இந்திய கிரிக்கெட் அணியில் பல சாதனைகள் செய்த தமிழக வீரர் வி.வி.எஸ்.லட்சுமணன்  அவர்களின் வங்கி கணக்கில் ரூ.11 லட்சம் மர்ம நபர் ஒருவரால் ஆன்லைனில் மோசடி செய்யப்பட்டுள்ளது.  அவரை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வி.வி.எஸ்.லட்சுமணின் வங்கி கணக்கில் இருந்து கொல்கத்தாவில் உள்ள ஒரு நபர் ரூ.11 லட்சத்திற்கு பொருட்கள் வாங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வி.வி.எஸ்.லட்சுமணன் இதுகுறித்து காவல்துறையினர்களிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த செய்த போலீசார் கொல்கத்தா நபரை கைது செய்தனர். அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில் அவர் மேலும் இதுபோல் பல மோசடிகள் செய்து உள்ளது தெரிய வந்துள்ளது.

Leave a Reply