shadow

weekly rasipalanமேஷம்
ஆக்கப்பூர்வமாக யோசித்தை அதிரடியாக செயல்படுத்துவதில் வல்லவர்கள் நீங்கள். குரு 5-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்கள் கை ஓங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வாகனம் வாங்குவீர்கள். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். புது வேலைக் கிடைக்கும். வெளியூர் சென்று வருவீர்கள். பள்ளி, கல்லூரி கால தோழிகள் தேடி வருவார்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த உறவினரை சந்தித்து மகிழ்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். சூரியன் ராசிக்குள் நிற்பதுடன், 8-ல் சனி தொடர்வதால் தலைச்சுற்றல், முதுகு வலி, காரியத் தாமதம், முன்கோபம் வந்துச் செல்லும். பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். யாரையும் நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது. அரசாங்க விஷயங்கள் தாமதமாக முடியும். அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் தலையிடாமலிருப்பது நல்லது. கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் காலநேரமில்லாமல் உழைக்க வேண்டி வரும். பழைய பிரச்னைகளிலிருந்து விடுபடும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 28, 30, 1 அதிஷ்ட எண்கள்: 1, 6 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், கிரே அதிஷ்ட திசை: கிழக்கு

ரிஷபம்
என்கடன் பணிசெய்து கிடப்பதே என்று விருப்பு வெறுப்பில்லாமல் வேலை பார்ப்பவர்களே! சப்தமாதிபதி செவ்வாய் 7-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் எல்லாப் பிரச்னைகளிலிருந்தும் நூலிழையில் நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள். வீடு மாறுவது, விற்பது சாதகமாக அமையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். சமையலறையை நவீனமயமாக்குவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். 4-ல் ராகுவும், குருவும் நிற்பதால் அவ்வப்போது மனஇறுக்கம், சின்ன சின்ன ஆரோக்ய குறைவு, வீண் பழிகளெல்லாம் வந்துப் போகும். சூரியன் 12-ல் மறைந்திருப்பதால் திடீர் பயணங்கள், செலவுகள், வேலைச்சுமை அதிகரிக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். கண்டகச் சனி தொடர்வதால் மனைவிக்கு டென்ஷன், அசதி, சோர்வு, உங்களுக்கும் வயிற்று உப்புசம், புளியேப்பம் வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே! வீண் வறட்டுக் கவுரவத்திற்காக சேமிப்புகளை கரைக்காதீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனை வழங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளப் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். வளைந்து நிமிரும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 26, 27, 1 அதிஷ்ட எண்கள்: 2, 4 அதிஷ்ட நிறங்கள்: இளம்சிவப்பு, மஞ்சள் அதிஷ்ட திசை: வடக்கு

மிதுனம்
ஆர்பாட்டமில்லாமல் அமைதியாக சாதித்துக் காட்டுபவர்களே! சூரியன் வலுவாக அமர்ந்திருப்பதால் கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பாதியில் முடங்கிக் கிடந்த வீடு கட்டும் பணியை தொடருவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனை விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். திருமணப் பேச்சு வார்த்தைக் கைக்கூடும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும. வழக்கு சாதகமாகும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வெளிவட்டாரம் சிறப்பாக இருக்கும். கேதுவும், குருவும் சாதகமாக இல்லாததால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள், தந்தையாருக்கு மூட்டு வலி, கால் வலி வரக்கூடும். கன்னிப்பெண்களே! உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். அரசியல்வாதிகளே! வீண் பேச்சை தவிர்த்து தொகுதி நலனில் அக்கறை காட்டுங்கள். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவன புகழ் கூடும். உத்யோகத்தில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதரிக்கப்படும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 26, 28, 29 அதிஷ்ட எண்கள்: 6, 9 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், சில்வர்கிரே அதிஷ்ட திசை: தென்மேற்கு

கடகம்
எடுத்த காரியத்தை எப்படியாவது முடித்துக்காட்டும் அபார சக்திக் கொண்டவர்களே! புதனும், சூரியனும் வலுவாக 10-ல் நிற்பதால் சவாலில் வெற்றி பெறுவீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். எதிர்பார்த்த பணத்தில் ஒரு பகுதி கிடைக்கும். புது பொறுப்பும், வேலையும் தேடி வரும். வீடு கட்ட அனுப்பியிருந்த கட்டிட வரைபடத்திற்கு அரசு அனுமதி கிட்டும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டு. விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். நட்பு வட்டம் விரியும். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் கண் பார்வையைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். வழக்கை நிதானமாக கையாளுங்கள். அரசியல்வாதிகளே! எதிர்கட்சிக்காரகள் உதவுவார்கள். கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் நெருக்கடிகள் இருந்தாலும் சக ஊழியர்களால் உதவிகள் உண்டு. உழைப்பால் உயரும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 27, 29, 30 அதிஷ்ட எண்கள்: 1, 5 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், மஞ்சள் அதிஷ்ட திசை: வடகிழக்கு

கடகம்
எடுத்த காரியத்தை எப்படியாவது முடித்துக்காட்டும் அபார சக்திக் கொண்டவர்களே! புதனும், சூரியனும் வலுவாக 10-ல் நிற்பதால் சவாலில் வெற்றி பெறுவீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். எதிர்பார்த்த பணத்தில் ஒரு பகுதி கிடைக்கும். புது பொறுப்பும், வேலையும் தேடி வரும். வீடு கட்ட அனுப்பியிருந்த கட்டிட வரைபடத்திற்கு அரசு அனுமதி கிட்டும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டு. விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். நட்பு வட்டம் விரியும். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் கண் பார்வையைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். வழக்கை நிதானமாக கையாளுங்கள். அரசியல்வாதிகளே! எதிர்கட்சிக்காரகள் உதவுவார்கள். கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் நெருக்கடிகள் இருந்தாலும் சக ஊழியர்களால் உதவிகள் உண்டு. உழைப்பால் உயரும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 27, 29, 30 அதிஷ்ட எண்கள்: 1, 5 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், மஞ்சள் அதிஷ்ட திசை: வடகிழக்கு

கன்னி
பழமையையும், பாரம்பரியத்தையும் கட்டிக் காப்பதில் வல்லவர்களே! சனியும், செவ்வாயும் வலுவாக 3-ம் இடத்தில் நிற்பதால் உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பிள்ளைகள் முன்னேற வேண்டுமென துடிப்பார்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதித் தொகை தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். வேற்றுமதத்தவர், மாற்று மொழியினரால் திடீர் திருப்பம் உண்டாகும். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். சமையலறையை நவீனமாக்குவீர்கள். 12-ல் ராகுவும், குருவும் தொடர்ந்துக் கொண்டிருப்பதால் வயிற்று வலி, தூக்கமின்மை, பயணங்களால் அலைச்சல், செலவுகள், கடன் பிரச்னையால் நிம்மதியின்மை வந்துப் போகும். அரசாங்க அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். அரசியல்வாதிகளே! ஆதாராமில்லாமல் எதிர்கட்சிக்காரர்களை விமர்சிக்க வேண்டாம். கன்னிப் பெண்களே! தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்துக் கொண்டு புது முதலீடுகள் செய்து வாடிக்கையாளர்களை கவருவீர்கள். உத்யோகத்தில் சின்ன சின்ன இடையூறுகள் வரும். தன்னம்பிக்கையால் சாதிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 28, 29, 30 அதிஷ்ட எண்கள்: 3, 8 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா அதிஷ்ட திசை: தென்கிழக்குதுலாம்
நீதிக்கு புறம்பான செயல்களை செய்ய தயங்குபவர்களே! லாப ஸ்தானத்தில் குருவும், ராகுவும் நிற்பதால் தொட்ட காரியம் துலங்கும். ஷேர் மூலம் பணம் வரும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். சிலர் ஊர் எல்லையில் வாங்கியிருந்த இடத்தை விற்று விட்டு நகரத்தில் இடம் வாங்குவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். அயல்நாட்டிலிருக்கும் தோழிகளால் ஆதாயமடைவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆனால் 26-ந் தேதி முதல் சுக்ரன் 7-ல் அமர்ந்த உங்கள் ராசியை பார்க்கயிருப்பதால் பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். பிள்ளைகளின் எண்ண ஓட்டத்தை அறிந்து அதற்கேற்ப வழி நடத்துவீர்கள். பாதச் சனி தொடர்வதால் வீண் சந்தேகம், டென்ஷன், எதிலும் பிடிப்பற்ற போக்கு வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே! சகாக்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம். கன்னிப்பெண்களே! எதிர்பார்த்தபடி நல்ல இடத்தில் வரன் அமையும். வியாபாரத்தில் ரகசியங்கள் எங்கே கசிகிறது என்று பார்த்து அதை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் செல்வாக்கு உயரும். திடீர் திருப்பங்கள் உண்டாகும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 26, 27, 1 அதிஷ்ட எண்கள்: 4, 9 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம்வெள்ளை, ரோஸ் அதிஷ்ட திசை: தெற்கு

விருச்சிகம்
துயரங்களை கண்டு ஒருபோதும் துவளாமல் சீறி எழுவதில் வல்லவர்கள் நீங்கள். சூரியன் 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். வங்கிக் கடன் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். அரசால் அனுகூலம் உண்டு. புதன் 6-ல் மறைந்திருப்பதுடன், சுக்ரனும் 26-ந் தேதி முதல் 6-ல் நுழைவதால் தொண்டை புகைச்சல், சளித் தொந்தரவு, கழுத்து வலி வந்துப் போகும். வாகன விபத்துகள் நிகழக்கூடும். ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷன் போன்ற சாதனங்கள் பழுதாகும். உறவினர், தோழிகளுடன் நெருடல்கள் வந்து நீங்கும். குருவும், ராகுவும் 10-ல் நீடிப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகமாகும். யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சின்ன சின்ன அவமானம் ஏற்படக்கூடும். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். அரசியல்வாதிகளே! தலைமையிடம் சிலர் உங்களைப் பற்றி புகார் பட்டியல் வாசிப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். சிக்கனம் தேவைப்படும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 26, 28, 29 அதிஷ்ட எண்கள்: 2, 7 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர்நீலம் அதிஷ்ட திசை: வடமேற்கு

தனுசு
தனக்கென எடுத்து வைக்கத் தெரியாத நீங்கள் தராதரம் அறிந்து பழகுபவர்கள். ராசிநாதன் குரு வலுவாக இருப்பதால் நினைத்தது நிறைவேறும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வீடு, வாகன வசதிப் பெருகும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். புது சொத்து வாங்குவீர்கள். அவரின் தயக்கத்தைப் போக்குவீர்கள். உறவினர்கள், தோழிகளால் ஆதாயம் உண்டு. விருந்தினர் வருகை உண்டு. வெள்ளிச் சாமான்கள் வாங்குவீர்கள். வேற்றுமொழிப் பேசுபவர்கள் உதவுவார்கள். பழுதான வாகனத்தை சரி செய்வீர்கள். சூரியன் 5-ல் நிற்பதால் பிள்ளைகளால் செலவுகள் இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. ஏழரைச் சனி தொடர்வதால் யாருக்காகவும் சாட்சி கையப்பமிட வேண்டாம். அவசர முடிவுகளை தவிர்க்கப்பாருங்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். கன்னிப் பெண்களே! காதல் கைக்கூடும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் லாபம் உயரும். வேலையாட்கள் விசுவாசமாக நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். ஆளுமைத் திறன் அதிகரிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 27, 29, 1 அதிஷ்ட எண்கள்: 4, 7 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், ரோஸ் அதிஷ்ட திசை: தென்கிழக்கு

மகரம்
தன்மானம் அதிகமுள்ள நீங்கள், விமர்சனங்களை கண்டு அஞ்சமாட்டீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் சமயோஜிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். கணவர் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். தோழிகள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். ராகு, கேது மற்றும் குரு சாதகமாக இல்லாததால் அநாவசியச் செலவுகள் அதிகமாகும். தொண்டை வலி, சையனஸ் தொந்தரவு, தலைச்சுற்றல் வந்து நீங்கும். தங்க ஆபரணங்களை இரவல் தர வேண்டாம். வழக்கில் அவசரம் வேண்டாம். முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். அரசியல்வாதிகளே! உட்கட்சி பூசல் வெடிக்கும். கன்னிப் பெண்களே! கெட்ட நண்பர்களின் சகவாசங்களிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியின் ஆலோசனையின்றி புது முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். விட்டுக் கொடுத்துப் போவதால் வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 28, 30, 1 அதிஷ்ட எண்கள்: 2, 6 அதிஷ்ட நிறங்கள்: இளம்சிவப்பு, ஊதா அதிஷ்ட திசை: கிழக்கு

கும்பம்
இங்கிதமான பேச்சால் மற்றவர்களின் மனதில் எளிதில் இடம் பிடிப்பவர்களே! சூரியன் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். மனோபலம் அதிகரிக்கும். வீட்டை விரிவுப்படுத்திக் கட்ட முடிவெடுப்பீர்கள். நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். அரசியலில் செல்வாக்குக் கூடும். மகளுக்கு திருமணம் கூடும். மகனுக்கிருக்கும் மற்ற திறமைகளை கண்டறிந்து அதை வளர்ப்பீர்கள். சொத்து சிக்கல்கள் சுமுகமாக முடியும். நீண்ட காலமாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். அயல்நாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால் தோலில் நமைச்சல், அலர்ஜி, யூரினரி இன்பெக்ஷன், முடி உதிர்தல், காரியத் தாமதம், எதிர்காலம் பற்றிய அச்சம் வந்துப் போகும். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். விடாமுயற்சியால் இலக்கை எட்டும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 26, 30, 1 அதிஷ்ட எண்கள்: 4, 9 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தாபச்சை, வெள்ளை அதிஷ்ட திசை: வடக்கு
மீனம்
விழுவதெல்லாம் எழுவதற்கே என்பதை அறிந்த நீங்கள் இலக்கை எட்டும் வரை ஓயமாட்டீர்கள். சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பூர்வீக சொத்தை விற்று புது வீடு, மனை வாங்குவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். பிள்ளைகள் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவரால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். நட்பு வட்டம் விரிவடையும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். 6-ல் குரு மறைந்திருப்பதால் வேலைச்சுமை, எதிலும் ஈடுபாடற்ற நிலை வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டம் உங்களை நம்பி சில புது பொறுப்புகளை ஒப்படைக்கும். கன்னிப்பெண்களே! தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். காதல் கசந்து இனிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். பழைய வேலையாட்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் பக்கபலமாக இருந்தாலும் சக ஊழியர்களால் உதவிகள் உண்டு. தொலைநோக்குச் சிந்தனையால் சாதிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 27, 29, 1 அதிஷ்ட எண்கள்: 1, 7 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, கிரே அதிஷ்ட திசை: தென்கிழக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *