shadow

தல தரிசனத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள்

அஜித் நடித்து வரும் ‘தல 57’ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இன்னும் ஒருசில நாட்களின் படப்பிடிப்பே உள்ள நிலையில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வமான ஃபர்ஸ்ட்லுக் இன்னும் வெளிவரவில்லை

இதனால் தல ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இயக்குனர் சிறுத்தை சிவா உடனடியாக ‘தல 57’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் இன்று காலை முதல் #WaitingForThalaDharisanam என்ற ஹேஷ்டேக்கை டுவிட்டரில் உருவாக்கி அதை சில நிமிடங்களில் டிரண்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.

ரசிகர்களின் பெரும் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் விரைவில் ‘தல 57’ படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட்லுக் வெளிவரவுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply