shadow

டிரம்ப் மனைவிக்கு மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகுசிலை

உலகப்புகழ் நியூயார்க்கில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்பிற்கு மெழுகுச்சிலை வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் முக்கிய துறைகளில் உள்ள பிரபலங்களுக்கு மெழுகினால் ஆன ஆள் உயர சிலை வைக்கப்பட்டு வருவது வழக்கம்

அந்த வரிசையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் அவர்களின் மெழுகுச்சிலை வைக்கப்பட்டுள்ளது. மெலானியாவின் சிலையை 20 கலைஞர்கள் 4 மாதங்கள் முயற்சி செய்து வடிவமைத்ததாகவும், இந்த சிலை டொனால்ட் டிரம்பின் மெழுகுச்சிலை அருகே வைக்கப்பட்டுள்ளதாகவும் அருங்காட்சியகத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மெலானியாவின் உண்மையான உருவம் போன்று அமைக்கப்பட்டுள்ள மெழுகுச்சிலையை அனைவரும் கண்டு மகிழ்கின்றனர்

Leave a Reply