தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து தனியார் நர்சரி, மெட்ரிக், சிபிஎஸ்இ ,ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

அடுத்த கல்வி ஆண்டுக்கான கல்வி கட்டணங்களை தனியார் பள்ளிகள் வசூலிக்க துவங்கி உள்ளன.

தனியார் பள்ளிகளில் 75 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசின் உத்தரவை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.