shadow

இணையதளம் மூலம் பணம் இருக்கும் ஏடிஎம்களை தெரிந்துகொள்ள ஒரு புதிய வசதி

ATM-Machineஇந்தியா முழுவதிலும் உள்ள பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்ற வங்கியின் முன்பும், வங்கியில் தங்களது கணக்கில் உள்ள பணத்தை எடுக்க ஏ.டி.எம் வாசலிலும் கால்கடுக்க வரிசையில் நிற்கின்றனர். இந்நிலையில் பொதுமக்களின் வசதிக்காக எந்த இடங்களில் ஏடிஎம் செயல்படுகிறது என்பதையும், எந்த ஏடிஎம்களில் எவ்வளவு கூட்டம் உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ள இணையதளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஏ.டி.எம் இருக்கும் இடங்கள் குறித்தும், அந்த ஏ.டி.எம்களில் கூட்டம் எந்த அளவுக்கு இருக்கின்றது என்பது குறித்தும் //atmkaro.in/ என்ற இணையதளத்தில் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

பல்வேறு நகரங்களில் செயல்பாட்டில் உள்ள ஏடிஎம் பெயர்கள் இதில் இடம் பெற்றுள்ளன. தற்போது இந்த இணையதளம் டுவிட்டரி, வாட்ஸ் அப், ஃபேச்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிது.

மேலும் தங்களுக்கு தெரிந்த தகவல்களை பொதுமக்களும் இந்த இணையதளத்தில் பதிவு செய்யலாம். இந்த சேவையில் பொதுமக்களும் பங்கு பெற்று, தங்கள் கண்பார்வையில் படும் செயல்பாட்டில் உள்ள ஏடிஎம் குறித்து தெரிவித்தால் மற்றவர்களக்கு உதவியாக இருக்கும்.

Leave a Reply