shadow

‘விவேகம்’ படத்தின் வியாபாரத்தை பார்த்து வாயை பிளந்த பாலிவுட்

தல அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் இந்த படத்தின் வியாபாரத்தை தயாரிப்பு நிறுவனம் தொடங்கிவிட்டது.

முதல்கட்டமாக இந்த படத்தின் இந்தி டப்பிங் உரிமை மற்றும் சாட்டிலைட் உரிமையை மும்பையை சேர்ந்த மனிஷ் ஷா அவர்களின் ‘கோல்ட் மைன் டெலி பிலிம்ஸ்’ என்ற நிறுவனம் பெற்றுள்ளது. மனிஷ் ஷா அவர்கள் ‘விவேகம்’ படத்திற்காக மிகப்பெரிய தொகையை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொகை அமிர்கான், ஷாருக்கான் படங்களின் சாட்டிலைட் உரிமையை நெருங்கிவிட்டதாக கூறப்படுவதால் பாலிவுட் அதிர்ச்சி அடைந்துள்ளதாம்

ஏற்கனவே பாகுபலி 2′ படத்தின் வெற்றியால் பாலிவுட்டின் அதிர்ச்சி அடைந்தும் அதை வெளிக்காட்டாமல் இருக்கும் நிலையில் தற்போது ‘விவேகம்’ படத்தின் வியாபாரமும் பெரிய அளவில் இருப்பதால் இனி இந்தியாவில் தென்னிந்திய படங்களின் ஆதிக்கம்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது

Leave a Reply