்பர்களிடம் கூடுதல் அன்பை பெறுவீர்கள். புதிய செயல் திட்டம், முழு வடிவம் பெறும். வீடு, வாகன பாதுகாப்பில் தகுந்த கவனம் வேண்டும். புத்திரரின் அறிவுப்பூர்வ செயல் கண்டு மகிழ்வீர்கள். வழக்கு, விவகாரத்தில் புதிய திருப்பம் உருவாகும். இல்லறத்துணை கருத்து, ஒற்றுமையுடன் உங்களுக்கு உதவுவார். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சியும், புதிய தொடர்புகளும் வந்து சேரும். பணியாளர்கள், தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி, பணியை எளிதாக நிறைவேற்றுவர். பெண்கள், தாய்வழி உறவினர்களின் கூடுதல் அன்பில் மனம் மகிழ்வர். மாணவர்கள், பாதுகாப்பு குறைந்த இடங்களில் செல்லக் கூடாது.

சாந்த குணத்துடன் செயல்பட்டு, நற்பெயர் பெறும் கன்னி ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு நவக் கிரகங்களில் சந்திரன் மட்டுமே, அனுகூல பலன் தருகிறார். இதனால், மனம் போன போக்கில் செயல்படாமல், உங்கள் நலம் விரும்புபவரின் ஆலோசனைப்படி நடப்பது, பாதுகாப்பான வாழ்க்கையை பெற்றுத் தரும். அளவற்ற பேச்சு, சிரமம் தருவதாக மாறலாம். கவனம் தேவை. நம்பகத் தன்மை இல்லாதவருக்கு வீடு, வாகனத்தில் இடம் தர வேண்டாம். புத்திரரின் நலம் பேண, கூடுதல் பணம் தேவைப்படும். மிதமான உழைப்பு, சீரான ஓய்வு, உடல் ஆரோக்கியம் பாதுகாக்க உதவும். இல்லறத்துணை யின் மனக்குறை சரி செய்வதில், தகுந்த அக்கறை வேண்டும். தொழில், வியாபாரத்தில் உருவாகிற போட்டியை மன திடத்துடன் எதிர்கொள்வதால், உரிய பலன் கிடைக்கும். பணியாளர், நிர்வாகத்தின் சட்ட திட்டம் தவறாமல் பின்பற்ற வேண்டும். பெண்கள், கணவரிடம் உறவினர் குடும்ப விவகாரம் பேச வேண்டாம். மாணவர்கள், பெற்றோரின் கண்காணிப்பில் செயல்படுவது நல்லது.

தெய்வ நம்பிக்கையுடன், பணிகளில் ஈடுபடும், துலாம் ராசிக்காரர்களே!

இந்த வாரம் உங்கள் ராசிக்கு புதன், குரு, சந்திரன் நற்பலன் வழங்குகின்றனர். வெகுநாள் பின்பற்றிய நல்ல லட்சியத்திற்கு உரிய பலன் கிடைக்கும். உங்களை புறக்கணித்து பேசியவர், தன் தவறு உணர்ந்து நல்அன்பு பாராட்டுவார். புதிய திட்டம் செயல்படுத்த, உரிய காலத்திற்காக காத்திருப்பீர்கள். வாகன பயன்பாடு, சராசரி அளவில் இருக்கும். புத்திரரின் நற்செயல் மனதை மகிழ்விக்கும். எதிர்ப்பாளரால் வருகிற தொந்தரவு பலமிழக்கும். இல்லறத்துணையின் மனம் அறிந்து உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உருவான அனுகூலம் பாதுகாப்புடன் இருக்கும். பணியாளர்கள், கூடுதல் வேலை வாய்ப்பை விருப்பமுடன் நிறைவேற்றுவர். பெண்கள், சமையலறை பணிகளில், பாதுகாப்பு சரி பார்த்து செயல்பட வேண்டும். மாணவர்கள், நண்பரின் மாறுபட்ட கருத்துகளை விமர்சனம் செய்ய வேண்டாம்.

நற்கருணை மனதுடன், பிறருக்கு உதவும் விருச்சிக, ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு சுக்கிரன், சூரியன், கேது, செவ்வாய் கிரகங்களின் நல்லருள், பலமாக உள்ளது. தெய்வ நம்பிக்கையுடன், புதிய பணிகளை துவங்குவீர்கள். அதிக அளவில் நன்மை கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் உதவி உண்டு. வெளியூர் பயணம் மேற்கொள்வதில், ஆர்வம் அதிகரிக்கும். சிறப்பான வாழ்வு தந்த இஷ்ட தெய்வத்திற்கு, மனப்பூர்வ வழிபாடு நடத்துவீர்கள். உடல்நல ஆரோக்கியம் சீராக இருக்கும். தாராள பணவரவில், பணக்கடன் செலுத்துவீர்கள். இல்லறத்துணை உங்களின் நல்ல குணம் பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணிபுரிவீர்கள். பணியாளர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு, குறித்த காலத்தில் பணி இலக்கு நிறைவேற்றுவர். குடும்ப பெண்கள், பிள்ளைகளின் நலன் சிறக்க, தகுந்த ஆலோசனை சொல்வர். மாணவர்கள், புதிய நண்பர்களின் அறிமுகத்தினால் மகிழ்ச்சி அடைவர்.

நல் ஒழுக்கம் நிறைந்த வாழ்வை பெரிதும் விரும்பும், தனுசு ராசிக்காரர்களே!

இந்தவாரம், உங்கள் ராசிக்கு சுக்கிரன், புதன், குரு, சனி, ராகுவின் அமர்வு அனுகூலபலன் தரும் வகையில் உள்ளது. உறவினர்களின் கூடுதல் அன்பு, பாசம் மனதில் நெகிழ்ச்சி தரும். செயல்கள் குறித்த காலத்தில் நிறைவேறும். உடன்பிறந்தவர் வகையில், மங்கலநிகழ்ச்சி நடத்த சூழ்நிலை கனிந்து வரும். வீடு, வாகனத்தில் கூடுதல் பயன்பாட்டு வசதிபெற, அபிவிருத்தி பணிபுரிவீர்கள். வழக்கு விவகாரத்தில் அனுகூலத்தீர்வு கிடைக்கும். இல்லறத்துணையின் நல்வழிக்காட்டுதலை, பெருமையுடன் ஏற்பீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும், பணவரவும் அதிகரிக்கும். பணியாளர்கள், எதிர்பார்த்த சலுகை எளிய முயற்சியால் கிடைக்கும். பெண்கள், வீட்டிற்கு வரும் உறவினர்களை, மனஉவகையுடன் உபசரிப்பர். மாணவர்கள், பெற்றோரின் எண்ணங்களுக்கு ஏற்ப நடந்து நற்பெயர் பெறுவர்.

இயன்ற அளவு அறப்பணி செய்து, மனத்திருப்தி அடையும், மகர ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன், தினகதி சுழற்சி கிரகம் சந்திரன் மட்டுமே நற்பலன் தருகின்றனர். அறிமுகம் இல்லாதவருக்கு உதவுவதால், சில சிரமம் ஏற்படலாம். கவனம் தேவை. வாழ்வில் புதிய கவுரவம் பெறுகிற நோக்கத்துடன் பணிபுரிவீர்கள். இஷ்ட தெய்வ அருள் பலம் துணை நிற்கும். உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவு தவிர்ப்பதால், ஆரோக்கியம் சீராக இருக்கும். புத்திரரின் விளையாட்டுக் குணம் நிறைந்த செயல், மனதில் வருத்தம் தரும். சொத்து ஆவணம் அக்கறையுடன் பாதுகாக்க வேண்டும். இல்லறத்துணையின் கருணை மனம், உங்கள் நலனில் அக்கறை மிகுந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் அளவான உற்பத்தி, விற்பனை, பணவரவு உண்டு. பணியாளர்கள், கூடுதல் வேலைவாய்ப்பை பயன்படுத்துவதால், பணப்பற்றாக்குறை தீரும். பெண்கள், குடும்ப உறவினர்களின் வீட்டில் மங்கல நிகழ்ச்சி நடத்த உதவிகரமாக செயல்படுவர். மாணவர்கள், நண்பர்களிடம் விவாதங்களில் நிதானித்து பேசவும்

சமூக நலனில், மிகுந்த அக்கறையுள்ள, கும்ப ராசிக்காரர்களே!

இந்தவாரம், உங்கள் ராசிக்கு சனி, செவ்வாய், ராகு தவிர, மற்ற கிரகங்கள் அளப்பரிய வகையில் நற்பலன் தருகின்றனர். பேச்சில் சத்தியமும், வசீகரமும் இருக்கும். பழகுபவர்களிடம் கூடுதல் மதிப்பு, மரியாதை கிடைக்கும். பசு, பால் பாக்ய யோகம் அமைந்து உள்ளதால், குடும்பத்தின் அத்தியாவசியத் தேவை எளிதில் பூர்த்தியாகும். உறவினர் வருகையால், வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புத்திரர் கலகலப்பாக பேசி, கூடுதல் அன்பை பெறுவார். பிறரால் துன்பம் அணுகாத வாழ்வுமுறை அமையும். இல்லறத்துணை ஒற்றுமை மனதுடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் இடையூறு சரி செய்து வளர்ச்சிப் பாதையில் நடைபோடுவீர்கள். உத்தியோகஸ்தர் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு, வெகுமதி பெறுவர். பெண்கள், குடும்ப பணவசதி அதிகரித்து விரும்பிய பொருட்கள் வாங்குவர். மாணவர்கள், பெற்றோரின் சொல்படி நடந்து பெருமை சேர்ப்பர்.

சந்திராஷ்டமம்: 10.5.14 நள்ளிரவு 12:01 மணி முதல், 12.5.14 இரவு 7:30 மணி வரை.

இன்ப, துன்ப நிகழ்வு களை பக்குவமனதுடன் ஏற்கும் மீன ராசிக்காரர்களே!

இந்தவாரம், உங்கள் ராசியில் உள்ள சுக்கிரன் மற்றும் தினகதி சுழற்சி கிரகம் சந்திரன் மட்டுமே நற்பலன் தருகின்றனர். குடும்பத்தில் சுபச்செலவு அதிகரிக்கும். உங்கள் செயலை குறை சொல்லும் குணம் உள்ளவரிடம் விலகுவது நல்லது. அதிக விலையுள்ள பொருட்களை பயன்படுத்துவது, பாதுகாப்பதில் கூடுதல் கவனம் வேண்டும். இளைய சகோதர வகையில் உதவி உண்டு. வெளியூர் பயணம் முக்கியத்துவம் கருதி மேற்கொள்ளலாம். புத்திரர் தன் தேவை நிறைவேறுவதால், மகிழ்ச்சிகர மனதுடன் செயல்படுவர். அரசியல்வாதிகள், சமரச பேச்சு வார்த்தை, உரியகாலம் வந்தபின் துவங்கலாம். இல்லறத்துணை குடும்ப நலனில், கூடுதல் அக்கறை கொள்வார். தொழிலில் அளவான உற்பத்தி, விற்பனை, பணவரவு இருக்கும். பணியாளர்கள், காலத்தை பொன்போல கருதி செயல்பட வேண்டும். பெண்கள், பணச்செலவில் சிக்கனம் மேற்கொள்வர். மாணவர்கள், நல்லோரின் அறிவுரையை ஒருமுக மனதுடன் ஏற்றுக்கொள்வர்.

சந்திராஷ்டமம்: 12.5.14 இரவு 7:04 மணி முதல் 14.5.14 நள்ளிரவு 1:18 மணி வரை

Leave a Reply