shadow

விவேகம்’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதி மற்றும் ரன்னிங் டைம்

தல அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தின் படப்பிடிப்பு அனேகமாக அடுத்த வாரம் முடிந்து விரைவில் சென்னை திரும்புவார்கள் என்ற நிலையில் நேற்று இயக்குனர் சிறுத்தை சிவா இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இதன்படி இந்த படத்தின் டீசர் மே மாதம் 18ஆம் தேதி வியாழக்கிழமை வெளியாகவுள்ளது. இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.

மேலும் இந்த படத்தின் டீசர் 64 நொடிகள் உள்ளதாகவும், இதில் முழுக்க முழுக்க அஜித் காட்சிகளும் தீம் மியூசிக்கும் மட்டுமே இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

Leave a Reply