ஜனாதிபதி தேர்தல்: அனைத்து கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு சோனியா காந்தி வேண்டுகோள்

ஜனாதிபதி தேர்தல்: அனைத்து கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு சோனியா காந்தி வேண்டுகோள்

இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி யார் என்பதை உறுதி செய்யும் தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. பாஜக ஆதரவு வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளர் மீராகுமார் ஆகியோர்களுக்கு இடையே பலத்த போட்டி உள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்த் இன்று வாக்களிக்கவுள்ள எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

‘இந்த ஜனாதிபதித் தேர்தல், சித்தாந்தங்களுக்கு எதிரான, நம்பிக்கைகளுக்கு எதிரான போட்டி. இந்தத் தேர்தலில், ஒவ்வொருவரும் அவர்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும். சுதந்திரப் போராட்டத் தியாகிகள், மகாத்மா கொடுத்த இந்தியாவை நாம் காப்பதற்கு இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமாக அமைந்துள்ளது. நம்மைப் பிரித்தாலும் மிகவும் குறுகிய எண்ணம்கொண்டவர்களிடம் இந்த நாட்டை ஒப்படைத்துவிடக்கூடாது. இப்போதுதான், முன்னெப்போதையும்விட மிகவும் கவனமாக இருக்கவேண்டிய கட்டம். நமக்கு எந்த மாதிரி எதிர்காலம் வேண்டும் என்பதை இந்தத் தேர்தல் நிர்ணயிக்கும் வகையில் இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.