கோடைக்காலத்தில் ஏற்படும் வேர்க்குரு, சரும பிரச்சனையை தீர்க்க வழிகள்

a1cb591c-6dda-4066-b867-1ce9f0a47b15_S_secvpf

பெரும்பாலும், உடல் அரிப்பு, சரும எரிச்சல், படர்தாமரை, படை, வேர்க்குரு போன்ற சரும தொல்லைகள் தான் கோடைக்காலங்களில் ஏற்படும். இவை எல்லாம் உங்களுக்கு ஏற்படாமல், காத்துக்கொள்ள சில வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம்.

• கோடைக்காலத்தில் சரும வறட்சி உள்ளவர்களுக்கு தான் அதிகம் அரிப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்க அவர்கள் கோடைக்காலங்களில் காலை மட்டும் இல்லாது மாலை வேலைகளிலும் நன்கு குளித்தாலே வியர்வை தொல்லை தவிர்த்து உடல் அரிப்பிலிருந்து விடுபடலாம்.

• அதிகப்படியான வெப்பத்தினாலும், உடலில் சூடு அதிகரித்தால் தோலில் சொறி ஏற்படலாம். இதற்கு நீங்கள் எடைக்குறைவான உடைகளை அணியவேண்டும். மேலும் மிகவும் இறுக்கமான உடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும். வியர்வை சருமத்திலேயே தங்குவதனால் தான் இவ்வாறான சொறி ஏற்படுகிறது.

• பெண்களுக்கு வெயில் காலத்தில் அவர்களது பிறப்புறுப்பில் ஈஸ்ட் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு ஒருவேளை கோடைக்காலத்தில் தான் முதல் முறையாக ஈஸ்ட் தொற்று ஏற்படுகின்றது என்றால் நீங்கள் மருத்துவரை அணுகுவது தான் சரியான முறை.

• கோடைக்காலத்தின் அனைவரும் சந்திக்கும் பெரிய பிரச்சனை தான் வேர்க்குரு. இது குடுக்கும் கொடைச்சல் வேறு எந்த சரும கோளாறுகளினாலும் தர இயலாது. வியர்வை உடலிலேயே தங்கிவிடுவதனாலும், உடல் சூட்டினாலும் தான் வேர்க்குரு ஏற்படுகிறது. சரியாக குளிப்பதும், குளிர்ந்த உணவுகள் எடுத்துக்கொள்வதன் மூலமாகவும் வேர்க்குரு ஏற்படாது பார்த்துக்கொள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published.