ஜியோ போட்டியை சமாளிக்க வோடோபோன் அதிரடி அறிவிப்பு1

தொலைத்தொடர்பு துறையினர் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை வாரி வழங்கி வரும் நிலையில் வோடோபோன் தனது வாடிக்கையாளர்களுக்கு தற்போது புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

இதன்படி ரூ.558க்கு ரீசார்ஜ் செய்தால் 56 நாட்களுக்கு அன்லிமிடெட் போன் கால்ஸ், தினமும் 3ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்.எம்.எஸ்-கள் வழங்கப்படும் என்றும் இந்த சலுகைகள் ரூ.398க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ரூ.129க்கு ரீசார்ஜ் செய்தால் 21 நாட்களுக்கு நாள்தோறும் 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்ஸ், ரூ.19க்கு ரீசார்ஜ் செய்தால் 2 நாட்களுக்கு அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் நாள் ஒன்றுக்கு 200 எம்பி டேட்டா வீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply