shadow

மீண்டும் எம்.ஜி.ஆர், மீண்டும் 3 வேடங்கள்: இந்த படமாவது வெளிவருமா விஷாலுக்கு?

நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத்தலைவருமான விஷால் தற்போது ‘துப்பறிவாளன், ‘இரும்புத்திரை’ மற்றும் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் அபினேஷ் இளங்கோவனின் அபி & அபி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் நடிகர் விஷால் முன்று வேடங்களில் நடிக்கின்றார். இந்த படத்திற்கு “நாளை நமதே” என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் பொன்ராம் அவர்களிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய வெங்கடேசன் என்பவர் இந்த படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். மேலும் காமெடி கேரக்டரில் சதீஷ் நடிக்கவுள்ளார். விஷால் ஏற்கனவே எம்ஜிஆர் என்னும் ‘மதகஜராஜா’ என்ற படத்தில் மூன்று வேடங்களில் நடித்தார். ஆனால் அந்த படம் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply