shadow

தமிழகத்தை அடுத்து இந்தியை எதிர்க்கும் கர்நாடகா

தமிழகத்தில் இந்திக்கு எதிராக கடந்த ஐம்பது ஆண்டுகளாக போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் முதல்முறையாக மற்றொரு தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவும் இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமாரின் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்றுள்ள கர்நாடக முதல்வர், அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், ”பெங்களூரு மெட்ரோ, பெரும்பாலும் மாநில அரசின் நிதியிலேயே உருவானது, இது, மாநில அரசின் திட்டம். இங்கு இந்தியைத் திணிப்பது ஏற்றுகொள்ள இயலாது. இந்தி என்பது வடஇந்தியாவில் சில மாநிலங்களில் பேசும் மொழியே தவிர, நாடு முழுவதும் பேசும் மொழி கிடையாது. இந்தி பேசாத மாநிலங்களில் தொடர்ந்து இந்தியைத் திணிக்கும் மத்திய அரசுக்கு எதிராக கர்நாடகா போராடும்’, என்று கூறினார்.

Leave a Reply