முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர்களை விடுதலை செய்ய அதிரடி நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிமன்ர வி.ஆர்.கிருஷ்ணய்யர் பாராட்டியுள்ளார்.

முதல்வருக்கு நேற்று எழுதிய கடிதம் ஒன்றில் ‘ இந்தியாவில் மரண தண்டனையை ஒழிப்பதற்காக தாம் தொடர்ந்து போராடி வருவதாகவும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 20 வருடங்களுக்கு மேல் சிறையில் இருக்கும் நளினி, முருகன் உள்பட 7 பேர்களை விடுதலை செய்யும் துணிச்சலான அறிவிப்புக்காக அவரை தான் மனதார பாராட்டுவதாகவும் கிருஷ்ணய்யர் எழுதியுள்ளார்.

முதல்வரின் முயற்சி வெற்றி பெற தான் வாழ்த்துவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். முதல்வரின் முயற்சிகளுக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்திருப்பதை அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply