மகாராஷ்டிராவில் இருந்து நடந்தே வந்த 7 பேருக்கு கலெக்டர் உதவி

மகாராஷ்டிராவில் இருந்து நடந்தே வந்த 7 பேருக்கு கலெக்டர் உதவி

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பல்வேறு மாநிலங்களில் இருந்து மாநிலம் விட்டு மாநிலம் பொது மக்கள் நூற்றுக்கணக்கில் ஆயிரக் கணக்கில் நடந்தே செல்கின்றனர்

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வேலை நிமித்தம் சென்று திருச்சியை சேர்ந்த 7 பேர் அங்கிருந்து நடந்தே வந்துள்ளனர்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சோலாப்பூர் என்ற பகுதியில் இருந்து நடந்தே வந்த அந்த ஏழு பேருக்கு உணவு குடிநீர் மற்றும் தேவையானவற்றை வழங்கி அவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு மாவட்ட ஆட்சியர் சிவராஜ் அவர்கள் ஏற்பாடு செய்வதார்

இதனையடுத்து அந்த 7 பேரும் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply