விஷால், அஞ்சலி, வரலட்சுமி நடித்த ‘மதகஜராஜா படத்தை சுந்தர் சி இயக்கி முடித்து ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால் படத்தை வெளியிட கோர்ட் தடை உத்தரவு பிறப்பித்து இருப்பதால் வெளியிட முடியவில்லை. இப்போது பிரச்சனைகள் அனைத்து கோர்ட்டுக்கு வெளியே பேசு முடித்து ஒரு தீர்வுக்கு வந்துவிட்டதாகவும், படத்தை மார்ச் 7ஆம் வெளியிட இருப்பதாகவும் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஜெமினி பிலிம் சர்க்யுட் தெரிவித்துள்ளது.

கலகலப்பு படத்திற்கு பிறகு சுந்தர் சி இயக்கிய இந்த படம் பிரச்சனைகள் காரணமாக முடங்கியதால், சுந்தர் அதையடுத்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தை முடித்துவிட்டு அதை அடுத்து தற்போது அரண்மனை என்ற படத்தையும் 50% படப்பிடிப்பை முடித்துவிட்டார். பாண்டியநாடு ரிலீஸுக்கு முன்னர் இந்த படத்தைத்தான் விஷால் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தார் விஷால். ஆனால் தற்போது பாண்டியநாடு ரிலீஸ் ஆகி வெற்றிபெற்றுவிட்டதால், இந்த படமும் நல்ல கலெக்ஷனை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply