இயக்குனர் கனவுடன் சென்னை வரும் இளைஞர்களின் கனவுகளை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கும் படம்தான் ‘உ’

சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த தம்பி ராமைய்யா, நடுத்தர வயதை அடைந்தபோதும் வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் கஷ்டப்படுகிறார். இந்நிலையில் ஒரு நிறுவனம் தம்பி ராமைய்யா கூறி கதையை கேட்டு, அவரையே இயக்குனராக ஒப்பந்தம் செய்து, உடனடியாக திரைக்கதையை தயார் செய்யுமாறு கூறுகின்றனர். இந்நிலையில் தான் தங்கியிருக்கும் அறைக்கு வரும் தம்பி ராமைய்யா, உடன் தங்கியிருக்கும் மூன்று இளைஞர்களை தனக்கு உதவியாளர்களாக சேரும்படி கேட்டுக்கொள்கிறார். ஆனால் அவர்களோ, தம்பி ராமைய்யாவை கேலி செய்து உன்னால் எந்த ஜென்மத்திலும் இயக்குனராக முடியாது என்று கூறி வெறுப்பேற்றுகின்றனர். அவர்களிடம் சவால்விட்டு வரும் தம்பி ராமையா, போதையுடன் ரோட்டில் மயங்கிக்கிடந்த போது, போலீசார் அவரை சந்தேகக்கேஸில் பிடித்து செல்கின்றனர்.,

சிறையில் சினிமா கனவுகளுடன் இருக்கும் நான்கு இளைஞர்களை சந்திக்கிறார் தம்பி ராமைய்யா. அவர்களை உதவி இயக்குனர்களாக சேர்த்துக்கொண்டு படத்தை இயக்க முயற்சி செய்கிறார். இதற்கிடையில் இவரை கேலி செய்த மூன்று முன்னாள் நண்பர்கள், இவர் இயக்கும் படத்திற்கு பல இடையூறுகள் கொடுக்கின்றனர். அவற்றையெல்லாம் சந்தித்து தம்பி ராமைய்யா வெற்றி பெற்றாரா என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் ஆஷிக்.

படம் முழுக்க முழுக்க தம்பி ராமைய்யாவை நம்பியே எடுக்கப்பட்டுள்ளது. அவரும் ஏமாற்றவில்லை. மிக அழகான நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவரிடம் உதவியாளர்களாக சேரும் நான்கு இளைஞர்களின் நகைச்சுவை நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது. பாடல்கள் மற்றும் பின்னணி இசை வெகுசுமார்.

‘உ’ நல்ல தொடக்கம்தான்.

Leave a Reply