shadow

இந்தியாவின் மிக நீளமான சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வரலாற்று சிறப்புமிக்க சுரங்கப்பாதை சாலையை இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்தியாவின் மிகப்பெரிய சுரங்கப்பாதையான இந்த சாலை 9.2 கி.மீ தூரம் கொண்டது.

ஜம்மு காஷ்மீரின் செனானி நகர் முதல் நஷ்ரி நகர வரை அமைக்கப்பட்ட இந்த சுரங்க சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்த பின்னர் பேசியதாவது:

”இந்த சுரங்கப் பாதை ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். இந்த சுரங்கப் பாதையை அமைக்கும் பணியில் ஈடுபட்ட 90 சதவீத தொழிலாளர்கள் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்கள் தான். இந்த சுரங்கப்பாதை சுற்றுச்சூழலுக்கு எந்த சீர்கேட்டையும் ஏற்படுத்தாது. எனவே புவி வெப்பமயமாவதற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு இந்த சுரங்கப் பாதை உதவியாக இருக்கும்.இந்த சுரங்கப் பாதை உலகத் தரம் வாய்ந்தது.

சிலர் கற்களை அடுத்தவர்கள் மீது எரியுமாறு காஷ்மீர் இளைஞர்கள் தவறாக வழிநடத்துகின்றனர். ஆனால் தற்போது காஷ்மீர் இளைஞர்கள் அதே கற்களைக் கொண்டு இந்த கட்டிடத்தை கட்டியுள்ளனர். சுற்றுலா வேண்டுமா? தீவிரவாதம் வேண்டுமா? என காஷ்மீர் இளைஞர்கள் முடிவு செய்ய வேண்டும்.

இதே போல 9 புதிய சுரங்கப் பாதைகளை அமைக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இந்த சாலைகள் நகரங்களை மட்டும் இணைப்பதற்கு இல்லை. இதயங்களையும் இணைக்கும்.” என மோடி பேசினார்.

Leave a Reply