‘திருட்டுப்பயலே 2’ படத்தில் இணைந்த இரண்டு காமெடி நடிகர்கள்

‘திருட்டுப்பயலே 2’ படத்தில் இணைந்த இரண்டு காமெடி நடிகர்கள்

thiruttu-payalee2கடந்த 2006ஆம் ஆண்டு சுசிகணேசன் இயக்கத்தில் ஜீவன், அப்பாஸ், மாளவிகா நடித்த ‘திருட்டு பயலே’ படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனமே தயாரிக்க முன்வந்துள்ளது.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் பாபிசிம்ஹா மற்றும் பிரச்சன்னா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்தின் நாயகியாக நேற்று அமலாபால் ஒப்பந்தமாகியுள்ளார்./

இந்நிலையில் சற்றும் முன் வெளிவந்த செய்தியின்படி இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் விவேக் மற்றும் ரோபோ சங்கர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். நாளை முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக இயக்குனர் சுசிகணேசன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply