shadow

தல அஜித்தின் ‘விவேகம்’ படத்தின் டிராக்லிஸ்ட்

அஜித் நடித்து முடித்துள்ள ‘விவேகம்’ திரைப்படம் வரும் 24ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்கள் வரும் 7ஆம் தேதி திங்கட்கிழமை வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிராக்லிஸ்ட் தற்போது வெளிவந்துள்ளது

1. நெவர் எவர் கிப் அப்: ‘விவேகம்’ படத்தின் ஆல்பத்தில் முதல் பாடலாக இருக்கும் இந்த பாடலின் முதல் வரி ஏற்கனவே நாம் டீசரில் அஜித் பேசியதை கேட்டதுதான். அனிருத் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த ராஜகுமாரி ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்.

2. காதலாட: அனிருத்தின் பக்கா மெலடி ரொமான்ஸ் பாடலான இந்த பாடலை அனிருத், சாஷா திருபதி, நம்ரிதா மற்றும் பூஜா ஆகியோர் பாடியுள்ளனர்.

3. ‘வெறியேற’ என்று தொடங்கும் இந்த மூன்றாவது பாடலை மானசி மற்றும் பூர்வி கெளதிஷ் பாடியுள்ளனர்.

4. காதலாட: மீண்டும் ஒருமுறை ‘விவேகம்’ ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடலை பிரதீப்குமார் மற்றும் ஷாஷா திருபதி பாடியுள்ளனர்.

5. ‘தல விடுதலை’ என்ற பாடலை அனிருத் மற்றும் ஹரிஷ் சுவாமிநாதன் பாடியுள்ளனர்.

6. மேலும் ‘சர்வைவா’ பாடல் அனிருத் மற்றும் யோகி பி, மாலி மனோஜ் ஆகியோர் பாடியுள்ளனர்.

Leave a Reply