அஜித்தின் விவேகம்: திரைவிமர்சனம்

அஜித்தின் விவேகம்: திரைவிமர்சனம்

அஜித்தின் ஹாலிவுட் படம் என்று விளம்பரம் செய்யப்பட்டு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘விவேகம்’ ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்பதை தற்போது பார்ப்போம்

சர்வதேச தீவிரவாதிகளின் குரூப் ஒன்று இந்தியாவில் செயற்கை நிலநடுக்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் லாபம் அடைய திட்டமிடுகிறது. செயற்கை பூகம்பம் ஏற்படுத்த அணு ஆயுதம் ஒன்றை டெல்லி அருகே பூமியில் புதைக்கப்பட்டுள்ளது. 40 மணி நேரத்தில் அது வெடிக்கும் என்ற நிலையில் அதன் சாட்டிலைட் கோட் நம்பரை அதற்குள் கண்டுபிடித்து செயலிழக்க வைக்கும் பொறுப்பு அஜித்தின் குழுவுக்கு கொடுக்கப்படுகிறது. 40 மணி நேரத்தில் அஜித் அந்த பணியை செய்து முடித்தாரா? அணு ஆயுதத்தை புதைத்த கும்பலுக்கு தலைவன் யார்? என்பதுதான் மீதிக்கதை

அஜித் ஆக்சன் காட்சிகளுக்காக எந்த அளவிற்கு உழைத்திருக்கின்றார் என்பது காட்சிகளில் இருந்து புரிகிறது. ஆனால் அதே நேரத்தில் அவரது நடிப்புக்கு தீனி கொடுக்கும் வகையில் திரைக்கதை இல்லை. முழுக்க முழுக்க ஜேம்ஸ்பாண்ட் பாணியில் ஒரு அஜித்தை மட்டுமே இந்த படத்தில் பார்க்கலாம்

காஜல் அகர்வாலுக்கு இந்த படம் நிச்சயம் ஒரு மாறுதலான கேரக்டர்தான். கிளாமர் இல்லாமல் குடும்பபாங்கான கேரக்டரில் அதே நேரத்தில் கடைசி அரை மணி நேரம் அஜித்தையே காப்பாற்றும் அழுத்தமான கேரக்டர்

அக்சராஹாசனுக்கு ஏமாற்றம் தரும் கேரக்டர். முதல் பத்து நிமிடம் அவரது கேரக்டருக்கு அதிக பில்டப் கொடுக்கப்பட்டு பின்னர் திடீரென அவரது கேரக்டரை சாகடிப்பது பெரும் குறையாக உள்ளது.

விவேக் ஓபராய் இந்த படத்திற்கு தேவையா? என்பது போல் உள்ளது. அஜித்தை அவர் திட்டுகிறாரா? புகழ்கிறாரா? என்று படம் முடிந்த பின்னரும் சந்தேகம் தீரவில்லை

ஒளிப்பதிவு இயக்குனர் வெற்றி, கலை இயக்குனர் மிலன், ஸ்டண்ட் இயக்குனர்கள் கணேஷ், காலோயான், ஆகியோர்களுக்கு சரியான வேலை. அனைவரும் தங்களது அதிகபட்ச உழைப்பை கொட்டியிருக்கின்றார்கள்.

அனிருத்தின் இசை ஆங்காங்கே இரைச்சலாக இருந்தாலும் பாடல்கள் சூப்பர். கிளைமாக்ஸ் தவிர பின்னணி இசையும் சூப்பர்

இயக்குனர் சிவா டெக்னாலஜி ரீதியாக அனைவரையும் நன்றாக வேலை வாங்கியுள்ளார். ஆனால் திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். சர்வதேச தீவிரவாதிகள் குறித்த காட்சிகள் இன்னும் கொஞ்சம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். விவேக் ஓபராய் மட்டுமே வில்லனாக காட்டப்படுகிறார்.

மொத்தத்தில் அஜித் ரசிகர்களுக்கு புல்மீல்ஸ் போல் விருந்தளிக்கும் இந்த படம் மற்ற ரசிகர்களுக்கு பசியை போக்கும் ஒரு சாதாரண உணவுதான்.

ஜெயிப்பதற்கு முன் வெற்றியை கொண்டாடுவதும், ஜெயித்த பின்னர் ஆட்டம் போடுவதும் கூடாது போன்ற பஞ்ச் டயலாக்குகள் ரசிக்க வைக்கும் அளவுக்கு உள்ளது.

விவேகம்’ ஹாலிவுட் ரேஞ்சில் ஒரு புதிய முயற்சி

மதிப்பெண்கள் 3/5

Leave a Reply