ராட்சசன் 2 படமா?

நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகியது. இந்த நிலையில் இன்று அவர் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தில் டைட்டிலை விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார்

இந்த படத்திற்கு மோகன்தாஸ் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் வீடியோவிலிருந்து இந்த படம் மிக கொடூரமாக கொலை செய்யும் காட்சிகள் இருப்பதால் இந்த படம் ராட்சஸன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

முரளி கார்த்திக் இயக்கும் இந்த படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கவுள்ளார். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையில் விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவில் கிருபாகரன் புருஷோத்தமன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply