விவேக் முதல்முறையாக இயக்கவிருந்த திரைப்படம்: புதிய தகவல்

அஜித் நடித்த விஸ்வாசம் உள்பட பல படங்களை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் தங்களது தயாரிப்பில் விவேக் ஒரு திரைப்படத்தை இயக்கவிருந்ததாக கூறியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

பத்மஸ்ரீ திரு.விவேக்கின் மறைவு நாம் அனைவரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் ஒரு நல்ல மனிதர், சமூக ஆர்வலர் நகைச்சுவையாளர், பகுத்தறிவாளர், மட்டுமல்லாது எதிர்கால ஒரு சிறந்த இயக்குநரையும் நாம் இழந்துவிட்டோம். ஆம், கடந்த ஒரு மாத காலமாக எங்கள் சத்யஜோதி நிறுவனத்திற்கு வந்து எங்களது தயாரிப்பில் தான் அவருடைய முதல் படத்தை இயக்க வேண்டும் என்று விருப்பப்பட்டு, பலமுறை ஆலோசனைகளிலும் ஈடுபட்டு, படத்திற்கான முன்னேற்பாடுகளையும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து கொண்டிருக்கும் தருவாயில், அவர் மறைந்த செய்தி எங்களை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவர் ஒரு சிறந்த இயக்குனர் என்ற மற்றொரு பரிணாமத்தை நம்மிடையே காண்பிக்கும் முன்பே இறைவனடி சேர்ந்தது நமது துரதிர்ஷ்டமே. அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளது. இதனை அடுத்து ஒரு நல்ல நகைச்சுவை நடிகரை மட்டுமின்றி ஒரு சிறந்த இயக்குனரையும் நாம் இழந்து விட்டோம் என்பது தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published.