காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூற ஹேக்கராக மாறிய காதலன்

காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூற ஹேக்கராக மாறிய காதலன்

டெல்லியில் உள்ள ஒரு காதலர் தன்னுடைய காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவதற்காக டெல்லி பல்கலைகழக இணையதளத்தை முடக்கி ஹேக்கராக மாறிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள ஜமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைகழகத்தின் இணையதளமான jmi.ac.in என்ற இணையதளம் திடீரென நேற்று முடங்கியது. இதுகுறித்த விசாரணையில் சைபர் க்ரைம் அதிகாரிகள் இறங்கியபோது இந்த இணையதளத்தை முடக்கிய அந்த நபர் பூஜா என்ற பெண்ணுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காக முடக்கியதாகவும், அந்த பெண்ணை காதலிப்பதாக அந்த இணையதளத்தை முடக்கிய அந்த நபர் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து விசாரணை செய்து வரும் போலீசார், அந்த நபரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் இணையதளத்தை சரிசெய்யும் முயற்சியில் பல்கலைகழக நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.