shadow

இந்தியா-பாகிஸ்தான் போர் மூளுமா? இருநாட்டு எல்லைகளில் பதற்றம்

1காஷ்மீரில் உள்ள உரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் சமீபத்தில் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தீவிரவாத முகாம்களை அழித்துள்ளதால் இருநாட்டின் எல்லைகளில் பதட்டம் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளதால் எல்லையில் உள்ள இருநாட்டு மக்களும் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் மாறி வருகின்றனர்.\

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அந்த நாட்டு ராணுவ உயரதிகாரிகளுடன் பல்வேறு கட்டமாக ஆலோசனை நடத்தி வருவதாகவும், இந்தியா மீண்டும் தாக்குதல் நடத்தினால் எப்படி பதிலடி கொடுப்பது என்பது குறித்த விவாதம் நடந்து வருவதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேபோல் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப், அணுஆயுதங்களை அலமாரியில் வைத்திருப்பதற்காக நாங்கள் தயாரிக்கவில்லை. எங்கள் மீது போரை திணித்தால் இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இருநாட்டு எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து 6 மைல் தொலைவுக்கு உட்பட்ட அனைத்து கிராம மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதேபோல் இந்தியாவிலும் போர் பதற்றம் காரணமாக எல்லையோர கிராமங்களில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். சாலைகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

பஞ்சாபில் சண்டிகர், அம்பாலா, பதிண்டா, ஆதம்பூர், ஹல்வாரா ஆகிய இடங்களில் உள்ள விமானப்படைத் தளங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. ராணுவ தளங்கள் மட்டுமன்றி பக்ரா அணை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

காஷ்மீர், பஞ்சாப் மட்டுமன்றி ராஜஸ் தான், குஜராத் எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சர்வதேச எல்லை யில் பெருமளவில் குவிக்கப்பட்டுள் ளனர்.

காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் உள்ள ராணுவ முகாம்கள், விமானப் படைத் தளங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள கடற்படைத் தளங்களும் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply